முருகன் App
திருமலை முருகன் பள்ளு
பெரியவன் கவிராயர்
நாட்டு வளம்9 / 57
1காப்பு2கடவுள் வணக்கம்3அவையடக்கம்4மூத்த பள்ளி வரவு5இளைய பள்ளி வரவு6பள்ளன் வரவு7பள்ளன் தன் பெருமை கூறுதல்8பள்ளியர் குடிப்பிறப்புக் கூறுதல்9நாட்டு வளம்10குயில்11பள்ளியர் கும்மி யடித்தல்12தெய்வம் போற்றுதல்13மழைக் குறி14பள்ளர் திரண்டு வருதல்15மழை வெள்ள வரவு16ஐந்திணை - குறிஞ்சி17பாலை18முல்லை19மருதம்20நெய்தல்21ஆற்று வெள்ளம்22மீன் வகை23பொருள் வகை24பண்ணைக்காரன் வரவு25பள்ளர் வணங்குதல்26பண்ணைக்காரன் செயல்27பண்ணைக்காரன் கூறுதல்28மூத்தபள்ளி முறையிடுதல்29இளைய பள்ளியைக் கேட்டல்30அவள் கூறுதல்31பள்ளி கூறுதல்32பண்ணைக்காரன் கோபித்தல்33பள்ளன் வெளிவருதல்34பள்ளன் கூறுதல்35பண்ணைக்காரன் எண்ணுதல்36பள்ளனைத் குட்டையிலடித்தல்37பள்ளன் கூறுதல்38இளைய பள்ளி வருதல்39பள்ளனைக் கண்டு வருந்தல்40பள்ளன் ஆறுதல் கூறுதல்41மூத்த பள்ளி வருந்திக் கூறுதல்42சோறு தருதல்43பள்ளன் கூறுதல்44மூத்த பள்ளி பண்ணைக்காரனை வேண்டல்45பள்ளனை விடுவித்தல்46பள்ளன் கூறுதல்47நாள் பார்த்தல்48நற்சகுனமாதல்49பள்ளர் நாற்றுப் பாவச் செல்லுதல்50நாற்று வளர்தல்51நாற்று பறித்தல்52நடுகை53பயிர் விளைதல்54அறுவடை செய்தல்55மூத்த பள்ளி சண்டையிடல்56பள்ளியர் ஏசல்57வாழ்த்து
திருமலை முருகன் பள்ளு · பெரியவன் கவிராயர்

நாட்டு வளம்

15கலிப்பா✓
துன்னுமலை நாடுமந்தச் சோணாடுங் கீழ்படவே
பன்னுதமி ழாலுயர்ந்த பாண்டிவள நன்னாட்டில்
நன்னருறுந் தென்னாரி நாடும்வட வாரிநன்னா(டு)
என்னும் இருநாட் டினியவளஞ் சொல்வேனே.
16மூத்த பள்ளி✓
சிந்து
மலரி லாரளி இந்துளம் பாடும்
மடையி டங்கணி வந்துளம் ஆடும்
சலச வாவியிற் செங்கயல் பாயும்
தரள மீன்றவெண் சங்கயல் மேயும்
குலமின் னார்மழை பெய்யெனப் பெய்யும்
குடங்கை ஏற்பவர் செய்யெனச் செய்யும்
புலவர் போற்றுந் திருமலைச் சேவகன்
புகழ்வட வாரி நாடெங்கள் நாடே.
17இளைய பள்ளி✓
வளருங் காவில் முகில்தொகை ஏறும்-பொன்
மாட மெங்கும் அகிற்புகை நாறும்
குளிரும் மஞ்ஞையுங் கொண்டலுங் காக்கும்-செங்
கோல்முறை மன்னர் மண்டலங் காக்கும்
இளமின் னார்பொன் னரங்கில் நடிக்கும்-முத்
தேந்தி வாவித் தரங்கம் வெடிக்கும்
அளியுலாங் கொன்றை சூடுங் குற்றாலத்-தென்
ஐயன்தென் னாரி நாடெங்கள் நாடே.
18மூத்த பள்ளி✓
களம ராலை கொழித்துத் தறிக்கும்
கழைமுத் தெங்கும் வெடித்துத் தெறிக்கும்
விளரி நாதம் பிரமரம் பாடும்-கை
வில்லின் கல்விச் சிரமரம் பாடும்
வளர்கு மாரர்கள் கல்வி படிக்கும்
மனையில் ஆரணச் செல்வி நடிக்கும்
அளவி லாண்மைத் திருமலை முத்தையன்
அருள்வட வாரி நாடெங்கள் நாடே.
19இளைய பள்ளி✓
அமுதம் போலமின் னார்வள்ளை பாடும்
அதுகண் டேகுயிற் பிள்ளைகள் கோடும்
குமுத மாமுகை பாம்பென ஆடும்
குருகும் பேடுந்தண் சேம்பினி லோடும்
கமநி லாநித் திலங்கைக்குக் காட்டும்
கதிர்நி லாவின் ணெலாம்முக்கிக் காட்டும்
உமைம னாளன்ஞற் றாலநன் னாயகன்
ஓங்குந்தென் னாரி நாடெங்கள் நாடே.