முருகன் App
திருமலை முருகன் பள்ளு
பெரியவன் கவிராயர்
பள்ளன் கூறுதல்43 / 57
1காப்பு2கடவுள் வணக்கம்3அவையடக்கம்4மூத்த பள்ளி வரவு5இளைய பள்ளி வரவு6பள்ளன் வரவு7பள்ளன் தன் பெருமை கூறுதல்8பள்ளியர் குடிப்பிறப்புக் கூறுதல்9நாட்டு வளம்10குயில்11பள்ளியர் கும்மி யடித்தல்12தெய்வம் போற்றுதல்13மழைக் குறி14பள்ளர் திரண்டு வருதல்15மழை வெள்ள வரவு16ஐந்திணை - குறிஞ்சி17பாலை18முல்லை19மருதம்20நெய்தல்21ஆற்று வெள்ளம்22மீன் வகை23பொருள் வகை24பண்ணைக்காரன் வரவு25பள்ளர் வணங்குதல்26பண்ணைக்காரன் செயல்27பண்ணைக்காரன் கூறுதல்28மூத்தபள்ளி முறையிடுதல்29இளைய பள்ளியைக் கேட்டல்30அவள் கூறுதல்31பள்ளி கூறுதல்32பண்ணைக்காரன் கோபித்தல்33பள்ளன் வெளிவருதல்34பள்ளன் கூறுதல்35பண்ணைக்காரன் எண்ணுதல்36பள்ளனைத் குட்டையிலடித்தல்37பள்ளன் கூறுதல்38இளைய பள்ளி வருதல்39பள்ளனைக் கண்டு வருந்தல்40பள்ளன் ஆறுதல் கூறுதல்41மூத்த பள்ளி வருந்திக் கூறுதல்42சோறு தருதல்43பள்ளன் கூறுதல்44மூத்த பள்ளி பண்ணைக்காரனை வேண்டல்45பள்ளனை விடுவித்தல்46பள்ளன் கூறுதல்47நாள் பார்த்தல்48நற்சகுனமாதல்49பள்ளர் நாற்றுப் பாவச் செல்லுதல்50நாற்று வளர்தல்51நாற்று பறித்தல்52நடுகை53பயிர் விளைதல்54அறுவடை செய்தல்55மூத்த பள்ளி சண்டையிடல்56பள்ளியர் ஏசல்57வாழ்த்து
திருமலை முருகன் பள்ளு · பெரியவன் கவிராயர்

பள்ளன் கூறுதல்

121✓
தின்னவே சொன்ன பண்பையிற் பள்ளி
செருப்பு காலிற் கடித்தது போல
நன்னகர்ப் பள்ளி சொல்லலெண் ணாதந்த
நாயை நீஎதி ராக்குவ தேதோ
முன்னமே கொண்டு தந்தாய் அவளை
மூப்பி வாய்ப்பெனக் கொண்டு திரிந்தேன்
இன்னம் வேணுமென் றால்வேணும் உன்கருத்
தெப்படி யப்படி என்க ருத்தே.
122✓
கெட்டதிற் போனது போகட்டும் நீஇனிக்
கீறுங் கீற்றொரு நாளுங் கடவேன்
கற்றது நீசொல்லிப் பண்ணையிற் காரியம்
காலஞ் செய்வது கோலஞ்செய் யாதே
மற்றதப் பண்ணையான் சண்ணைக் கடாவுக்கென்
வார்த்தை ஏறாது நீசென்று பேசிப்
பற்றிய தொழுமரக் காவலை நீபிணைப்
பட்டுக் கொண்டு விடுவிப்பாய் பள்ளி.
123✓
இணங்க வேநங் கறுப்பன் தனக்கும்
இடும்ப னுக்கும்நன் றாய்நேர்ந்து கொண்டு
வணங்கிங் காரியம் கைப்பல னாம்உன்
மனதின் வண்ணம் நடந்துகொள் வேன்நான்
பணங்கண் டாற்சொன்ன சொற்கட வான்அந்தப்
பண்ணை யானுக்குப் பத்தஞ்சு சொல்லிக்
குணங்கொண் டேஎன்னை ரட்சிகண் டாய்உன்னைக்
கும்பிட் டேன்சரண் குடும்பியச்சி யாரே.
124கலித்துறை✓
சைவ சிகாமணி கந்த சுவாமிபொற் றாள்எனக்குக்
கைவச மாகத் தருஞ்சே வகன்குந்தி காதலராம்
ஐவர் சகாயன் மருகன் திருமலை ஆறுமுகத்
தெய்வ சகாயமுண் டேவரு மோகொடுந் தீவினையே.