முருகன் App
திருமலை முருகன் பள்ளு
பெரியவன் கவிராயர்
மூத்தபள்ளி முறையிடுதல்28 / 57
1காப்பு2கடவுள் வணக்கம்3அவையடக்கம்4மூத்த பள்ளி வரவு5இளைய பள்ளி வரவு6பள்ளன் வரவு7பள்ளன் தன் பெருமை கூறுதல்8பள்ளியர் குடிப்பிறப்புக் கூறுதல்9நாட்டு வளம்10குயில்11பள்ளியர் கும்மி யடித்தல்12தெய்வம் போற்றுதல்13மழைக் குறி14பள்ளர் திரண்டு வருதல்15மழை வெள்ள வரவு16ஐந்திணை - குறிஞ்சி17பாலை18முல்லை19மருதம்20நெய்தல்21ஆற்று வெள்ளம்22மீன் வகை23பொருள் வகை24பண்ணைக்காரன் வரவு25பள்ளர் வணங்குதல்26பண்ணைக்காரன் செயல்27பண்ணைக்காரன் கூறுதல்28மூத்தபள்ளி முறையிடுதல்29இளைய பள்ளியைக் கேட்டல்30அவள் கூறுதல்31பள்ளி கூறுதல்32பண்ணைக்காரன் கோபித்தல்33பள்ளன் வெளிவருதல்34பள்ளன் கூறுதல்35பண்ணைக்காரன் எண்ணுதல்36பள்ளனைத் குட்டையிலடித்தல்37பள்ளன் கூறுதல்38இளைய பள்ளி வருதல்39பள்ளனைக் கண்டு வருந்தல்40பள்ளன் ஆறுதல் கூறுதல்41மூத்த பள்ளி வருந்திக் கூறுதல்42சோறு தருதல்43பள்ளன் கூறுதல்44மூத்த பள்ளி பண்ணைக்காரனை வேண்டல்45பள்ளனை விடுவித்தல்46பள்ளன் கூறுதல்47நாள் பார்த்தல்48நற்சகுனமாதல்49பள்ளர் நாற்றுப் பாவச் செல்லுதல்50நாற்று வளர்தல்51நாற்று பறித்தல்52நடுகை53பயிர் விளைதல்54அறுவடை செய்தல்55மூத்த பள்ளி சண்டையிடல்56பள்ளியர் ஏசல்57வாழ்த்து
திருமலை முருகன் பள்ளு · பெரியவன் கவிராயர்

மூத்தபள்ளி முறையிடுதல்

78சிந்து✓
எனைவந்து கேட்டீர் - நம்புவி
தனிவிந்த நாட்டி - ரலவோ
எள்ளுமப் படியே - நீர்தரும்
பள்ளுமப் படியே
மனமஞ்சி நடவான் - எவருக்கும்
வினயஞ்செய் திடுவான் - பணங்கொண்டு
வசியங்கள் பிடிப்பான் - பொல்லாச்
சதியன்கள் குடிப்பான்
குனிசிலை வணக்கம் - எனஇவன்
இனிமைசெய் யிணக்கம் - உறவென்று
குறித்தீர் முறையோ - நாள்தொறும்
பொறுத்தீர் பொறையோ
தினமுஞ்செய் மதமே - அவன் செய்தீ
மனமுஞ்சம் மதமே - உமக்கெனிற்
சீறுவ தெனையோ - விடுமென்ன
கூறுவ தினியே.
79✓
வெறுப்புக் கண்டேங்கி - மாமிக்கோர்
கறுப்புக் கண்டாங்கி - கொடுத்தவள்
விருந்திட்ட கறிசோ(று) - உண்டவள்
மருந்திட்ட தறியான்
சிறப்புடன் நாளும் - பால்மெத்தக்
கறப்பினும் வாழும் - வீட்டினைத்
தினம் பொறுப் பாரோ - ஆங்கது
தனைச் செறுப் பாரோ
புறப்பட்டுத் திரிந்தான் - விதைநெல்லைத்
திறப்பிட்டுச் சொரிந்தான் - என்னுடன்
போட்டிக்குத் தொடுத்தான் - மச்சினி
கோட்டிக்குக் கொடுத்தான்
குறப்பையல் பாம்பன் - உறவுகொண்(டு)
அறப்பயில் வீம்பன் - அவனொடுங்
குரண்டைகள் பிடிப்பான் கேளா
முரண்டன்காண் ஆண்டே.
80✓
துடுக்குறு பேச்சோ - துப்பட்டி
இடுக்குகை வீச்சோ - அவகுணச்
சுயபுத்தி மிண்டோ - ஒரு சற்றும்
பயபத்தி யுண்டோ
அடுக்கவும் ஆமோ - அவளைக்கைப்
பிடிக்கவும் போமோ - வரிசைக்கே
ஆடியு மிட்டீர் - கனபகை
தேடியும் விட்டீர்
கடக்கவுங் கேட்டீர் - இவனையோ
அடக்கவும் மாட்டீர் - நம்பண்ணைக்
காரியம் பாரீர் - அவன்செய்யும்
வீரியந் தீர்ர்
படிற்றுரை யலவே - நாளஞ்சு
பிடித்திடுஞ் சொலவே - கேளும்போய்
பள்ளத்தி இளையாள் - சொல்லுவள்
உள்ளத்தை ஆண்டே.
81அறுசீர் விருத்தம்✓
ஓலை எழுத்தை யுழிப்பர்தலை
யோட்டி லெழுத்தினை யாரழிப்பார்
வேலை எனக்குப் பிறந்திறக்க
வேலை யுனக்குப் படைத்திடவோ
கோலை யுரத்தில் அடித்தேவல்
கொள்வார்க் கன்றிச் செய்வார்க்கென்
வாலை யொருத்தி பெற்றதிரு
மகனே காவி மலையானே.