முருகன் App
திருமலை முருகன் பள்ளு
பெரியவன் கவிராயர்
இளைய பள்ளி வரவு5 / 57
1காப்பு2கடவுள் வணக்கம்3அவையடக்கம்4மூத்த பள்ளி வரவு5இளைய பள்ளி வரவு6பள்ளன் வரவு7பள்ளன் தன் பெருமை கூறுதல்8பள்ளியர் குடிப்பிறப்புக் கூறுதல்9நாட்டு வளம்10குயில்11பள்ளியர் கும்மி யடித்தல்12தெய்வம் போற்றுதல்13மழைக் குறி14பள்ளர் திரண்டு வருதல்15மழை வெள்ள வரவு16ஐந்திணை - குறிஞ்சி17பாலை18முல்லை19மருதம்20நெய்தல்21ஆற்று வெள்ளம்22மீன் வகை23பொருள் வகை24பண்ணைக்காரன் வரவு25பள்ளர் வணங்குதல்26பண்ணைக்காரன் செயல்27பண்ணைக்காரன் கூறுதல்28மூத்தபள்ளி முறையிடுதல்29இளைய பள்ளியைக் கேட்டல்30அவள் கூறுதல்31பள்ளி கூறுதல்32பண்ணைக்காரன் கோபித்தல்33பள்ளன் வெளிவருதல்34பள்ளன் கூறுதல்35பண்ணைக்காரன் எண்ணுதல்36பள்ளனைத் குட்டையிலடித்தல்37பள்ளன் கூறுதல்38இளைய பள்ளி வருதல்39பள்ளனைக் கண்டு வருந்தல்40பள்ளன் ஆறுதல் கூறுதல்41மூத்த பள்ளி வருந்திக் கூறுதல்42சோறு தருதல்43பள்ளன் கூறுதல்44மூத்த பள்ளி பண்ணைக்காரனை வேண்டல்45பள்ளனை விடுவித்தல்46பள்ளன் கூறுதல்47நாள் பார்த்தல்48நற்சகுனமாதல்49பள்ளர் நாற்றுப் பாவச் செல்லுதல்50நாற்று வளர்தல்51நாற்று பறித்தல்52நடுகை53பயிர் விளைதல்54அறுவடை செய்தல்55மூத்த பள்ளி சண்டையிடல்56பள்ளியர் ஏசல்57வாழ்த்து
திருமலை முருகன் பள்ளு · பெரியவன் கவிராயர்

இளைய பள்ளி வரவு

7கலிப்பா✓
வள்ளிகண வன்காவி வாவித் திருமலைவாழ்
அள்ளிளைவேல் எந்தைபண்ணைக் கன்பாங் குடும்பனுக்கே
தெள்ளியமோ கங்கொடுக்குந் தென்னா ரியநாட்டுப்
பள்ளிஇளை யாளழகைப் பார்த்தாற் பசிபோமே.
8சிந்து✓
தொண்டிக்கள் ளுண்ட சண்டையுஞ் செருக்கும்
கெண்டைக் கண்துயில் கொண்டையுஞ் சொருக்கும்
துலுக்குடன் முலை குலுக்கிய நடையும்
தலைப்பணி யுடையும்
தண்டிப் பெண்களுக் கிவள்துரைப் பெண்ணெனும்
கன்றிக் கென்றிடும் மொழியிசைப் பண்ணெனும்
சமத்தி கட்கடைச் சிமிட்டுமற் றெவரையும்
அட்டிடும் மட்டும்
கண்டச் சங்கிலி வடத்தொடு குடத்தனம்
மிண்டிக் கொண்டிசைந் தசைவது மதர்த்தெழு
கதக்களிற் றிணைச்செழுங் கமுகிடைச் சேர்த்திடுங்
காட்சியும் இலங்க
எண்டிக் கும்பணி திருமலைக் காங்கெயன்
பண்பைப் பண்ணைக்கு வாய்த்திடும் பள்ளனுக்
கினிய நன்னகர்ப் பள்ளத்தியெனும்
இளையாள் தோன்றினளே.