முருகன் App
திருமலை முருகன் பள்ளு
பெரியவன் கவிராயர்
பள்ளியர் குடிப்பிறப்புக் கூறுதல்8 / 57
1காப்பு2கடவுள் வணக்கம்3அவையடக்கம்4மூத்த பள்ளி வரவு5இளைய பள்ளி வரவு6பள்ளன் வரவு7பள்ளன் தன் பெருமை கூறுதல்8பள்ளியர் குடிப்பிறப்புக் கூறுதல்9நாட்டு வளம்10குயில்11பள்ளியர் கும்மி யடித்தல்12தெய்வம் போற்றுதல்13மழைக் குறி14பள்ளர் திரண்டு வருதல்15மழை வெள்ள வரவு16ஐந்திணை - குறிஞ்சி17பாலை18முல்லை19மருதம்20நெய்தல்21ஆற்று வெள்ளம்22மீன் வகை23பொருள் வகை24பண்ணைக்காரன் வரவு25பள்ளர் வணங்குதல்26பண்ணைக்காரன் செயல்27பண்ணைக்காரன் கூறுதல்28மூத்தபள்ளி முறையிடுதல்29இளைய பள்ளியைக் கேட்டல்30அவள் கூறுதல்31பள்ளி கூறுதல்32பண்ணைக்காரன் கோபித்தல்33பள்ளன் வெளிவருதல்34பள்ளன் கூறுதல்35பண்ணைக்காரன் எண்ணுதல்36பள்ளனைத் குட்டையிலடித்தல்37பள்ளன் கூறுதல்38இளைய பள்ளி வருதல்39பள்ளனைக் கண்டு வருந்தல்40பள்ளன் ஆறுதல் கூறுதல்41மூத்த பள்ளி வருந்திக் கூறுதல்42சோறு தருதல்43பள்ளன் கூறுதல்44மூத்த பள்ளி பண்ணைக்காரனை வேண்டல்45பள்ளனை விடுவித்தல்46பள்ளன் கூறுதல்47நாள் பார்த்தல்48நற்சகுனமாதல்49பள்ளர் நாற்றுப் பாவச் செல்லுதல்50நாற்று வளர்தல்51நாற்று பறித்தல்52நடுகை53பயிர் விளைதல்54அறுவடை செய்தல்55மூத்த பள்ளி சண்டையிடல்56பள்ளியர் ஏசல்57வாழ்த்து
திருமலை முருகன் பள்ளு · பெரியவன் கவிராயர்

பள்ளியர் குடிப்பிறப்புக் கூறுதல்

12கலிப்பா✓
கடிக்கமலத் தாட்டுணையான் காவிவெற்பை வாழ்த்திமதன்
முடிக்கரசாய்த் தோன்றுகின்ற மூத்தாள் இளையாளும்
அடிக்கனங்கொண் டோங்குமுலை யாரவெற்பாற் சின்னஇடைக்
கொடிக்கலக்கண் செய்வார் குடிப்பிறப்புக் கூறுவரே.
13மூத்த பள்ளி✓
சிந்து
மன்னுமூ விரண்டுமுகப்
பன்னிரண்டுகைக் குமரன்
வடிவுடைய திருமலையிற்
குடிபுகுந்த நாள்
பன்னிடுமுக் காலப்பூசை
இன்னமும் நடக்க வைத்த
பண்ணைப் பள்ளர் கோத்திரத்திற்
பெண்ணடிமை நான்
கொன்னுனவேற் கண்ணி வள்ளி
யம்மையை முனம் வளர்த்த
குறவர் எங்கள் பாலர் காது
குத்தி வளர்ப்பார்
செந்நெல் வயல் சூழும் பண்பை
நன்னகர் அறம் வளர்த்த
தேவி வட வாரி நாட்டுப்
பள்ளியும் நானே.
14இளைய பள்ளி✓
முந்துபுடார்ச் சுன புரத்
தெந்தை குற்றாலர் தருவோர்
முன்றெணுங் குறும் பலாவும்
தோன்றிய நாளிற்
பைந்தமிழ் நன்னகர் தன்னிற்
சொந்தமாக வைத்த பண்ணைப்
பள்ளர் எங்கள் தாய்வழியும்
தந்தை வழியும்
இந்தத்திரு மலைப் பள்ளன்
வந்தென்னைச் சரடு செய்தே
இரண்டுடல் உயிரொன் றென்றான்
இன்றை வரைக்கும்
சிந்தனையில் லாமற் பண்பைக்
கந்தர் பண்ணைச் சேரிவாழுஞ்
செய்யதென் னாரி நாட்டுப்
பள்ளியும் நானே.