முருகன் App
திருமலை முருகன் பள்ளு
பெரியவன் கவிராயர்
கடவுள் வணக்கம்2 / 57
1காப்பு2கடவுள் வணக்கம்3அவையடக்கம்4மூத்த பள்ளி வரவு5இளைய பள்ளி வரவு6பள்ளன் வரவு7பள்ளன் தன் பெருமை கூறுதல்8பள்ளியர் குடிப்பிறப்புக் கூறுதல்9நாட்டு வளம்10குயில்11பள்ளியர் கும்மி யடித்தல்12தெய்வம் போற்றுதல்13மழைக் குறி14பள்ளர் திரண்டு வருதல்15மழை வெள்ள வரவு16ஐந்திணை - குறிஞ்சி17பாலை18முல்லை19மருதம்20நெய்தல்21ஆற்று வெள்ளம்22மீன் வகை23பொருள் வகை24பண்ணைக்காரன் வரவு25பள்ளர் வணங்குதல்26பண்ணைக்காரன் செயல்27பண்ணைக்காரன் கூறுதல்28மூத்தபள்ளி முறையிடுதல்29இளைய பள்ளியைக் கேட்டல்30அவள் கூறுதல்31பள்ளி கூறுதல்32பண்ணைக்காரன் கோபித்தல்33பள்ளன் வெளிவருதல்34பள்ளன் கூறுதல்35பண்ணைக்காரன் எண்ணுதல்36பள்ளனைத் குட்டையிலடித்தல்37பள்ளன் கூறுதல்38இளைய பள்ளி வருதல்39பள்ளனைக் கண்டு வருந்தல்40பள்ளன் ஆறுதல் கூறுதல்41மூத்த பள்ளி வருந்திக் கூறுதல்42சோறு தருதல்43பள்ளன் கூறுதல்44மூத்த பள்ளி பண்ணைக்காரனை வேண்டல்45பள்ளனை விடுவித்தல்46பள்ளன் கூறுதல்47நாள் பார்த்தல்48நற்சகுனமாதல்49பள்ளர் நாற்றுப் பாவச் செல்லுதல்50நாற்று வளர்தல்51நாற்று பறித்தல்52நடுகை53பயிர் விளைதல்54அறுவடை செய்தல்55மூத்த பள்ளி சண்டையிடல்56பள்ளியர் ஏசல்57வாழ்த்து
திருமலை முருகன் பள்ளு · பெரியவன் கவிராயர்

கடவுள் வணக்கம்

1விநாயகர்✓
சிந்து
பார்தந்த பன்னிரு கரப்பிரமன்
போர்தந்த கன்னல்விற் புயச்சிரமன்
பரித்தருள் ஆரணச் சரவணத்தான்
திருச்சர வணத்தான்
பேர்தந்தெனை யினங்கரு மலையான்
பிணைந்ததபெண் புணர்திரு மலையான்
பீடுயர் தமிழ்ப்பள் ளிசைச்சிறியேன்
பாடவந் துதவும்:
சீர்தந்திலர் முனம்வந்து தோன்றான்
ஏர்தந்திடும் நயனங்கள் மூன்றான்
செவிசேர் சுளகெனப் படைத்தான்
குடவயி றழகெனப் புடைத்தான்
வார்தந்ததோர் தவளக்கொம் புடையான்
வலபையென்றொரு பவளக்கொம் புடையான்
மதத்தாரைகள் பொழிகவுட் கரிமுகன்
பதத்தா மரையே.
2குற்றால நாதர்✓
ஆவினன்குடி திருப்பரங் கிரியும்என்
நாவினுங்குடி யிருப்பென இருப்பவன்
அலையிட்ட துரும்பாய்மெலி அமரரை
நிலையிட்ட பெருமான்
நாவலன்சிர புரக்கவு ணியன்குல
காவலன்புகழ் குறும்பல வுறைவோன்
நம்மை யிங்காண் டருள்குழல் வாய்மொழி
யம்மை பங்காளன்
கோவலன்படு கேவலந் தவிர்ந்திடுங்
கோமலரணி பூமல ரெனுந்தமிழ்க்
கும்ப சம்பவன் பணிதிரி கூடாசல
நம்பன் அம்பதமே
தேவி யஞ்சிட வேங்கைய னாகிய
காவி யஞ்சனைக் காங்கெயன் திருமலைச்
செவ்வேளிசை பள்ளிசை காத்திடும்
எவ்வேளை யுமே.
3திருமால் முதலியோர்✓
கூந்தலம்பிடி காந்தனைக் கள்வனைக்
குருநாதனை யருமா தவர்க்கொரு
கோனாகிய நிதியைவிண் ணவர்பணி
சேனர் பதியைச்
சேந்தனை வள்ளி காந்தனை மேனைக்குத்
திருப்பேரனைத் திருமலை வீரனைத்
திசைத்த லந்தனில் வழுத்திடு மினியபள்
ளிசைத்தமிழ் புரப்பார்
பாந்தளிற்றுயில் நாதனும் அவனுந்திப்
பூந்தடத்துறை வேதனும் அவன்அனை
பாரியுத்தமி காளியும் வாணியும்
வீரபத் திரனும்
காந்தளங் கரத்தெழு நாரியரும் மின்
னேந்திய பன்னிரு சூரியரும் மைக்
கடல்மீளியும் சாத்தனுங் கற்பகக்
கா வாளியுமே.