முருகன் App
திருமலை முருகன் பள்ளு
பெரியவன் கவிராயர்
பள்ளன் கூறுதல்46 / 57
1காப்பு2கடவுள் வணக்கம்3அவையடக்கம்4மூத்த பள்ளி வரவு5இளைய பள்ளி வரவு6பள்ளன் வரவு7பள்ளன் தன் பெருமை கூறுதல்8பள்ளியர் குடிப்பிறப்புக் கூறுதல்9நாட்டு வளம்10குயில்11பள்ளியர் கும்மி யடித்தல்12தெய்வம் போற்றுதல்13மழைக் குறி14பள்ளர் திரண்டு வருதல்15மழை வெள்ள வரவு16ஐந்திணை - குறிஞ்சி17பாலை18முல்லை19மருதம்20நெய்தல்21ஆற்று வெள்ளம்22மீன் வகை23பொருள் வகை24பண்ணைக்காரன் வரவு25பள்ளர் வணங்குதல்26பண்ணைக்காரன் செயல்27பண்ணைக்காரன் கூறுதல்28மூத்தபள்ளி முறையிடுதல்29இளைய பள்ளியைக் கேட்டல்30அவள் கூறுதல்31பள்ளி கூறுதல்32பண்ணைக்காரன் கோபித்தல்33பள்ளன் வெளிவருதல்34பள்ளன் கூறுதல்35பண்ணைக்காரன் எண்ணுதல்36பள்ளனைத் குட்டையிலடித்தல்37பள்ளன் கூறுதல்38இளைய பள்ளி வருதல்39பள்ளனைக் கண்டு வருந்தல்40பள்ளன் ஆறுதல் கூறுதல்41மூத்த பள்ளி வருந்திக் கூறுதல்42சோறு தருதல்43பள்ளன் கூறுதல்44மூத்த பள்ளி பண்ணைக்காரனை வேண்டல்45பள்ளனை விடுவித்தல்46பள்ளன் கூறுதல்47நாள் பார்த்தல்48நற்சகுனமாதல்49பள்ளர் நாற்றுப் பாவச் செல்லுதல்50நாற்று வளர்தல்51நாற்று பறித்தல்52நடுகை53பயிர் விளைதல்54அறுவடை செய்தல்55மூத்த பள்ளி சண்டையிடல்56பள்ளியர் ஏசல்57வாழ்த்து
திருமலை முருகன் பள்ளு · பெரியவன் கவிராயர்

பள்ளன் கூறுதல்

127சிந்து✓
தெய்வ நாயகன் திருமலை யாண்டவன்
செழும்பண்ணை நயினாரே
தேவ நீர்மனக் கோபத்தோ டென்பயந்
தீர்ந்தது நயினாரே
கைவ சப்படச் செய்யுழு வேன்ஒரு
காரியம் நயினாரே
கள்ளி மூத்தபள்ளி பிணைதனைக் கும்பிட்டேன்
கழித்திடும் நயினாரே.
128✓
இருப்பு விலங்கிட்ட யானையைப் போர்க்களத்
தேவுவர் நயினாரே
எனைமரத் தடித்தீர் விடுத்திடிற் குறையாய்
எவர்சொல்வர் நயினாரே
விருப்புறும் இளையவள் சமர்த்திகைத் திறஞ்சொல்ல
வேணுமோ நயினாரே
வீட்டிலி ருந்துபழி மூட்டிடும் மூத்தவள்
வீவிகாண் நயினாரே.
129✓
சாதி முறைமைகள்ளுங் குடித்துரைப் போம்அதைச்
சகித்திடும் நயினாரே
தாமுண்ணுஞ் சோற்றில்நஞ் சடுகலப் பவர்ஒருத்
தருமில்லை நயினாரே
நீதி யுறநமது பண்ணையி லேர்வகை
நெல்வகை நயினாரே
நின்றசீ ரின்வகை யாவையும் பகர்வேன்
நெறியுடன் நயினாரே.
130கலித்துறை✓
காவித் திருமலைச் சண்முக நாயகன் கால்பிடித்துப்
பாவித் திருமலை யாமல்நெஞ் சேவினை பற்றியநம
ஆவித் திருமலை யானிலம் போலசைந் தஞ்சயமன்
கோவித் திருமலை ஐயையுண் டாக்கிடைக் கொள்ளுமுன்னே.
131மாட்டு வகை✓
சிந்து
கூழைவாலன் கூடுகொம்பன் குத்துக்குளம்பன்
மயிலை கரும்போரான் சுட்டிவெள்ளை
கொட்டைப்பாக்கன் செம்மறையன் வெண்தலையன்
குற்றாலன் வெள்ளிக் கண்ணன்மாலான்
மேழைக்காளை கருமறையன் சூடுதின்னி
வெள்ளைக்காலன் மட்டைக்கொம்பன் திருகுகொம்பன்
வெடிவாலன் வெறியன்ஆனைச் சொறியன்இவை
விரும்பிஏர் கட்டினேன் ஆண்டே.
132வித்து வகை✓
புழுகுச்சம்பா மணல்வாரி சொரிகுரும்பை
புத்தன்வாரி சிறைமீட்டான் கருஞ்சூரை
பூம்பாளை குற்றாலன் பாற்கடுக்கன் - கற்
பூரப்பாளை காடைக்கழுத்தன் மலைமுண்டன்
மிளகுச்சம்பா திருவரங்கன் குறுவைக்கிள்ளை
முத்துவெள்ளை அதிக்கிராதி பனைமுகத்தன்
வித்தின்வகை இத்தனையுஞ் சித்திரமாய்க்
கட்டினேன் ஆண்டே.
133ஏர் வகை✓
கலப்பை நுகமும்பூட்டுங் கயிறும்வள்ளைக்
கையும் உழக்கோலுங் கொழுவுடனே
கயமரமும் மண்வெட்டியும் வடமும்
இனிதாய் இயற்றி வைத்தேன்
நலத்தகும் திருமலையான் பண்பைப்பண்ணை
வயலி லின்றே சிறப்பாக
நாமெல்லோருங் கூடிச் சென்றே
நாளேரிட வாரும் நயினாரே.