முருகன் App
திருமலை முருகன் பள்ளு
பெரியவன் கவிராயர்
பாலை17 / 57
1காப்பு2கடவுள் வணக்கம்3அவையடக்கம்4மூத்த பள்ளி வரவு5இளைய பள்ளி வரவு6பள்ளன் வரவு7பள்ளன் தன் பெருமை கூறுதல்8பள்ளியர் குடிப்பிறப்புக் கூறுதல்9நாட்டு வளம்10குயில்11பள்ளியர் கும்மி யடித்தல்12தெய்வம் போற்றுதல்13மழைக் குறி14பள்ளர் திரண்டு வருதல்15மழை வெள்ள வரவு16ஐந்திணை - குறிஞ்சி17பாலை18முல்லை19மருதம்20நெய்தல்21ஆற்று வெள்ளம்22மீன் வகை23பொருள் வகை24பண்ணைக்காரன் வரவு25பள்ளர் வணங்குதல்26பண்ணைக்காரன் செயல்27பண்ணைக்காரன் கூறுதல்28மூத்தபள்ளி முறையிடுதல்29இளைய பள்ளியைக் கேட்டல்30அவள் கூறுதல்31பள்ளி கூறுதல்32பண்ணைக்காரன் கோபித்தல்33பள்ளன் வெளிவருதல்34பள்ளன் கூறுதல்35பண்ணைக்காரன் எண்ணுதல்36பள்ளனைத் குட்டையிலடித்தல்37பள்ளன் கூறுதல்38இளைய பள்ளி வருதல்39பள்ளனைக் கண்டு வருந்தல்40பள்ளன் ஆறுதல் கூறுதல்41மூத்த பள்ளி வருந்திக் கூறுதல்42சோறு தருதல்43பள்ளன் கூறுதல்44மூத்த பள்ளி பண்ணைக்காரனை வேண்டல்45பள்ளனை விடுவித்தல்46பள்ளன் கூறுதல்47நாள் பார்த்தல்48நற்சகுனமாதல்49பள்ளர் நாற்றுப் பாவச் செல்லுதல்50நாற்று வளர்தல்51நாற்று பறித்தல்52நடுகை53பயிர் விளைதல்54அறுவடை செய்தல்55மூத்த பள்ளி சண்டையிடல்56பள்ளியர் ஏசல்57வாழ்த்து
திருமலை முருகன் பள்ளு · பெரியவன் கவிராயர்

பாலை

57சிந்து✓
புகுந்து நீத்த மரவமும் - பணை
மிகுந்து பூத்த குரவமும்
புல்வாய்க் குழுவுந் துயில்கொளுஞ் - சில
வல்வாய்க் கழுகும் முயல்களும்
முகந்து பிடிக்குஞ் சிலையரும் - இடை
நெகிழ்ந்து துடிக்கும் முலையரும்
முன்னாய்த் திரியும் பட்டியும் - சில
செந்நாய்த் திரளுங் குட்டியும்
பகுந்த மருப்புக் கலைகளும் - சினை
வகுந்த இருப்பை நிலைகளும்
பழமை தோன்றும் பாலையும் - மறக்
கிழவர் ஊன்று கோலையும்
தொகுந்தி ரைக்கரம் பரப்பி மலைக்கச்
சுருட்டி யிழுத்திட் டுரப்பியே
துலத் திண்படை வாலைப் பெண்பதந்
தொடர்ந்து முல்லையில் நடந்ததே.
58கலித்துறை - மாலையிரத்தல்✓
நெருக்கு மரவுண்ட வெண்மதி யூற்று நிலாத்தழல்மெய்
கருக்கு மரவுங் கனிவாய்ப்பெண் பேதையைக் காமனம்பால்
உருக்கு மராமலர்த் தாமநல் காய்விண் ணுலகுதொழும்
திருக்கும ராமுரு காதிரு மாமலைச் சேவகனே.