முருகன் App
திருமலை முருகன் பள்ளு
பெரியவன் கவிராயர்
பள்ளியர் ஏசல்56 / 57
1காப்பு2கடவுள் வணக்கம்3அவையடக்கம்4மூத்த பள்ளி வரவு5இளைய பள்ளி வரவு6பள்ளன் வரவு7பள்ளன் தன் பெருமை கூறுதல்8பள்ளியர் குடிப்பிறப்புக் கூறுதல்9நாட்டு வளம்10குயில்11பள்ளியர் கும்மி யடித்தல்12தெய்வம் போற்றுதல்13மழைக் குறி14பள்ளர் திரண்டு வருதல்15மழை வெள்ள வரவு16ஐந்திணை - குறிஞ்சி17பாலை18முல்லை19மருதம்20நெய்தல்21ஆற்று வெள்ளம்22மீன் வகை23பொருள் வகை24பண்ணைக்காரன் வரவு25பள்ளர் வணங்குதல்26பண்ணைக்காரன் செயல்27பண்ணைக்காரன் கூறுதல்28மூத்தபள்ளி முறையிடுதல்29இளைய பள்ளியைக் கேட்டல்30அவள் கூறுதல்31பள்ளி கூறுதல்32பண்ணைக்காரன் கோபித்தல்33பள்ளன் வெளிவருதல்34பள்ளன் கூறுதல்35பண்ணைக்காரன் எண்ணுதல்36பள்ளனைத் குட்டையிலடித்தல்37பள்ளன் கூறுதல்38இளைய பள்ளி வருதல்39பள்ளனைக் கண்டு வருந்தல்40பள்ளன் ஆறுதல் கூறுதல்41மூத்த பள்ளி வருந்திக் கூறுதல்42சோறு தருதல்43பள்ளன் கூறுதல்44மூத்த பள்ளி பண்ணைக்காரனை வேண்டல்45பள்ளனை விடுவித்தல்46பள்ளன் கூறுதல்47நாள் பார்த்தல்48நற்சகுனமாதல்49பள்ளர் நாற்றுப் பாவச் செல்லுதல்50நாற்று வளர்தல்51நாற்று பறித்தல்52நடுகை53பயிர் விளைதல்54அறுவடை செய்தல்55மூத்த பள்ளி சண்டையிடல்56பள்ளியர் ஏசல்57வாழ்த்து
திருமலை முருகன் பள்ளு · பெரியவன் கவிராயர்

பள்ளியர் ஏசல்

160சிந்து✓
இ: வைப்புக் கூத்தி யாரடி தென்
பண்பையிற் பள்ளி-நீயுன்
வாய்நினைந்த சொற்சொல் லாதே
வம்பி நானடி
மூ: ஒப்புக் கொப்போ நன்னகர்ப்
பள்ளி திருட்டால்-உண்ட
ஊறு படைத் தாலெதிர்த்து
வீறு பண்ணாதே.
161✓
இ: பண்ணைக் கடாப் போற் பருத்த
பண்பையிற் பள்ளி-கொண்ட
பள்ளனுக்கு ரெண்டு செய்யும்
பரத்தை நீயடி
மூ: கண்ணைக் காட்டிக் காசு தண்டும்
நன்னகர்ப் பள்ளி-வண்டக்
காளியனைப் போலு முண்டோ
கந்தலே போடி.
162✓
இ: கந்த லென்றாய் நீயோ நானோ
பண்பையிற் பள்ளி-உன்னைக்
கண்ட வழி போக லாமோ
குண்டணிக் கள்ளி
மூ: சொந்த மாகக் கொண்ட வனைச்
சொக்குப் பொடியால்-நீயுஞ்
சொன்னபடி ஆட்டி வைத்தாய்
நன்னகர்ப் பள்ளி.
163✓
இ: ஆட்டிப் பேசிக் கொண்ட பள்ளைப்
பண்பையிற் பள்ளி-குட்டை
அடித்தாய் சீலை பாம்பாய்ச் சுற்றிக்
கடித்தது போலே
மூ: மேட்டிக் காரி நன்னகர்ப்
பள்ளி நீயும்-குட்டை
விடுத்தாய் உன்னைப் போலப் பள்ளி
உலகத்தி லுண்டே.
164✓
இ: உண்ட பேர் வாழ்த் திட வேண்டாம்
நொந்த பேர் திட்டிட வேண்டாம்
உன்புத்தி துர்ப்புத்தி போமோ
பண்பையிற் பள்ளி
மூ: கண்ட பேர்மூன் பல்லைக் காட்டி
நீட்டிப் பேசும்-வண்டக்
கன்னக் காரி உன்னைப் போலார்
நன்னகர்ப் பள்ளி.
165✓
இ: பள்ளர் பள்ளி யர்சி ரிக்கும்
பண்பையிற் பள்ளி-உன்னஞ்ஞைப்
பள்ள னஞ் சானைக் கேளு
கன்னியைக் கேளு
மூ: உள்ள தேடி நன்னகர்ப் பள்ளி
பள்ள னிருளன்-விளை
யொட்டு கையைக் கேளு பள்ளன்
பட்டடையைக் கேள்.
166✓
இ: பட்டடை நெற்கள்ளி பண்பைப்
பள்ளி போடி-சந்திரனைப்
பார்த்து நாய் குரைக்கி லென்ன
பழுது வருமோ
மூ: அட்டி பேசும் நன்னகர்ப்
பள்ளி முதுகிற்-புண்
ணுடையான் போக்கல்லோ கூனி
மேனி மினுக்கும்.
167✓
இ: மேனி மினுக் காய்த் திரியும்
பண்பைப் பள்ளத்தி-சும்மா
வீணில் மெல்லும் வாயில் அவல்
காணிலென் செய்யார்
மூ: ஊன மும்மா னமும் இல்லா
நன்னகாப் பள்ளி-உன்றன்
ஓட்டை வாயை மூடெ திர்த்துப்
போட்டி பண்ணாதே.
168✓
இ: போட்டி பண்ண வேண்டா மென்ற
பண்பையிற் பள்ளி-கொல்லும்
புலியேடி நீயென் கண்ணுக்
கெலியடி கள்ளி
மூ: ஒட்டிப் பேசும் நன்னகராப்
பள்ளி துள்ளிப்போ-நீயும்
உன்நாயன் என்நாயன் என்றென்
முன்னம் பேசாதே.
169✓
இ: சாடி சொல்லும் பண்பைப் பள்ளி
உன்நாயன் போலே-நீயுன்
தகப்பன் சாமிக் குணமென்றன்
முகத்திற் காட்டாதே
மூ: போடிபோ நன்னகர்ப் பள்ளி
உன்நாயன் போலே-சீலை
போட்டா டாதே காப்புக் கையை
நீட்டிப் பேசாதே.
170✓
இ: பேச்சிபோ பண்பையிற் பள்ளி
உன்நாய னேய்க்குங்-குறப்
பெண்ணென் றென்னை எண்ண வேண்டாம்
எண்ணிப் பேசடி
மூ: ஆச்சடி நன் னகர்ப் பள்ளி
தாரு காவனத்-துங்கள்
அண்ணல் கொள்ளச் சீலை போட்ட
பெண்ணென் றெண்ணாதே.
171✓
இ: ஆமடி பண்பையிற் பள்ளி
உன்நாய னோது விக்கும்
அண்ணாவியைக் குட்டுந் தொழில்
பண்ணாதே போடி
மூ: ஓமடி நன் னகர்ப் பள்ளி
மாமன் தலையை-முன்னாள்
உன்நாயன் அறுத்தகுணம்
என்முன் பண்ணாதே.
172✓
இ: மன்னிப் பேன் பண்பையிற் பள்ளி
உன்நாயன் முன்னாள்-ஏற
மயில்குஞ்ச பிடிக்குங் கள்ளப்
பயில் பண்ணாதே
மூ: என்னடி நன்னகர்ப் பள்ளி
உன்நாயன் ஆட்டை-முன்னம்
எடுத்து மாறன் அடிக்கப் பட்ட
குணத்தைக் காட்டாதே.
173✓
இ: கொள்ளித் தேளே பண்பையிற் பள்ளி
உன் நாய னைப்போற்-காட்டிற்
குறத்திக் காக வேங்கை யான
குடிலம் பண்ணாதே
மூ: கள்ளத்தி நன்னகர்ப் பள்ளி
உன்நாயன் போல-வேடன்
கண்ணைப் பிடுங்க அழுது நின்ற
களவு பேசாதே.
174✓
இ: கந்தலே பண்பையிற் பள்ளி
உன்நாயன் போல-நீயுங்
கடுத்துப் பேசும் பேச்சைச் சற்றே
எடுத்து விட்டிடி
மூ: பந்தமுறப் பேசா தேநன்
னகராப் பள்ளத்தி-சாவும்
பஞ்சமே உன் நாய னைப்போல்
நஞ்சு தின்னடி.
175✓
இ: கேடி பண்பைப் பள்ளி வள்ளி
முன்னம் உன்நாயன்-செல்லுங்
கிழட்டுருவம் வந்தாற் புத்தி
மடித்துப் போமோடி
மூ: மோடியாய்த் தாருகா வனத்
துன்நாயன் கூட்டிப்போஞ்-சித்ர
மோகினி நீ யானால் தேடி
முடிந்து கொள்ளடி.
176✓
இ: கூறிடப் பண்பையிற் பள்ளி
உன்நாயன் பிடிக்கும்-நீருள்
கொக்கல்ல என் நாயன் வெள்ளிக்
குன்றம் நானடி
மூ: வீறுடன் நன்னகர்ப் பள்ளி
உன்னுடைய நாயன்-வலை
வீச்சிற் பட்ட மீனல்ல நான்
பூச்சை யாமடி.
177✓
இ: சண்டி பண்பைப் பள்ளி போடி
உன்னுடைய நாயன்-முலைத்
தாயர் ஆறு பேர்போல் தீயாய்
நீவழங் காதே
மூ: நண்டு தின்னும் நன்னகராப்
பள்ளி உன்நாயன்-மெல்ல
நகைக்கும் புகைத் தழல்போல் நீயும்
பகைத்தென் செய்வாய்.
178✓
இ: கூதறைப் பண்பைப் பள்ளியுன்
நாயன் கள்ளமாய்-அம்மை
கொண்டைக் குள்வண் டாயிருந்த
குழல் காட் டாதே
மூ: ஏதடி நன்னகர்ப் பள்ளி
வண்டோ தரியை-உங்கள்
ஈசன் போய் மருவுங் கள்ளப்
பூசல் பண்ணாதே.
179✓
இ: பண்பைப் பள்ளி நீயு மொரு
செட்டி யடியாள்-தெய்வப்
பாண்டியன் அடியாள் நானும்
பயப்படு வேனோ
மூ: தின்பதற்குப் பிச்சை கொள்ளும்
ஆண்டி யடிமை-நீயும்
தெய்வ ராயன் அடிமை என்னைச்
சீறியென் செய்வாய்.
180✓
இ: வாய்வீண் பேச வேண்டாம் பண்பைப்
பள்ளி உன்நாயன்-முன்னாள்
மலையை யரிந் தாற்போல் மூக்கும்
முலையும் அரிவேன்
மூ: நாயையை நன்னகர்ப் பள்ளி
அன்று காலனை-உங்கள்
நாய னுதைத் தாற்போ லுன்றன்
வாயி லுதைப்பேன்.
181✓
இ: நல்லது பண்பையிற் பள்ளி
என்நாயனை ஒப்பாய்ச்ச்-சொல்லும்
நாக்கிலே சுண் ணாம்புக்குறி
தாக்கு வேனடி
மூ: அல்லடி நன்னகர்ப் பள்ளி
நீயுஞ் சொல்லாதே-சொன்னால்கை
அரிவாளால் உன் நாக்கை
அரிந்து போடுவேன்.
182✓
இ: பண்பைப் பள்ளி சொல்ல வாடி
நாயன் பேர்சொல்லல்-பொல்லாப்
பள்ளச் சாதிக் கியல் பல்ல
தள்ளிப் போ போடி
மூ: பின்பு முன்பெண் ணாமற் பேசும்
நன்னகர்ப் பள்ளி-நாயன்
பேரைநீ யல்லோமுன் சொன்னாய்
பேச்சிபோ போடி.
183✓
இ: சாதிப் புத்தி நாயனை நாம்
வேறு படவே-சொன்னால்
தந்தைக்குந் தந்தை மகற்கும்
நிந்தனை யுண்டோ
மூ: பேதமாகச் சொன்ன பேர்க்கே
தோச மல்லாமல்-அண்டம்
பேரு கினும் பேதி யாத
சோதிக் கென்னடி.
184✓
சமாதானம்
இ: பெருமையாய்த் தங்கச்சி யென்றெண்
ணாமற் பேசினாய்-நீயும்
பெற்ற பிள்ளை யானால் சொல்லப்
புத்தி வருமே
மூ: அருமையான தாய்த்துணை யல்லோ
துணையென்றே-நீயும்
அன்பு வைத்தாற் சண்டையுண்டோ
தங்கைப் பள்ளத்தி.
185✓
போன தெல்லாம் போகட்டும்
நாமிரு பேரும்-பள்ளன்
புத்திக் குள்ளாய் வாழ்ந்தி ருப்போம்
சித்திர மாக
வானவர் தொழுங் குற்றாலர்
திருமலை வேலர்-பதம்
வணங்கி வாழ்வோம் நாமிருபேர்
இணங்கி நாளுமே.