முருகன் App
திருமலை முருகன் பள்ளு
பெரியவன் கவிராயர்
குயில்10 / 57
1காப்பு2கடவுள் வணக்கம்3அவையடக்கம்4மூத்த பள்ளி வரவு5இளைய பள்ளி வரவு6பள்ளன் வரவு7பள்ளன் தன் பெருமை கூறுதல்8பள்ளியர் குடிப்பிறப்புக் கூறுதல்9நாட்டு வளம்10குயில்11பள்ளியர் கும்மி யடித்தல்12தெய்வம் போற்றுதல்13மழைக் குறி14பள்ளர் திரண்டு வருதல்15மழை வெள்ள வரவு16ஐந்திணை - குறிஞ்சி17பாலை18முல்லை19மருதம்20நெய்தல்21ஆற்று வெள்ளம்22மீன் வகை23பொருள் வகை24பண்ணைக்காரன் வரவு25பள்ளர் வணங்குதல்26பண்ணைக்காரன் செயல்27பண்ணைக்காரன் கூறுதல்28மூத்தபள்ளி முறையிடுதல்29இளைய பள்ளியைக் கேட்டல்30அவள் கூறுதல்31பள்ளி கூறுதல்32பண்ணைக்காரன் கோபித்தல்33பள்ளன் வெளிவருதல்34பள்ளன் கூறுதல்35பண்ணைக்காரன் எண்ணுதல்36பள்ளனைத் குட்டையிலடித்தல்37பள்ளன் கூறுதல்38இளைய பள்ளி வருதல்39பள்ளனைக் கண்டு வருந்தல்40பள்ளன் ஆறுதல் கூறுதல்41மூத்த பள்ளி வருந்திக் கூறுதல்42சோறு தருதல்43பள்ளன் கூறுதல்44மூத்த பள்ளி பண்ணைக்காரனை வேண்டல்45பள்ளனை விடுவித்தல்46பள்ளன் கூறுதல்47நாள் பார்த்தல்48நற்சகுனமாதல்49பள்ளர் நாற்றுப் பாவச் செல்லுதல்50நாற்று வளர்தல்51நாற்று பறித்தல்52நடுகை53பயிர் விளைதல்54அறுவடை செய்தல்55மூத்த பள்ளி சண்டையிடல்56பள்ளியர் ஏசல்57வாழ்த்து
திருமலை முருகன் பள்ளு · பெரியவன் கவிராயர்

குயில்

20கலிப்பா✓
கயிலைமலை யானீன்ற காவிமலை யான்அயிலை
மயிலையுடை யானடிமை வாய்த்தபண்ணைப் பள்ளியர்கள்
குயிலைமனங் கொண்டாடிக் கூவுகநீ என்றுசொல்லும்
பயிலைமதன் கேட்டயர்ந்தாற் பள்ளருக்கங் கென்னாமே.
21குயிற் சிந்து✓
எம்மலையும் பரவுதிரி கூடமலை மலயமுனி
இறைஞ்சவரு திருமலை இரண்டும்-குயிலே
கைம்மலையன் னுரித்தான்பொன் மலைவெள்ளி மலையெனக்
காலமுஞ்சீர் பெற்றிருக்கக் கூவாய் குயிலே.
22✓
பண்பைவளம் பதியுமந்தப் பதிமேவு பல்குடியும்
பரிசனமும் அரசனமும் பாரும்-குயிலே
அன்புபெறு நகரீசர் சன்னிதியும் திருமலைமுத்
தையனும்நன் றாயிருக்கக் கூவாய் குயிலே.
23✓
மான்மேலை நாளீன்ற வள்ளிநா யகிகணவன்
மன்னுதிரு மலையான் சன்னிதியும்-குயிலே
மேன்மேலுந் திருப்பணியும் திருப்பணிசெய் அடியவரும்
மிகவூழி வாழியெனக் கூவாய் குயிலே.
24✓
கோதைகுழல் வாய்மொழியுங் குறும்பலவும் பெரும்பலனைக்
கொடுத்தெம்மைக் காத்தகுற் றால
நாதர்திருச் சன்னிதியும் வடவருவி கொழிக்கும்சித்ரா
நதித்துறையும் வாழவே கூவாய் குயிலே.
25✓
முனிவர்பணி செழுங்காவித் திருமலைமுத் தையன்மகிழ்
முகிழ்த்தமிகு வளந்தழைக்கக் கூவாய் குயிலே
இனியதிறல் அடியவரும் அடியவர்கள் செயுந்தொழிலும்
இயல்புடன்சீ ருந்தழைக்கக் கூவாய் குயிலே.
26✓
நீதிபரன் சின்னணைஞ்ச பெருமாளுச் சிதவானும்
நீணிதியுங் கருவுலப் பொருளும்-குயிலே
கோதிலாச் செங்கோலும் ஆதினமுஞ் சந்தானக்
குமரர்களுந் தழைக்கவே கூவாய் குயிலே.