முருகன் App
திருமலை முருகன் பள்ளு
பெரியவன் கவிராயர்
தெய்வம் போற்றுதல்12 / 57
1காப்பு2கடவுள் வணக்கம்3அவையடக்கம்4மூத்த பள்ளி வரவு5இளைய பள்ளி வரவு6பள்ளன் வரவு7பள்ளன் தன் பெருமை கூறுதல்8பள்ளியர் குடிப்பிறப்புக் கூறுதல்9நாட்டு வளம்10குயில்11பள்ளியர் கும்மி யடித்தல்12தெய்வம் போற்றுதல்13மழைக் குறி14பள்ளர் திரண்டு வருதல்15மழை வெள்ள வரவு16ஐந்திணை - குறிஞ்சி17பாலை18முல்லை19மருதம்20நெய்தல்21ஆற்று வெள்ளம்22மீன் வகை23பொருள் வகை24பண்ணைக்காரன் வரவு25பள்ளர் வணங்குதல்26பண்ணைக்காரன் செயல்27பண்ணைக்காரன் கூறுதல்28மூத்தபள்ளி முறையிடுதல்29இளைய பள்ளியைக் கேட்டல்30அவள் கூறுதல்31பள்ளி கூறுதல்32பண்ணைக்காரன் கோபித்தல்33பள்ளன் வெளிவருதல்34பள்ளன் கூறுதல்35பண்ணைக்காரன் எண்ணுதல்36பள்ளனைத் குட்டையிலடித்தல்37பள்ளன் கூறுதல்38இளைய பள்ளி வருதல்39பள்ளனைக் கண்டு வருந்தல்40பள்ளன் ஆறுதல் கூறுதல்41மூத்த பள்ளி வருந்திக் கூறுதல்42சோறு தருதல்43பள்ளன் கூறுதல்44மூத்த பள்ளி பண்ணைக்காரனை வேண்டல்45பள்ளனை விடுவித்தல்46பள்ளன் கூறுதல்47நாள் பார்த்தல்48நற்சகுனமாதல்49பள்ளர் நாற்றுப் பாவச் செல்லுதல்50நாற்று வளர்தல்51நாற்று பறித்தல்52நடுகை53பயிர் விளைதல்54அறுவடை செய்தல்55மூத்த பள்ளி சண்டையிடல்56பள்ளியர் ஏசல்57வாழ்த்து
திருமலை முருகன் பள்ளு · பெரியவன் கவிராயர்

தெய்வம் போற்றுதல்

40கலிப்பா✓
தண்ணாரூங் காவிச் சயிலச் சடானனன்வேள்
கண்ணா றிரண்டுடைய கந்தர்பண்ணைப் பள்ளரெல்லாம்
விண்ணார் மழைவரவு வேண்டியிரு கைகூப்பி
உண்ணா விரதமிருந் துற்றதெய்வம் போற்றினரே.
41சிந்து✓
வரந்தரு வீரே - மழைபெய்ய
வரந்தரு வீரே - சதவித
மசுநா யகரே - மழைபெய்ய
வரந்தரு வீரே
கரந்தசெஞ் சடையார் - அருள்திருக்
காவிவெற் புடையார் - பண்ணெனக்
காலமுந் தழைக்க - மழைபெய்யக்
கருணை செய்வீரே.
42✓
சிவபு சுரரே - வணங்கிய
நகரீ சுரரே - உலகுய்யத்
திறம்வளர்த் தவிே - பண்பையில்
அறம் வளர்த் தவளே
புவனா பதியே - நன்னகர்ச்
சிவனார் நிதியே - அருட்க்ருபை
பொழியாய் விழியே - அயிலெனுங்
குழல்வாய் மொழியே.
43✓
பணியுண்ட கோவே - துயில்கூர்
இலைகொண்ட தேவே - பரவும்உம்
பருக்கதி பதியே - திருமலைத்
திருக்கண பதியே
அணிகொண்டு போரே - செயுந்திறல்
மணிகண்ட னாரே - மொழிக்கனி
யலைக்கன்னல் நேரே - சொலுந்திரு
மலைக்கன்னி மாரே.
44✓
ஆலிக்குங் கூளிப் - பெரும்படைச்
சூலக்கங் காளி - கொடுங்கொலை
யடும்பகைக் கடும்போர் - செயுமவர்க்
கிடும்புசெய் இடும்பா
தாலிக்கு வேலி - கொடுத்துவிண்
பாலிக்குங் காவித் - திருமலைச்
சண்முக னாரே - பனிமலைப்
பெண்மக னாரே.
45✓
கனிதவ னாரே - பெறவல்ல
கரியவ னாரே - துணைசெய்யக்
கண்டது நீயே - நரபெலி
கொண்டருள் தாயே
தனுமகத் துவரே - கல்விமுற்
றெனுமகத் தியரே - விறலுடைத்
தைரிய னாரே - சூலக்கை
வைரவ னாரே.
46✓
கண்ட சொப்பனமோ - விண்மொழி
விண்ட வுற்பனமோ - கறுப்பன்முன்
கடைந்தசெப் பெனவே - தேங்காய்
உடைந்த சித் திரமோ
தண்டினர் மிண்டன் - மதப்புலி
சங்கிலி வீரன் - பலிகொள்ளும்
சமயப் பண் பறிந்தே - மதுகுமு
குமெனப் பொங் கியதோ.
47✓
தொண்டிக்கள் ளரக்கும் - பனங்கள்ளும்
பண்டியிற் பெரிய - குடந்தனில்
தொடர்பெற அடைத்தே - கறிசோ(று)
அடைவுடன் படைத்தே
எண்டலம் புரக்கும் - நரபெலி
கொண்டவள் முனமே - குரவையிட்(டு)
இங்கித மாக - நாமிடும்
பொங்கல் பொங் கியதோ.
48✓
கொண்டைச் செஞ்சாவல் - குறுமறி
கண்டித்துப் பலியும் - கொடுத்தபட்
கூட்டமுங் கடுத்தே - உமைகளி
யாட்டமுங் கொடுத்தே
மண்டலந் தனிலே - சோபன
நந்திரு மலையான் - அருளால்
வயமுறப் பெய்யும் - மழையினிப்
பயமிலை நமக்கே.