முருகன் App
திருமலை முருகன் பள்ளு
பெரியவன் கவிராயர்
நாற்று பறித்தல்51 / 57
1காப்பு2கடவுள் வணக்கம்3அவையடக்கம்4மூத்த பள்ளி வரவு5இளைய பள்ளி வரவு6பள்ளன் வரவு7பள்ளன் தன் பெருமை கூறுதல்8பள்ளியர் குடிப்பிறப்புக் கூறுதல்9நாட்டு வளம்10குயில்11பள்ளியர் கும்மி யடித்தல்12தெய்வம் போற்றுதல்13மழைக் குறி14பள்ளர் திரண்டு வருதல்15மழை வெள்ள வரவு16ஐந்திணை - குறிஞ்சி17பாலை18முல்லை19மருதம்20நெய்தல்21ஆற்று வெள்ளம்22மீன் வகை23பொருள் வகை24பண்ணைக்காரன் வரவு25பள்ளர் வணங்குதல்26பண்ணைக்காரன் செயல்27பண்ணைக்காரன் கூறுதல்28மூத்தபள்ளி முறையிடுதல்29இளைய பள்ளியைக் கேட்டல்30அவள் கூறுதல்31பள்ளி கூறுதல்32பண்ணைக்காரன் கோபித்தல்33பள்ளன் வெளிவருதல்34பள்ளன் கூறுதல்35பண்ணைக்காரன் எண்ணுதல்36பள்ளனைத் குட்டையிலடித்தல்37பள்ளன் கூறுதல்38இளைய பள்ளி வருதல்39பள்ளனைக் கண்டு வருந்தல்40பள்ளன் ஆறுதல் கூறுதல்41மூத்த பள்ளி வருந்திக் கூறுதல்42சோறு தருதல்43பள்ளன் கூறுதல்44மூத்த பள்ளி பண்ணைக்காரனை வேண்டல்45பள்ளனை விடுவித்தல்46பள்ளன் கூறுதல்47நாள் பார்த்தல்48நற்சகுனமாதல்49பள்ளர் நாற்றுப் பாவச் செல்லுதல்50நாற்று வளர்தல்51நாற்று பறித்தல்52நடுகை53பயிர் விளைதல்54அறுவடை செய்தல்55மூத்த பள்ளி சண்டையிடல்56பள்ளியர் ஏசல்57வாழ்த்து
திருமலை முருகன் பள்ளு · பெரியவன் கவிராயர்

நாற்று பறித்தல்

142கலிப்பா✓
நாற்று வளர்ந்தே நடப்பருவம் வாருமெனத்
தோற்றும் படிகுடும்பன் சொன்ன மொழிக்கிசைந்தே
ஆற்றலுறும் பண்ணையான் அன்பாக நல்லடியார்
போற்றுக்குகன் பண்பைப் புரவில்ஆள் ஏவினனே.
143சிந்து✓
குறித்த அக்ரம சூர னுடலை
அறுத்த விக்ரம வேலி னான்
குவளை வாவித் திருமலைக் குகன்
வளமைப் பண்ணைப் புரவிலே
மறித்த ஆடும் பசுவும் நிரக்க
நிறுத்துத் தரிசை யடித்தபின்
மறுத்து மறுத்து முச்சா லடித்து
மடித்து உழும்நன் குழவிலே
செறுத்த புனலை யுடைத்துக் குழப்பித்
திருந்த வலவ னடியையுந்
திருத்திப் பரம்பும் அடித்துக் குழைகள்
பதித்துச் சமைந்த தொளியிலே
பறித்த நாற்றை நாலு திசையுங்
குறித்து நோக்கிக் கும்பிட்டே
பழக்க மாய்நட வாரும் குரவை
முழக்க முழக்கும் பள்ளீரே.
144பள்ளியர் வகை✓
செந்தில் ஏரகந் திருப்ப ரங்கிரி
எந்தை காவித் திருமலைத்
தெய்வ நாயகன் பண்பைப் பண்ணைச்
செய்யில் நாற்றை நடுத்தற்கே
மந்தி முகத்து மாடியும் - அவள்
மருமகள் நெட்டைச் சூடியும்
மாலையும் மொண்டிச் சோலையுங் - குறு
வாச்சியும் சின்னப் பேச்சியும்
சந்தியும் பொத்தைக் குந்தியும் மொட்டைச்
சடைச்சியும் பிச்சி உடைச்சியும்
சல்லிப் பொயிலி வெயிலியுங் கட்டைச்
சாத்தி மூளிக் காத்தியும்
நந்தியும் முடச் சுந்தியும் - கரு
நாக்கியுந் தொந்தி மூக்கியும்
நல்லியுந் தெற்றுப் பல்லியுங் கூட
நடுக வாரும் பள்ளீரே.
145அறுசீர் விருத்தம்✓
குடப்பால் முலைகள் குலுகுலுங்கக்
குழவி யிடுக்கிப் போவாராம்
படப்பால் தோற்பைத் தனம்புரளப்
பற்போம் வாய்மென் றுடன்செலுவார்
இடப்பாற் கரத்தை இடுப்பினில்வைத்(து)
எடுப்பாய்ப் பேசி இறுமாந்து
நடப்பார் சரசஞ் சொலிச்சிரிப்பார்
நாற்று நடப்போம் பள்ளியரே.