முருகன் App
திருமலை முருகன் பள்ளு
பெரியவன் கவிராயர்
பள்ளன் ஆறுதல் கூறுதல்40 / 57
1காப்பு2கடவுள் வணக்கம்3அவையடக்கம்4மூத்த பள்ளி வரவு5இளைய பள்ளி வரவு6பள்ளன் வரவு7பள்ளன் தன் பெருமை கூறுதல்8பள்ளியர் குடிப்பிறப்புக் கூறுதல்9நாட்டு வளம்10குயில்11பள்ளியர் கும்மி யடித்தல்12தெய்வம் போற்றுதல்13மழைக் குறி14பள்ளர் திரண்டு வருதல்15மழை வெள்ள வரவு16ஐந்திணை - குறிஞ்சி17பாலை18முல்லை19மருதம்20நெய்தல்21ஆற்று வெள்ளம்22மீன் வகை23பொருள் வகை24பண்ணைக்காரன் வரவு25பள்ளர் வணங்குதல்26பண்ணைக்காரன் செயல்27பண்ணைக்காரன் கூறுதல்28மூத்தபள்ளி முறையிடுதல்29இளைய பள்ளியைக் கேட்டல்30அவள் கூறுதல்31பள்ளி கூறுதல்32பண்ணைக்காரன் கோபித்தல்33பள்ளன் வெளிவருதல்34பள்ளன் கூறுதல்35பண்ணைக்காரன் எண்ணுதல்36பள்ளனைத் குட்டையிலடித்தல்37பள்ளன் கூறுதல்38இளைய பள்ளி வருதல்39பள்ளனைக் கண்டு வருந்தல்40பள்ளன் ஆறுதல் கூறுதல்41மூத்த பள்ளி வருந்திக் கூறுதல்42சோறு தருதல்43பள்ளன் கூறுதல்44மூத்த பள்ளி பண்ணைக்காரனை வேண்டல்45பள்ளனை விடுவித்தல்46பள்ளன் கூறுதல்47நாள் பார்த்தல்48நற்சகுனமாதல்49பள்ளர் நாற்றுப் பாவச் செல்லுதல்50நாற்று வளர்தல்51நாற்று பறித்தல்52நடுகை53பயிர் விளைதல்54அறுவடை செய்தல்55மூத்த பள்ளி சண்டையிடல்56பள்ளியர் ஏசல்57வாழ்த்து
திருமலை முருகன் பள்ளு · பெரியவன் கவிராயர்

பள்ளன் ஆறுதல் கூறுதல்

113✓
நாமிருவர் படுந்துயரை
ஆறுமுகத் தெய்வம்மறி
யாதோ - வீட்டினிற்போ
நன்னகரப் பள்ளிபகை
நாளவிரோதச் செயல்க
ளேதோ
சமிதித்து முடமாமோ
இன்றுசிறை விடுவன்கட்டு
மட்டாய்க் - கறுப்பனுக்கும்
இடும்பனுக்கும் வேண்டிக்கொண்டே
இருபதுமுப் பதைநேர்ந்து
கட்டாய்.
114✓
நீலிபண்பைப் பள்ளியிங்கே
வருவள்அந்த நாய்வாயிற்
கோலை - நீஎதிர்த்து
நீட்டிவிடிற் பகைகாரி
கோட்டிகொண்டே புகல்வள்ஒருக்
காலை
சோலிபண்ண வேண்டாம்போபோ
குதிரைதனைக் கும்பிட்டேறிக்
கொண்டே - சவுக்கதனால்
துரத்தியடிப் பவர்களைப்போல்
அடிக்கிறேன் மகிழ்ந்திடுநீ
கண்டே.
115✓
கோபங்கொண்டே பகையைவெல்லக்
கூடாது கால்நடுவே
குத்தித் - தைத்தமுள்ளைக்
கூரியமுள் கொண்டெடுப்பார்
அறியாரோ கேளாயென்
புத்தி
நீபந்தந்த தார்புனைந்த
திருமலையான் நாயன்நமக்
குண்டே - பலபடநீ
நினையாதே வீட்டினிற்போ
குற்றாலர் தமைநினைந்து
கொண்டே.
116கலித்துறை✓
எழும்பால வித்தவ் வளவள வேனும் இரக்கமில்லேன்
தொழும்பாளர்க்காச் சுமைமாற்ற வந்து துணைசெய்வையோ
அழும்பாலன் ஆரெனக் கார்த்திகை மாதர் அறுவர்கொங்கைச்
செழும்பால் அருத்த அருந்துஞ்செங் காவிச் சிலைக்கந்தனே.