முருகன் App
திருமலை முருகன் பள்ளு
பெரியவன் கவிராயர்
பள்ளன் கூறுதல்34 / 57
1காப்பு2கடவுள் வணக்கம்3அவையடக்கம்4மூத்த பள்ளி வரவு5இளைய பள்ளி வரவு6பள்ளன் வரவு7பள்ளன் தன் பெருமை கூறுதல்8பள்ளியர் குடிப்பிறப்புக் கூறுதல்9நாட்டு வளம்10குயில்11பள்ளியர் கும்மி யடித்தல்12தெய்வம் போற்றுதல்13மழைக் குறி14பள்ளர் திரண்டு வருதல்15மழை வெள்ள வரவு16ஐந்திணை - குறிஞ்சி17பாலை18முல்லை19மருதம்20நெய்தல்21ஆற்று வெள்ளம்22மீன் வகை23பொருள் வகை24பண்ணைக்காரன் வரவு25பள்ளர் வணங்குதல்26பண்ணைக்காரன் செயல்27பண்ணைக்காரன் கூறுதல்28மூத்தபள்ளி முறையிடுதல்29இளைய பள்ளியைக் கேட்டல்30அவள் கூறுதல்31பள்ளி கூறுதல்32பண்ணைக்காரன் கோபித்தல்33பள்ளன் வெளிவருதல்34பள்ளன் கூறுதல்35பண்ணைக்காரன் எண்ணுதல்36பள்ளனைத் குட்டையிலடித்தல்37பள்ளன் கூறுதல்38இளைய பள்ளி வருதல்39பள்ளனைக் கண்டு வருந்தல்40பள்ளன் ஆறுதல் கூறுதல்41மூத்த பள்ளி வருந்திக் கூறுதல்42சோறு தருதல்43பள்ளன் கூறுதல்44மூத்த பள்ளி பண்ணைக்காரனை வேண்டல்45பள்ளனை விடுவித்தல்46பள்ளன் கூறுதல்47நாள் பார்த்தல்48நற்சகுனமாதல்49பள்ளர் நாற்றுப் பாவச் செல்லுதல்50நாற்று வளர்தல்51நாற்று பறித்தல்52நடுகை53பயிர் விளைதல்54அறுவடை செய்தல்55மூத்த பள்ளி சண்டையிடல்56பள்ளியர் ஏசல்57வாழ்த்து
திருமலை முருகன் பள்ளு · பெரியவன் கவிராயர்

பள்ளன் கூறுதல்

93சிந்து✓
பண்ணைக் காரன்முன் வந்த குடும்பன்
பணிந்திடாக் கள்ளப்பன் எல்லவே நான்
கண்ணை மூடிக்கொண் டெண்ணாமல் இப்படிக்
காடு மேடும் பகரக் கணக்கோ
அண்ணா லார்திரு மாமலை மேவுமுத்
தையர் பண்ணைக் கிருப்புஞ் செலவும்
திண்ண மாய்அடி யேன்சொல்லக் கேளும்
சினத்தை விட்டு விடும்ப்பண்ணை யாண்டே.
94மாட்டு வகை✓
நந்தக் கோன்மகன் மைத்துன னான
நரைக்கிழ வன்குற் றாலக்கோன் தந்த
தொந்திக் காளை குளங்குட்டம் நாடிச்செய்
தோப்புக் கடைகள் வாஞ்சித்து மேவும்
முந்தவே சந்து போனமால் காளை
முடப்படக் கூடக் காலொடு தூங்கும்
அந்தக் காரிக் கருங்காளை காணலாம்
அச்சங்க ரன்கோயிற் போனாக்கால் ஆண்டே.
95✓
செய்ய செம்மறைக் காளையை வேலப்பன்
செட்டி யார்அடித் தோட்டி யுடைத்தார்
வைய முய்ந்திட மீண்டுந் தனக்கு
மயிலை வேணுமென் றேபற்றிக் கொண்டார்
பொய்யிதோ மெய்யிற் சூடுண்ட காளை
பொலியிற் போமதை இன்னமுங் காணேன்
அய்யர் தூக்குமுடக் கால்நக ரீசர்
ஆங்கோர் காளையைக் கைக்கொண்டார் ஆண்டே.
96நெல் வகை✓
ஆடற் சீரகச் சம்பாவை ஆரூரில்
அல்லியங் கோதை பங்கெனக் கொண்டான்
ஈடில் லாக்கருஞ் சூரைமுத்தையர்
இரண்டு புள்ளுக்கும் பங்கிட்டுப் போட்டார்
சாடி யேவிளை குற்றாலன் தன்னைத்
தரணி பீடத் தவக்கொடிக் கீந்தார்
தேடி யேவல்ல ரங்கனை ராமனுஞ்
சிந்திப் போட்டனன் போர்க்கழைத் தாண்டே.
97✓
நீண்ட பைங்குழ லாளை மதகெற்று
நேற்றை வெள்ளத்திற் சாய்ந்தது கண்டீர்
பூண்ட வல்லித்தை யெல்லாஞ் சடானனப்
புண்ணி யன்னடி யார்களைக் கொண்டார்
வேண்டிடுஞ் சொல்லை யஞ்சுபங் கிட்டிந்த
மேதி னிப்புல வோர்களைக் கொண்டார்
தீண்டியே அந்தக் கோசலை ராகவன்
சீதா போகங்கை யாடினான் ஆண்டே.
98ஏர்க்கால் வகை✓
திருவ ரங்கனை முன்னம் வினதை
சிறுவன் தோட்சுமை யாய்க்கொண்டு போனான்
மருவு சீர்மணல் வாரியைக் காவி
மலையனார் சத்திக் குண்ணக் கொடுத்தும்
அரிய நாய னெனக்கொண் டதிக்கி
ராதி யுங்கைக் கொண்டது முண்டே
கருதியே முத்து வெள்ளையை யாதவர்
கன்னி பாலனுக் கீந்தனர் ஆண்டே.
99✓
எண்ணுந் தூணின் மருமா னுகந்தனை
ஈரி ரண்டுதுண் டாக முறித்தான்
கண்ணி லேகுழை யான்கலப் பையைக்
கருதி யேதலைக் கீழ்வைத்துக் கொண்டான்
மண்ணில் நீடு கொழுவைமுன் கைக்கொண்டு
வாரி வேலையில் வாணர்கள் விற்றார்
அண்ண லேவள்ளைக் கையுமி ரண்டுதுண்
டான செய்தி அறிவீரே ஆண்டே.
100✓
அழிவி லாத வடத்தை மொழிச்சி
யலிய தாக விசயனுக் கீந்தாள்
வழுவி லாவய மேழியை அம்பர
மன்னுந் தேர்க்குத் தரணிகைக் கொண்டான்
தெளிய நல்கு முளைக்கோலை முன்னந்
தெரிந்து சன்னாசித் தேவர்கள் கொண்டார்
நழுவும் பேச்சை விடும்விடும் வேலுடை
நாயனா ருண்டு நம்பண்ணை யாண்டே.
101கலித்துறை✓
பெண்ணாணை காந்தனைப் பேரானை தம்பியைப் பெய்யமுகிலூர்
விண்ணாணை யானைச் சடானன மூர்த்தியை வீணர்தம்பால்
நண்ணாணைக் காவித் திருமலை யானைமுந் நான்குதிருக்
கண்ணாணை என்னிரு கண்ணிற்கண் டேன்வினை கண்டிலனே.