முருகன் App
திருமலை முருகன் பள்ளு
பெரியவன் கவிராயர்
நடுகை52 / 57
1காப்பு2கடவுள் வணக்கம்3அவையடக்கம்4மூத்த பள்ளி வரவு5இளைய பள்ளி வரவு6பள்ளன் வரவு7பள்ளன் தன் பெருமை கூறுதல்8பள்ளியர் குடிப்பிறப்புக் கூறுதல்9நாட்டு வளம்10குயில்11பள்ளியர் கும்மி யடித்தல்12தெய்வம் போற்றுதல்13மழைக் குறி14பள்ளர் திரண்டு வருதல்15மழை வெள்ள வரவு16ஐந்திணை - குறிஞ்சி17பாலை18முல்லை19மருதம்20நெய்தல்21ஆற்று வெள்ளம்22மீன் வகை23பொருள் வகை24பண்ணைக்காரன் வரவு25பள்ளர் வணங்குதல்26பண்ணைக்காரன் செயல்27பண்ணைக்காரன் கூறுதல்28மூத்தபள்ளி முறையிடுதல்29இளைய பள்ளியைக் கேட்டல்30அவள் கூறுதல்31பள்ளி கூறுதல்32பண்ணைக்காரன் கோபித்தல்33பள்ளன் வெளிவருதல்34பள்ளன் கூறுதல்35பண்ணைக்காரன் எண்ணுதல்36பள்ளனைத் குட்டையிலடித்தல்37பள்ளன் கூறுதல்38இளைய பள்ளி வருதல்39பள்ளனைக் கண்டு வருந்தல்40பள்ளன் ஆறுதல் கூறுதல்41மூத்த பள்ளி வருந்திக் கூறுதல்42சோறு தருதல்43பள்ளன் கூறுதல்44மூத்த பள்ளி பண்ணைக்காரனை வேண்டல்45பள்ளனை விடுவித்தல்46பள்ளன் கூறுதல்47நாள் பார்த்தல்48நற்சகுனமாதல்49பள்ளர் நாற்றுப் பாவச் செல்லுதல்50நாற்று வளர்தல்51நாற்று பறித்தல்52நடுகை53பயிர் விளைதல்54அறுவடை செய்தல்55மூத்த பள்ளி சண்டையிடல்56பள்ளியர் ஏசல்57வாழ்த்து
திருமலை முருகன் பள்ளு · பெரியவன் கவிராயர்

நடுகை

146சிந்து✓
ஆடு மயிலும் நீடு மயிலும்
அமுத மயிலும் புலவர்கோன்
ஆனை மயிலுங் கான மயிலும்
ஆறு முகமு முடையவேள்
பாடுந் தலைமைப் புலமை நிலைமை
படைத்த மலயத் தகத்தியன்
பரவுங் காவித் திருமலைக் குகன்
பண்ணைப் புரவில் நடச்செய்தே
ஓடுங் கெண்டையைக் கூடன் கொழுந்தி
சூடி குனிந்து பிடிக்கிறாள்
உதட்டுச் சங்கிலி கொழுப்பைப் பார்அவள்
கவட்டுக் கீழ்நுழைந் துழக்கியே
மூடுந் தொடையின் அடியைத் தடவி
முட்டுங் கெண்டையைப் பிடியென்றே
முடுக்கு றான்அவள் துடிக்கி றாள்பயல்
முரண்டைப் பாரடி பள்ளீரே.
147✓
ஏர கந்திரு ஆவி னன்குடி
இலஞ்சிப் பள்ளி திருச்செந்தூர்
இடைக ழித்திருத் தணிப ரங்கிரி
இலகு சோலை மலையில்வாழ்
வீர கஞ்சுகன் கோர வஞ்சகச்
சூர்த டிந்துவிண் காத்தருள்
வேல வந்திரு மலைக்கு கன்பண்ணை
விளங்கும் புரவில் நடச்செய்தே
ஊர கந்தனில் இருக்குங் குடும்பர்
ஆருக்கும் இது பிடிக்குமோ
உடைச்சி கொழுந்தி சடைச்சி முலையில்
தெறித்த சேற்றைச் சுரண்டியே
தூர கந்தனில் பழுத்த பலவின்
சுளையைத் தின்னெனக் கொடுக்கிறான்
துடிக்கி றாள்அவள் உடுத்த சேலையை
அவிழ்க்கிறான் பாரும் பள்ளீரே.
148✓
அஞ்ச தலைகொண் டசூரர் மடிய
ஆறு தலைகொண் டேழுபார்
அளிக்கும் வேற்கை கொண்டெனை முற்றும்
அடிமை கொண்டருள் குமரவேள்
மஞ்சு தலைகொண் டேறும் இந்திரன்
மிஞ்சு தலைக்கொண் டமரரூர்
வாழ வைத்தருள் திரும லைக்குகன்
வழங்கும் புரவில் நடச்செய்தே
பஞ்சு வெட்டிதன் மகளைக் கறுத்த
குஞ்சு மாடன் கெஞ்சியே
பாக்கு வெற்றிலை தாவென் றான்அவள்
மூக்கைச் சுழித்து வாவென்றாள்
கொஞ்சி யுடுத்து மடிக்குள் ஒருகை
மிஞ்ச விடுத்துத் தடவுறான்
குலுங்கக் குலுங்கக் சிரிக்குஞ் சிறுக்கி
குடிலம் பாரும் பள்ளீரே.
149✓
வெம்பும் அமரர் துயரக் கடலுக்(கு)
அம்பி யானசண் முகக்குகன்
விருது கோழியுங் கொடியினான் வள
மருவும் ஆவினன் குடியினான்
நம்பி ராரக்குப தேசஞ் செய்குக
நாதன் வேதத் திருமலை
நாயகன் பண்ணைப் புரவில் பழைய
நாற்றங் காலில் நடச்செய்தே
செம்பி திருட்டு மொழியிலே - அந்த
வம்பி மருட்டும் விழியிலே
திரண்டெ ழுந்தனக் குடத்திலே - அதிற்
புரண்ட செந்தகல் வடத்திலே
கம்பி கட்டிய உடையிலே - இடைப்
பம்பும் நட்டணை நடையிலே
கையிலே கையிற் காப்பிலே முத்தன்
கலங்குறான் பாரும் பள்ளீரே.
150✓
வட்ட வேலையும் கிரவுஞ்ச மென்னும்
மலையும் மடிய வேல்விட்டோன்
வண்ண வாவித் திரும லைக்குகன்
பண்ணைப் புரவில் நடச்செய்தே
மொட்டை இருளன் மட்டி வாய்ப்பயல்
நெட்டை யழகி முலையினை
முட்டிக் குடிக்கும் எருமைக் கன்றென
எட்டிப் பிடித்துச் சுவைக்கிறான்
சட்டை பண்ணாமற் செய்வ தாரெனப்
பட்ட முடையான் கிட்டப்போய்த்
தலையிலே எட்டிக் குட்டக் கண்டந்தச்
சண்டி குலுங்கச் சிரிக்கிறாள்
கட்டி வெல்லமும் பாலும் போலிவர்
இட்டம் ஆருக்குந் தெரியுமோ
காமன் சேட்டையை உலகி லேஎவர்
காண வல்லவர் பள்ளீரே.
151✓
கைவ லானனைச் சூரனை வென்று
தெய்வ லோகத்தைக் காத்தருள்
கந்த மாதனப் பொருப்பினான்-அருள்
வந்த மானகத் திருப்பினான்
சைவ நாயகன் திருமலை யில்முத்
தையன் ஆறிரு தோளுடைச்
சரவ ணக்குகன் பண்ணைப் புரவிற்
குரவை முழக்கி நடச்செய்தே
ஐவர்க் கிளையாள் சுமந்த நாற்றொடுஞ்
செய்வ ரப்பினில் விழுந்தவள்
ஆடை யவிழக் கண்ட சங்கிலி
மாடன் அடுக்க ஓடிப்போய்ப்
பைவள ரல்குல் கதுவைக் கண்டிது
பாம்படி பள்ளி பாம்புநான்
பார்வை பார்க்கிறேன் என்று தடவிப்
பார்க்கிறான் பாரும் பள்ளீரே.
152✓
மன்னைச் சூரனை இரண்டு படுத்தித்
தன்னைப் போல்தெய்வம் ஆக்கினோன்
வள்ளி நாயகன் திரும லைக்குகன்
வளமைப் புரவில் நடச்செய்தே
சின்னச் சிறுக்கி நன்னி தடித்த
வன்னக் குரும்பை முலையினைத்
திகைத்துப் பார்க்கும் பண்ணைக் காரன்
முகத்தைப் பார்த்து நகைத்திடும்
கன்னங் கறுத்த கறுப்பி யையவன்
தின்னச் சினங்கொண் டோடிப்போய்க்
கடுக வேநடச் சொல்லி யேதடிக்
கம்பினா லெட்டி யடிக்கிறான்
முன்னம் போயவள் பள்ளன் இருளன்
முந்தி யைப்பிடித் திழுக்கிறான்
முட்டாள் பயலே விலகு கைமிஞ்ச
விட்டால் மோசம் பள்ளீரே.
153✓
கட்டருந் தலைச் சதம் பத்தாள்
புத்திர னறுங் கத்தான்
கவுணி யர் குலந் தோற்றி மதுரை
அமண ரைக்கழு வேற்றினோன்
கடுத்து முத்தமிழ்க் கீர னைச்சிறை
யடைத்து விடுத்த குமரவேள்
காவி யஞ்சனைத் திரும லைக்குகன்
கருஞ்செய்ப் புரவில் நடச்செய்தே
சுட்ட சள்ளையைக் கடித்தொரு குத்தி
முட்டிக் கள்ளையுங் குடித்தவன்
சுற்றிச் சுற்றிக் கக்குறான்-தலை
சுழன்று சுழன்று விழுகிறான்
துட்டங் கொண்டுவண் டுறுக்கிறான்-ஒரு
சட்டி நண்டையும் நொறுக்கிறான்
தொட்டு நாடியைச் சொறிகிறான்-ஒரு
கட்டியை எடுத் தெறிகிறான்
ஒட்டை வீசையைத் திருத்துறான்-நடும்
பள்ளியர் தம்மைத் துரத்துறான்
உடைச்சி முலையைக் கிள்ளுறான்-உடல்
உதட்டிலே முத்தங் கொள்ளுறான்
உருட்டி உருட்டி விழிக்கிறான்-உடல்
புரட்டிப் புரட்டி நெளிக்கிறான்
உள்ளங் கையைப் பிசைகிறான்-பச்
சோந்தி போலிருந் தசைகிறான்
அட்டை யிரண்டு பிணைக்கிறான்-மொட்டை
அழகி மடியில் திணிக்கிறான்
ஆலி முலையும் புலி முலையும்
அளவு பிடித்துப் பார்க்கிறான்
ஆருக் கிணங்கும் வீரக் குடும்பன்
அறிவ ழிந்திடக் குடித்திடும்
அரக்குச் சேட்டையும் குரக்குச் சேட்டையில்
அதிகம் பாரடி பள்ளீரே.
154கலிப்பா✓
சேவகனே காவித் திருமலையா அன்பருளப்
பாவகனே என்றுமனம் பாவிக்கப் பெற்றேனோ
சாவகனே ரிட்டகொடுஞ் சண்டாள வல்வினையால்
ஏவகனே ஆனேன் எடுத்தசென்மம் பொல்லாதே.