முருகன் App
திருமலை முருகன் பள்ளு
பெரியவன் கவிராயர்
பண்ணைக்காரன் வரவு24 / 57
1காப்பு2கடவுள் வணக்கம்3அவையடக்கம்4மூத்த பள்ளி வரவு5இளைய பள்ளி வரவு6பள்ளன் வரவு7பள்ளன் தன் பெருமை கூறுதல்8பள்ளியர் குடிப்பிறப்புக் கூறுதல்9நாட்டு வளம்10குயில்11பள்ளியர் கும்மி யடித்தல்12தெய்வம் போற்றுதல்13மழைக் குறி14பள்ளர் திரண்டு வருதல்15மழை வெள்ள வரவு16ஐந்திணை - குறிஞ்சி17பாலை18முல்லை19மருதம்20நெய்தல்21ஆற்று வெள்ளம்22மீன் வகை23பொருள் வகை24பண்ணைக்காரன் வரவு25பள்ளர் வணங்குதல்26பண்ணைக்காரன் செயல்27பண்ணைக்காரன் கூறுதல்28மூத்தபள்ளி முறையிடுதல்29இளைய பள்ளியைக் கேட்டல்30அவள் கூறுதல்31பள்ளி கூறுதல்32பண்ணைக்காரன் கோபித்தல்33பள்ளன் வெளிவருதல்34பள்ளன் கூறுதல்35பண்ணைக்காரன் எண்ணுதல்36பள்ளனைத் குட்டையிலடித்தல்37பள்ளன் கூறுதல்38இளைய பள்ளி வருதல்39பள்ளனைக் கண்டு வருந்தல்40பள்ளன் ஆறுதல் கூறுதல்41மூத்த பள்ளி வருந்திக் கூறுதல்42சோறு தருதல்43பள்ளன் கூறுதல்44மூத்த பள்ளி பண்ணைக்காரனை வேண்டல்45பள்ளனை விடுவித்தல்46பள்ளன் கூறுதல்47நாள் பார்த்தல்48நற்சகுனமாதல்49பள்ளர் நாற்றுப் பாவச் செல்லுதல்50நாற்று வளர்தல்51நாற்று பறித்தல்52நடுகை53பயிர் விளைதல்54அறுவடை செய்தல்55மூத்த பள்ளி சண்டையிடல்56பள்ளியர் ஏசல்57வாழ்த்து
திருமலை முருகன் பள்ளு · பெரியவன் கவிராயர்

பண்ணைக்காரன் வரவு

69கலிப்பா✓
அண்ணைப் படையான்முத் தையன் திருமலையான்
பண்ணைப் பருவம் பலகாலும் பார்க்கவல்ல
மொண்ணைப்பண்ணை யானிரண்டு முட்டிதட்டுங் காலியுக்கும்
சண்ணைநடை யோடுந் தடியோடும் வந்தானே.
70சிந்து✓
வெட்டையாய் மினுமினுத்த
தட்டைத் தலையும் - செம்பட்டை
மீசையும் பச் சோந்திக் கரை
வாசி நடையும்
முட்டிக் காலுஞ் சில்லொலுங்கு
விட்டுப் போகாப் பொட்டைக் கண்ணும்
மூளிக் காது மாய் வளர்ந்த
நாளிப் போழ்வாயும்
ஓட்டகம் இவரால் நல்ல
கட்டழகு பெற்ற தென்றால்
ஒன்றை யொன்றைச் சொல்வதென்ன
நன்றி தென்னவே
வட்ட வாவித் காவித்திரு
மாமலைக் கந்தர் பண்ணைக்கு
வாய்த்த பண்ணைக் காரர் வந்து
தோன்றி னாரே.