முருகன் App
திருமலை முருகன் பள்ளு
பெரியவன் கவிராயர்
பண்ணைக்காரன் கூறுதல்27 / 57
1காப்பு2கடவுள் வணக்கம்3அவையடக்கம்4மூத்த பள்ளி வரவு5இளைய பள்ளி வரவு6பள்ளன் வரவு7பள்ளன் தன் பெருமை கூறுதல்8பள்ளியர் குடிப்பிறப்புக் கூறுதல்9நாட்டு வளம்10குயில்11பள்ளியர் கும்மி யடித்தல்12தெய்வம் போற்றுதல்13மழைக் குறி14பள்ளர் திரண்டு வருதல்15மழை வெள்ள வரவு16ஐந்திணை - குறிஞ்சி17பாலை18முல்லை19மருதம்20நெய்தல்21ஆற்று வெள்ளம்22மீன் வகை23பொருள் வகை24பண்ணைக்காரன் வரவு25பள்ளர் வணங்குதல்26பண்ணைக்காரன் செயல்27பண்ணைக்காரன் கூறுதல்28மூத்தபள்ளி முறையிடுதல்29இளைய பள்ளியைக் கேட்டல்30அவள் கூறுதல்31பள்ளி கூறுதல்32பண்ணைக்காரன் கோபித்தல்33பள்ளன் வெளிவருதல்34பள்ளன் கூறுதல்35பண்ணைக்காரன் எண்ணுதல்36பள்ளனைத் குட்டையிலடித்தல்37பள்ளன் கூறுதல்38இளைய பள்ளி வருதல்39பள்ளனைக் கண்டு வருந்தல்40பள்ளன் ஆறுதல் கூறுதல்41மூத்த பள்ளி வருந்திக் கூறுதல்42சோறு தருதல்43பள்ளன் கூறுதல்44மூத்த பள்ளி பண்ணைக்காரனை வேண்டல்45பள்ளனை விடுவித்தல்46பள்ளன் கூறுதல்47நாள் பார்த்தல்48நற்சகுனமாதல்49பள்ளர் நாற்றுப் பாவச் செல்லுதல்50நாற்று வளர்தல்51நாற்று பறித்தல்52நடுகை53பயிர் விளைதல்54அறுவடை செய்தல்55மூத்த பள்ளி சண்டையிடல்56பள்ளியர் ஏசல்57வாழ்த்து
திருமலை முருகன் பள்ளு · பெரியவன் கவிராயர்

பண்ணைக்காரன் கூறுதல்

74சிந்து✓
சேலளையும் வளவயலில் ஏர்நடத்துங் காலம்
செறிந்தகுளங் காலணைகள் சீர்படுத்துங் காலம்
சாலிவிதை தொளிகலக்கிப் பாவுதெளி காலம்
சனங்கள் அதி காலமெழுந் தாளேவுங் காலம்.
75✓
காற்புரவுங் குளப்புரவும் பயிரேற்றுங் காலம்
கரும்பரம்பைப் பருவம்பார்த் திதம்பூரியுங் காலம்
நாற்புவியில் இரண்டுசெய்யுஞ் சீர்படுத்துங் காலம்
நமக்கிரண்டு செயுங்குடும்பன் முளைத்தகலி காலம்.
76✓
தனியருக்குக் குடியுமவன் தனக்கிரண்டு குடியும்
தனிக்குறும்பு எண்ணிலவன் நமக்குவளை வானோ
அனமிருக்கும் வயற்பண்பைப் பதிமூத்த பள்ளி
அல்லவழிப் பள்ளன்வரச் சொல்லடி நீயே.
77அறுசீர் விருத்தம்✓
நாம்பால் இருக்க மேம்பருந்தி
நடப்பால் வதைக்குஞ் சஞ்சிதநோய்
சோம்பால் மெலிந்தோம் நமரங்காள்
தொழும்பா லுயலாம் தொழுவாரீர்
காம்பா லெனுந்தோள் அதரநறுங்
கரும்பார் அமுதக் களபமுலைத்
தீம்பால் அயின்றான் திருமலையே
தென்பாற் கயிலை மலையாமே.