முருகன் App
திருமலை முருகன் பள்ளு
பெரியவன் கவிராயர்
பள்ளனைக் கண்டு வருந்தல்39 / 57
1காப்பு2கடவுள் வணக்கம்3அவையடக்கம்4மூத்த பள்ளி வரவு5இளைய பள்ளி வரவு6பள்ளன் வரவு7பள்ளன் தன் பெருமை கூறுதல்8பள்ளியர் குடிப்பிறப்புக் கூறுதல்9நாட்டு வளம்10குயில்11பள்ளியர் கும்மி யடித்தல்12தெய்வம் போற்றுதல்13மழைக் குறி14பள்ளர் திரண்டு வருதல்15மழை வெள்ள வரவு16ஐந்திணை - குறிஞ்சி17பாலை18முல்லை19மருதம்20நெய்தல்21ஆற்று வெள்ளம்22மீன் வகை23பொருள் வகை24பண்ணைக்காரன் வரவு25பள்ளர் வணங்குதல்26பண்ணைக்காரன் செயல்27பண்ணைக்காரன் கூறுதல்28மூத்தபள்ளி முறையிடுதல்29இளைய பள்ளியைக் கேட்டல்30அவள் கூறுதல்31பள்ளி கூறுதல்32பண்ணைக்காரன் கோபித்தல்33பள்ளன் வெளிவருதல்34பள்ளன் கூறுதல்35பண்ணைக்காரன் எண்ணுதல்36பள்ளனைத் குட்டையிலடித்தல்37பள்ளன் கூறுதல்38இளைய பள்ளி வருதல்39பள்ளனைக் கண்டு வருந்தல்40பள்ளன் ஆறுதல் கூறுதல்41மூத்த பள்ளி வருந்திக் கூறுதல்42சோறு தருதல்43பள்ளன் கூறுதல்44மூத்த பள்ளி பண்ணைக்காரனை வேண்டல்45பள்ளனை விடுவித்தல்46பள்ளன் கூறுதல்47நாள் பார்த்தல்48நற்சகுனமாதல்49பள்ளர் நாற்றுப் பாவச் செல்லுதல்50நாற்று வளர்தல்51நாற்று பறித்தல்52நடுகை53பயிர் விளைதல்54அறுவடை செய்தல்55மூத்த பள்ளி சண்டையிடல்56பள்ளியர் ஏசல்57வாழ்த்து
திருமலை முருகன் பள்ளு · பெரியவன் கவிராயர்

பள்ளனைக் கண்டு வருந்தல்

110சிந்து✓
கண்ணகைபோல் மண்ணுலகில்
பெண்ணுருவாய் வந்தபண்பைப்
பள்ளி - சரடுசெய்த
கணவனுக்குச் சாடி சொல்லிக்
கண்ணிற் கண்டாள் இக்கோலங்
கள்ளி
தண்ணகையால் உயிர்வதைக்கும்
கொல்லிமலைப் பாவைகுணம்
படித்தாள் - சண்டாளி
தடந்தோளி லிருந்துசெவி
தனைக்கடித்தாள் நெஞ்சிற்கொண்டை
முடித்தாள்.
111✓
நேற்றிரவு கொடியகனாத்
தோற்றியது பலித்ததுபார்
குடும்ப - கறுப்பனுக்கு
நேர்ந்துவைத்த உருமாலை
நீயெடுத்தாய் இணக்கமில்லா
இடும்பா
நாற்றிசையில் தூற்றும்பெண்டிர்
கூற்றெனவே துரத்தாமற்
போனாய் - முழுதும்நம்பி
நச்சுமரந் தன்னைநட்டாய்
நாலுபேர் சிரிக்கஇடைப்
பட்டாய்.
112✓
காரியக்கா ரன்திருட்டுக்
காரன்வம்புக் காரன்பண்ணைக்
காரன் - சுடுகெண்டைக்காய்க்
கரைக்குளத்தை வெட்டவல்லான்
கைக்கூலிக் கிணங்கும்வலுக்
காரன்
வீரியக்காள் மூத்தபள்ளி
செவிக்காடியால் இவ்வண்ணமே
கண்டான் - உன்னைக்கண்டே
வெயர்த்துடலும் பதைபதைக்க
விருதாவில் இப்பாவங்
கொண்டான்.