முருகன் App
திருமலை முருகன் பள்ளு
பெரியவன் கவிராயர்
மூத்த பள்ளி பண்ணைக்காரனை வேண்டல்44 / 57
1காப்பு2கடவுள் வணக்கம்3அவையடக்கம்4மூத்த பள்ளி வரவு5இளைய பள்ளி வரவு6பள்ளன் வரவு7பள்ளன் தன் பெருமை கூறுதல்8பள்ளியர் குடிப்பிறப்புக் கூறுதல்9நாட்டு வளம்10குயில்11பள்ளியர் கும்மி யடித்தல்12தெய்வம் போற்றுதல்13மழைக் குறி14பள்ளர் திரண்டு வருதல்15மழை வெள்ள வரவு16ஐந்திணை - குறிஞ்சி17பாலை18முல்லை19மருதம்20நெய்தல்21ஆற்று வெள்ளம்22மீன் வகை23பொருள் வகை24பண்ணைக்காரன் வரவு25பள்ளர் வணங்குதல்26பண்ணைக்காரன் செயல்27பண்ணைக்காரன் கூறுதல்28மூத்தபள்ளி முறையிடுதல்29இளைய பள்ளியைக் கேட்டல்30அவள் கூறுதல்31பள்ளி கூறுதல்32பண்ணைக்காரன் கோபித்தல்33பள்ளன் வெளிவருதல்34பள்ளன் கூறுதல்35பண்ணைக்காரன் எண்ணுதல்36பள்ளனைத் குட்டையிலடித்தல்37பள்ளன் கூறுதல்38இளைய பள்ளி வருதல்39பள்ளனைக் கண்டு வருந்தல்40பள்ளன் ஆறுதல் கூறுதல்41மூத்த பள்ளி வருந்திக் கூறுதல்42சோறு தருதல்43பள்ளன் கூறுதல்44மூத்த பள்ளி பண்ணைக்காரனை வேண்டல்45பள்ளனை விடுவித்தல்46பள்ளன் கூறுதல்47நாள் பார்த்தல்48நற்சகுனமாதல்49பள்ளர் நாற்றுப் பாவச் செல்லுதல்50நாற்று வளர்தல்51நாற்று பறித்தல்52நடுகை53பயிர் விளைதல்54அறுவடை செய்தல்55மூத்த பள்ளி சண்டையிடல்56பள்ளியர் ஏசல்57வாழ்த்து
திருமலை முருகன் பள்ளு · பெரியவன் கவிராயர்

மூத்த பள்ளி பண்ணைக்காரனை வேண்டல்

பல்லவி✓
கோபந் தணிந் திரங்குவீர் - நயினாரே
கோபந் தணிந் திரங்குவீர்.
அனுபல்லவி✓
கோபந் தணிந்திரங்கிக் குடும்பனை விடும்விடும்
கொத்தடி யானுடன் இத்தனை யேன் (கோபம்)
125சரணம்✓
1. அடித்திடும் மரத்தொடுங் கிடக்கவோர்தடுக்கோ
அடிக்கடி பனிக்குளிர் நடுக்கிலும் நடுக்கோ
பிடித்துண்ணக் கொடுப்பவர் ஒருத்தருமில்லையே
பிழைப்பதெப் படிப்பள்ளன் வருத்தமோர்மலையே.
2. உழைத்திடும் அடிமையைக் கெடுத்திடும்சிறையே
உரத்தடித் தடித்தர வணைப்பது முறையே
மழைக்குப சரித்தெவர் பெயச்சொல்லு வாரே
மரத்தடித் திருஞ்சிறை விடச்சொல்லுவீரே.(கோ)
3. எடுத்திடும் பிறவியின் குருட்டுடன் நீரே
இளநீரின் குழம்பிட வோநயி னாரே
குடித்திடும் வெறிப்பள்ளன் குணங்குணமாமோ
குணத்தினுக் கவிழ்சதங் கொடுத்திட லாமோ
4. வாளெடுத் தோங்கிப்பின் புறங்கொண்டு வீசி
மருட்டுவ தல்லது வர்மங்கள் பேசி
நாளினைச் செலவிடில் குறைநமக் கலவோ
நமக்குப சாரங்கள் நானின்று சொலவோ. (கோ)
5. உமக்கடி யான்சற்றுஞ் சலுகையைக் கண்டோ
ஒளித்தோடிப் போங்கள வெங்களுக்குண்டோ
சுமக்கிற எருதுக்குத் துள்ளவுங் கடனே
சுடச்சொல்லு வீர்கார்யங் கெடுப்பதுந் திடனே.
6. வம்பிநன் னகர்ப்பள்ளி பேச்சையுங் கேளான்
வயலுமும் வேலைக்கு மலைத்திடுந் தோளான்
நம்பிய குடும்பன்செய் பிழைபொறுப் பீரே
நான்பிணை நான்பிணை நான்நயி னாரே. (கோபம்)