முருகன் App
திருமலை முருகன் பள்ளு
பெரியவன் கவிராயர்
மூத்த பள்ளி வருந்திக் கூறுதல்41 / 57
1காப்பு2கடவுள் வணக்கம்3அவையடக்கம்4மூத்த பள்ளி வரவு5இளைய பள்ளி வரவு6பள்ளன் வரவு7பள்ளன் தன் பெருமை கூறுதல்8பள்ளியர் குடிப்பிறப்புக் கூறுதல்9நாட்டு வளம்10குயில்11பள்ளியர் கும்மி யடித்தல்12தெய்வம் போற்றுதல்13மழைக் குறி14பள்ளர் திரண்டு வருதல்15மழை வெள்ள வரவு16ஐந்திணை - குறிஞ்சி17பாலை18முல்லை19மருதம்20நெய்தல்21ஆற்று வெள்ளம்22மீன் வகை23பொருள் வகை24பண்ணைக்காரன் வரவு25பள்ளர் வணங்குதல்26பண்ணைக்காரன் செயல்27பண்ணைக்காரன் கூறுதல்28மூத்தபள்ளி முறையிடுதல்29இளைய பள்ளியைக் கேட்டல்30அவள் கூறுதல்31பள்ளி கூறுதல்32பண்ணைக்காரன் கோபித்தல்33பள்ளன் வெளிவருதல்34பள்ளன் கூறுதல்35பண்ணைக்காரன் எண்ணுதல்36பள்ளனைத் குட்டையிலடித்தல்37பள்ளன் கூறுதல்38இளைய பள்ளி வருதல்39பள்ளனைக் கண்டு வருந்தல்40பள்ளன் ஆறுதல் கூறுதல்41மூத்த பள்ளி வருந்திக் கூறுதல்42சோறு தருதல்43பள்ளன் கூறுதல்44மூத்த பள்ளி பண்ணைக்காரனை வேண்டல்45பள்ளனை விடுவித்தல்46பள்ளன் கூறுதல்47நாள் பார்த்தல்48நற்சகுனமாதல்49பள்ளர் நாற்றுப் பாவச் செல்லுதல்50நாற்று வளர்தல்51நாற்று பறித்தல்52நடுகை53பயிர் விளைதல்54அறுவடை செய்தல்55மூத்த பள்ளி சண்டையிடல்56பள்ளியர் ஏசல்57வாழ்த்து
திருமலை முருகன் பள்ளு · பெரியவன் கவிராயர்

மூத்த பள்ளி வருந்திக் கூறுதல்

117சிந்து✓
கசப்பு வாயில் இனித்திடு மோபண்பைக்
கன்னியார் மூத்த பள்ளிநான் வந்தேன்
பசப்பி வண்டக் குடிலஞ்செய் நன்னகர்ப்
பள்ளி மாப்பிள்ளை பண்ணைக் குடும்பன்
வசப்ப டாவண்ணக் குட்டை யடிக்க
மனந்த ரித்தனள் நன்னகர்ப் பள்ளி
நிசப்படத் தெய்வத் தாணையுன் னாணைஎன்
நெஞ்ச யர்ந்து துடிக்குது பள்ளா.
118✓
கள்ளி னாசையொன் றல்லாம லேபெண்கள்
காத லாசையும் ஆருக்கும் ஆகா(து)
உள்ள மீதிரண் டாசெயுங் கொண்டிந்த
ஊருக் கும்நயி னாருக்கும் ஆகாய்
பள்ளர் சேரச் சிரிக்க உடம்பு
படைத்து நீபடும் பாடது தன்னை
விள்ள வாயற்றுப் பார்த்துப் பதைக்க
விதித்த ஊழ்வினை வெல்லவொண் ணாதே.
119✓
தாவு மீனுக்கு வாலையும் பாம்புக்குத்
தலையுங் காட்டிய வஞ்சகக் கள்வா
நாவி லேஒன்று நெஞ்சினி லேஒன்று
நாளுங் காட்டினன் நட்பும் மறந்தாய்
ஏவும் வார்த்தைக் கிணங்காமல் நாயனுக்(கு)
ஏரும் பூசலு மாகத் திரிந்தாய்
தேவ நாயகன் காவித் திருமலைத்
தெய்வஞ் செய்த செயலிது பள்ளா.