முருகன் App
திருமலை முருகன் பள்ளு
பெரியவன் கவிராயர்
மருதம்19 / 57
1காப்பு2கடவுள் வணக்கம்3அவையடக்கம்4மூத்த பள்ளி வரவு5இளைய பள்ளி வரவு6பள்ளன் வரவு7பள்ளன் தன் பெருமை கூறுதல்8பள்ளியர் குடிப்பிறப்புக் கூறுதல்9நாட்டு வளம்10குயில்11பள்ளியர் கும்மி யடித்தல்12தெய்வம் போற்றுதல்13மழைக் குறி14பள்ளர் திரண்டு வருதல்15மழை வெள்ள வரவு16ஐந்திணை - குறிஞ்சி17பாலை18முல்லை19மருதம்20நெய்தல்21ஆற்று வெள்ளம்22மீன் வகை23பொருள் வகை24பண்ணைக்காரன் வரவு25பள்ளர் வணங்குதல்26பண்ணைக்காரன் செயல்27பண்ணைக்காரன் கூறுதல்28மூத்தபள்ளி முறையிடுதல்29இளைய பள்ளியைக் கேட்டல்30அவள் கூறுதல்31பள்ளி கூறுதல்32பண்ணைக்காரன் கோபித்தல்33பள்ளன் வெளிவருதல்34பள்ளன் கூறுதல்35பண்ணைக்காரன் எண்ணுதல்36பள்ளனைத் குட்டையிலடித்தல்37பள்ளன் கூறுதல்38இளைய பள்ளி வருதல்39பள்ளனைக் கண்டு வருந்தல்40பள்ளன் ஆறுதல் கூறுதல்41மூத்த பள்ளி வருந்திக் கூறுதல்42சோறு தருதல்43பள்ளன் கூறுதல்44மூத்த பள்ளி பண்ணைக்காரனை வேண்டல்45பள்ளனை விடுவித்தல்46பள்ளன் கூறுதல்47நாள் பார்த்தல்48நற்சகுனமாதல்49பள்ளர் நாற்றுப் பாவச் செல்லுதல்50நாற்று வளர்தல்51நாற்று பறித்தல்52நடுகை53பயிர் விளைதல்54அறுவடை செய்தல்55மூத்த பள்ளி சண்டையிடல்56பள்ளியர் ஏசல்57வாழ்த்து
திருமலை முருகன் பள்ளு · பெரியவன் கவிராயர்

மருதம்

61சிந்து✓
மருத வனத்தில் ஓடுமாம் - கதிர்
தருத வனத்தை மூடுமாம்
வாழைக் குலையைத் தள்ளுமாம் - நெடுந்
தாழைக் குலையில் துள்ளுமாம்
கருது குளங்கள் நிரப்புமாம் - அவைக்
குரிய வளங்கள் பரப்புமாம்
காவிடங் கரை புரட்டுமாம் - சில
மாவிடங் கரை யுருட்டுமாம்
சருவி யனத்தை வெருட்டுமாம் - கரை
மருவி யநத்தை திரட்டுமாம்
சகலி திகைக்கச் சாடுமாம் - புன
லிகலை வகுக்கக் கூடுமாம்
செருவின் வன்பகை மாற்றியே - அரி
மருகன் முன்குடி யேற்றியே
தெய்வத் தலத்திந் திரனைப் பரவி
நெய்தல் நிலத்தில் அடைந்ததே.
62கலித்துறை✓
செந்தீ வரத்தியல் பாய்வருந் தீவினை தீர்த்தருள
வெந்தீ வரத்தில் எனதுமுன் னேகையில் வேலுங்கொண்டே
வந்தீ வரத்தி மகளார் வருடு மலர்ப்பதத்தை
இந்தீ வரத்திரு மாமலை மேவிய என்னையரே.