முருகன் App
திருமலை முருகன் பள்ளு
பெரியவன் கவிராயர்
பண்ணைக்காரன் கோபித்தல்32 / 57
1காப்பு2கடவுள் வணக்கம்3அவையடக்கம்4மூத்த பள்ளி வரவு5இளைய பள்ளி வரவு6பள்ளன் வரவு7பள்ளன் தன் பெருமை கூறுதல்8பள்ளியர் குடிப்பிறப்புக் கூறுதல்9நாட்டு வளம்10குயில்11பள்ளியர் கும்மி யடித்தல்12தெய்வம் போற்றுதல்13மழைக் குறி14பள்ளர் திரண்டு வருதல்15மழை வெள்ள வரவு16ஐந்திணை - குறிஞ்சி17பாலை18முல்லை19மருதம்20நெய்தல்21ஆற்று வெள்ளம்22மீன் வகை23பொருள் வகை24பண்ணைக்காரன் வரவு25பள்ளர் வணங்குதல்26பண்ணைக்காரன் செயல்27பண்ணைக்காரன் கூறுதல்28மூத்தபள்ளி முறையிடுதல்29இளைய பள்ளியைக் கேட்டல்30அவள் கூறுதல்31பள்ளி கூறுதல்32பண்ணைக்காரன் கோபித்தல்33பள்ளன் வெளிவருதல்34பள்ளன் கூறுதல்35பண்ணைக்காரன் எண்ணுதல்36பள்ளனைத் குட்டையிலடித்தல்37பள்ளன் கூறுதல்38இளைய பள்ளி வருதல்39பள்ளனைக் கண்டு வருந்தல்40பள்ளன் ஆறுதல் கூறுதல்41மூத்த பள்ளி வருந்திக் கூறுதல்42சோறு தருதல்43பள்ளன் கூறுதல்44மூத்த பள்ளி பண்ணைக்காரனை வேண்டல்45பள்ளனை விடுவித்தல்46பள்ளன் கூறுதல்47நாள் பார்த்தல்48நற்சகுனமாதல்49பள்ளர் நாற்றுப் பாவச் செல்லுதல்50நாற்று வளர்தல்51நாற்று பறித்தல்52நடுகை53பயிர் விளைதல்54அறுவடை செய்தல்55மூத்த பள்ளி சண்டையிடல்56பள்ளியர் ஏசல்57வாழ்த்து
திருமலை முருகன் பள்ளு · பெரியவன் கவிராயர்

பண்ணைக்காரன் கோபித்தல்

87சிந்து✓
கட்டாக நன்னகர்ப் பள்ளத்தி இவ்வாறு
கூறியே - நிற்கக்
கண்டிடுங் கிந்துக் கால்பண்ணைக் காரன்மெத்தச்
சீறியே
தொட்டால்வி டாதென்கை நாங்குக் கம்புகொல்லும்
பேயடி - உண்ட
சோற்றுக்கு ரெண்டுசெய் தாலது வேசுடுந்
தீயடி
கொட்டாம லேபிள்ளைப் பூச்சியும் ஆயினேன்
நானடி - காட்டிற்
கூழை நரியைக் குளிப்பாட்ட வல்லாய்நீ
தானடி
தட்டா னுறவுபோல் வந்துற வாடின
பள்ளத்தி - இந்தத்
தஞ்சாவூர்ச் சாலமெங் கேபடித் தாய்முழுக்
கள்ளத்தி.
88✓
பேச்சிநம் பண்பையிற் பள்ளிக்குக் கூற்றுவ
னானநீ - ஐயன்
பேர்பெற்ற பள்ளனைப் பெயர்க்கும் ருத்திராக்கப்
பூனைநீ
வாச்சிக் கல்லாது மரக்கணுத் தீரா(து)
இடும்பிச்சி - பொல்லா
வண்ட முறியனு மானாய் இளைய
குடும்பியச்சி.
89✓
வாயிற் பகட்டுஞ் சவலச் சமத்தும்
நடக்குமோ - பிற
வாப்பிள்ளை யையிண வாக்கட்டி லேற்றில்
கிடக்குமோ
தீயிற் பயிரிட்டாற் காய்கதி ராய்வந்து
காணுமோ - உன்றன்
சின்னப் பேச்செல்லாம் விடுவிடு பொல்லாப்பு
வேணுமோ.
90✓
கொச்சைப் பட்சாதிக் கடியன்றிச் செம்மை
அடுக்குமோ - கெஞ்சிக்
கொண்டு மயிலை யொருதூவல் கேட்டாற்
கொடுக்குமோ
பச்சைப் புளியாக்கித் தின்னவேண் டாம்வண்டக்
குள்ளத்தி - உன்றன்
பள்ளனை இக்கணம் கூப்பிடு நன்னகர்ப்
பள்ளத்தி.