முருகன் App
திருமலை முருகன் பள்ளு
பெரியவன் கவிராயர்
பொருள் வகை23 / 57
1காப்பு2கடவுள் வணக்கம்3அவையடக்கம்4மூத்த பள்ளி வரவு5இளைய பள்ளி வரவு6பள்ளன் வரவு7பள்ளன் தன் பெருமை கூறுதல்8பள்ளியர் குடிப்பிறப்புக் கூறுதல்9நாட்டு வளம்10குயில்11பள்ளியர் கும்மி யடித்தல்12தெய்வம் போற்றுதல்13மழைக் குறி14பள்ளர் திரண்டு வருதல்15மழை வெள்ள வரவு16ஐந்திணை - குறிஞ்சி17பாலை18முல்லை19மருதம்20நெய்தல்21ஆற்று வெள்ளம்22மீன் வகை23பொருள் வகை24பண்ணைக்காரன் வரவு25பள்ளர் வணங்குதல்26பண்ணைக்காரன் செயல்27பண்ணைக்காரன் கூறுதல்28மூத்தபள்ளி முறையிடுதல்29இளைய பள்ளியைக் கேட்டல்30அவள் கூறுதல்31பள்ளி கூறுதல்32பண்ணைக்காரன் கோபித்தல்33பள்ளன் வெளிவருதல்34பள்ளன் கூறுதல்35பண்ணைக்காரன் எண்ணுதல்36பள்ளனைத் குட்டையிலடித்தல்37பள்ளன் கூறுதல்38இளைய பள்ளி வருதல்39பள்ளனைக் கண்டு வருந்தல்40பள்ளன் ஆறுதல் கூறுதல்41மூத்த பள்ளி வருந்திக் கூறுதல்42சோறு தருதல்43பள்ளன் கூறுதல்44மூத்த பள்ளி பண்ணைக்காரனை வேண்டல்45பள்ளனை விடுவித்தல்46பள்ளன் கூறுதல்47நாள் பார்த்தல்48நற்சகுனமாதல்49பள்ளர் நாற்றுப் பாவச் செல்லுதல்50நாற்று வளர்தல்51நாற்று பறித்தல்52நடுகை53பயிர் விளைதல்54அறுவடை செய்தல்55மூத்த பள்ளி சண்டையிடல்56பள்ளியர் ஏசல்57வாழ்த்து
திருமலை முருகன் பள்ளு · பெரியவன் கவிராயர்

பொருள் வகை

67சிந்து - வேறு✓
சங்கரன் செட்டி பருத்தியும் - கட்டை
ரெங்கயன் பட்ட விருத்தியும்
தட்டான் மிளகன் படுகையும் - குறுக்
கிட்டா னழகன் கடுகையும்
கங்கன் கட்டிய நெல்லையும் - வலைப்
புங்கன் வெட்டிய வல்லையும்
கண்டன் முத்திரிக் கல்லையும் - மொட்டைக்
கொண்டன் கத்திரித் கொல்லையும்
சிங்கக் கோன்பட்டி யாட்டையும் - வெள்ளை
அங்கக் கோன்குட்டிக் கூட்டையும்
சேணியர் மடச் சாலையும் - இலை
வாணியர் கொடிக் காலையும்
வெங்கல னிட்ட தோப்பையும் - பறைச்
சங்கிலி நட்ட கேப்பையும்
மேட்டினிற் செங்கல் மாலையும் - தொடுத்
தாட்டிய சங்கன் ஆலையும்.
68✓
அல்லி பீற்றல் வீட்டையும் - தெற்றுப்
பல்லி நூற்ற ராட்டையும்
அளையிற் படுக்கும் பாம்பையும் - பொய்கை
இடையில் அடுக்குஞ் சேம்பையும்
செல்லி வளர்க்கும் கோழியும் - குறி
சொல்லி யுழக்கும் நாழியும்
தேவி வடிச்ச பானையும் - மூளி
ஆவி பிடிச்ச மீனையும்
வல்லி யரைக்கும் மணையையும் - ஈரங்
கொல்லி வெளுக்கும் துணியையும்
வெண்டி மச்சினி பொட்டியும் - அவள்
நண்ட விச்சிடு சட்டியும்
வல்லை சுருட்டி வாரி மறித்தவ்
வெல்லை பரந்து பகிரதன்
வரந தியெனும் அனும நன்னதி
வருதல் பாரும் பள்ளீரே.