முருகன் App
திருமலை முருகன் பள்ளு
பெரியவன் கவிராயர்
பள்ளியர் கும்மி யடித்தல்11 / 57
1காப்பு2கடவுள் வணக்கம்3அவையடக்கம்4மூத்த பள்ளி வரவு5இளைய பள்ளி வரவு6பள்ளன் வரவு7பள்ளன் தன் பெருமை கூறுதல்8பள்ளியர் குடிப்பிறப்புக் கூறுதல்9நாட்டு வளம்10குயில்11பள்ளியர் கும்மி யடித்தல்12தெய்வம் போற்றுதல்13மழைக் குறி14பள்ளர் திரண்டு வருதல்15மழை வெள்ள வரவு16ஐந்திணை - குறிஞ்சி17பாலை18முல்லை19மருதம்20நெய்தல்21ஆற்று வெள்ளம்22மீன் வகை23பொருள் வகை24பண்ணைக்காரன் வரவு25பள்ளர் வணங்குதல்26பண்ணைக்காரன் செயல்27பண்ணைக்காரன் கூறுதல்28மூத்தபள்ளி முறையிடுதல்29இளைய பள்ளியைக் கேட்டல்30அவள் கூறுதல்31பள்ளி கூறுதல்32பண்ணைக்காரன் கோபித்தல்33பள்ளன் வெளிவருதல்34பள்ளன் கூறுதல்35பண்ணைக்காரன் எண்ணுதல்36பள்ளனைத் குட்டையிலடித்தல்37பள்ளன் கூறுதல்38இளைய பள்ளி வருதல்39பள்ளனைக் கண்டு வருந்தல்40பள்ளன் ஆறுதல் கூறுதல்41மூத்த பள்ளி வருந்திக் கூறுதல்42சோறு தருதல்43பள்ளன் கூறுதல்44மூத்த பள்ளி பண்ணைக்காரனை வேண்டல்45பள்ளனை விடுவித்தல்46பள்ளன் கூறுதல்47நாள் பார்த்தல்48நற்சகுனமாதல்49பள்ளர் நாற்றுப் பாவச் செல்லுதல்50நாற்று வளர்தல்51நாற்று பறித்தல்52நடுகை53பயிர் விளைதல்54அறுவடை செய்தல்55மூத்த பள்ளி சண்டையிடல்56பள்ளியர் ஏசல்57வாழ்த்து
திருமலை முருகன் பள்ளு · பெரியவன் கவிராயர்

பள்ளியர் கும்மி யடித்தல்

27✓
திங்களமும் மாரிபெய்து வன்பிணிகள் அணுகாமல்
தென்பாண்டி நாட்டிலுள்ள சனமும்-குயிலே
அங்கண்ணல் லடியவரும் கவிஞோரும் வேதியரும்
அறநெறியுந் தழைக்கவே கூவாய் குயிலே.
28கலிப்பா✓
உளறியடிக் குங்கேழ லொன்றைவதைத் தரிந்துமஞ்சட்
கிளறி யடிக்கடியே கிண்டிவெந்த கறியுடனே
அளறி யடித் தேவெறிகொள் ளரக்கையுண்ட பள்ளியர்வாய்
குளறியடிப் பார்குடிக் கும்மி யடிப்பாரே.
29கும்மி✓
கும்மியடி பெண்ணே கும்மியடி-இரு
கொங்கைகளுங் காப்புங் குலுங்கத்
தெம்முனை வேலனைக் கொண் டாடிச்
சேர்ந்து கும்மி யடியுங்கடி.
30✓
பள்ளியரே வட்டம் போடுங்கடி-ஐயன்
பன்னிரு தோள்வெற்றி பாடுங்கடி
கள்ளை எடுத்துக் குடியுங்கடி - கூடிக்
கட்டாய்க் கும்மி யடியுங்கடி.
31✓
தெய்வக் குறும்பலா விருப்பொருந்
தேவி குழல்மொழி பங்காளர்
சைவத் தலைவரைச் சித்ரசபைச்
சங்கர லிங்கத்தை வாழ்த்திக் கொண்டே.
32✓
வானர சாள்இந்த்ரன் தேவிக்குத்-திரு
மங்கிலி யப்பிச்சை யிட்டானைத்
தானவர்க் காய்அயில் தொட்டானைச்
சண்முக மூர்த்தியை வாழ்த்திக் கொண்டே.
33✓
சிறுக்கி அழகி யுட்டுக்குள்ளே
சிரிக்கும் வெறியிடு செம்மிமகன்
கறுப்ப னவளை யணைத்துதட்டைக்
கவ்விச் சுழன்று விழுவதுபார்.
34✓
வாகாக் கொண்டை முடியுங்கடி-முலை
மாராப்பைக் கட்டி யிறுக்குங்கடி
ஆகா வழிம்புத் திருமலைப் பள்ளன்
அண்டாமற் கற்கொண் டெறியுங்கடி.
35✓
காரானை பாக னென்னுங் காள
கண்டே சுரத்து மணிகண்டனும்
ஓரானை யூர்தி மருமகனும்
உற்ற துணைநமக் குண்டு பெண்காள்.
36✓
குறிப்புட னேநக ரீசதையும்
கோதை அறம்வளர்· தேவியையும்
சிறப்புட னேநீர் எல்லோரும்
சிந்தனையாய்க் கும்மி பாடுங்கடி.
37✓
மாது நரபெலி கொண்டமகா
மாயி மலரடி சென்னிவைத்துச்
சாதக மாகவே எல்லோருந்
தழைக்கக் கும்மி யடியுங்கடி.
38✓
செங்காவி வாவி புடைசூழும்
செய்ய திருமலை வேலவற்கு
மங்காத செல்வமெப் போதுந் தழைத்திட
வாழ்த்திக் கும்மி யடியுங்கடி.
39✓
வண்ண வாவித்திரு மாமலையில்
வாழ்கும ரேசர் திருவருளால்
பண்ணையுட னேருஞ் சீருந் தழைத்திடப்
பாடிக் கும்மி யடியுங்கடி.