முருகன் App
திருவேல் திருவுலா
பாவலர் பேகன்
இந்திரன் வணங்குதல்17 / 27
திருவேல் திருவுலா · பாவலர் பேகன்

இந்திரன் வணங்குதல்

69✓
இந்திரன்முன் னேவந்து வணங்கித் தன்நல்
இரத்தினகிரீ டச்சிரசு மண்ணிற் றோய
முந்துமொரு பக்தியினால் தொழுதான் மாதோ
மறைகளெல்லாம் முயன்றுபுகழ் வேலை ஆங்கே
சிந்துதுயர்க் கண்ணீரை மாற்றி வானின்
தேவர்க்கு வாழ்வளித்த திருவேல் போற்றி
இந்திரப தவிதன்னை எனக்கு மீண்டும்
ஈந்தருள்க! எனவேலும் இயம்பிற் றாங்கே!
70✓
“உன்உயிருக் குப்பயந்து சூரன் இட்ட
ஓராயி ரம்ஏவல் செய்து வாழ்ந்தாய்
உன்நிலையைக் கண்டுதேவர் மலைத்துப் போனார்
உயர்பாகம் அத்தனையும் நீத்தார் கேள்நீ
என்னநிலை வந்தாலும் இறைவன் ஈசன்
இன்மலர்த்தாள் மறவாமல் துணிந்து நிற்பாய்
உன்னுடைநற் பதவிதனை உனக்கே ஈந்தேன்
உய்வாய்நீ’ எனநல்வேல் உரைத்த தாங்கே!