முருகன் App
திருவேல் திருவுலா
பாவலர் பேகன்
போர்5 / 27
திருவேல் திருவுலா · பாவலர் பேகன்

போர்

41✓
பாயும்வேலின் செய்திகேட்டுப்
பாவியான சூரனின்
படைகள்யாவும் பதைபதைத்துப்
பயத்தினாலே மாய்ந்தவே
ஓயுங்காலப் பாவத்திற்கே
ஓடியிங்கே வந்ததாய்
உவகையோடே அமரர்யாரும்
உளக்கிளர்ச்சி கொண்டனர்!
நாயும்பேயும் புலாலைநாடி
நடக்கக்கழுகும் பறந்ததே
நான்மறையோன் துதிக்கும்ஐயன்
நனிவிருந்தே ஈவதாய்!
ஆயதமிழ் வாணர்பல்லோர்
அழகுவேலைத் துதித்தனர்
அவனியாவும் காணுகவே
ஐயனாடும் அமரையே!