முருகன் App
திருவேல் திருவுலா
பாவலர் பேகன்
படைப்போன் வேலை வணங்குதல்15 / 27
திருவேல் திருவுலா · பாவலர் பேகன்

படைப்போன் வேலை வணங்குதல்

65✓
ஆக்கும்தொழில் அயன்வந்து வணங்கி நின்றே
அயில்வேலைத் தொழுதேத்திச் சொல்வான் ஆங்கே
மீக்குறுநல் வன்மையினால் என்றன் நெஞ்சில்
மிகவளர்ந்த ஆணவத்தைப் போக்கி மாயை
நீக்கியருள் செய்தசுப்ர மணியா போற்றி
நின்றிருக்கை நெடுவேற்குக் கோடி போற்றி
ஆக்குதொழில் பாவமற அமைவ தற்கே
அருள்புரிக என்றயனுக் கருளும் வேலே!
66கவிச்சொல்✓
எத்தனையோ யுகாதியுகம் காத்தி ருந்தே
எனதையன் கைவேலே உனைய றிந்தேன்!
புத்திக்கெல் லாம்எட்டாப் புனிதம் நீயே!
புவனமெலாம் பாலிக்கும் சக்தி நீயே!
சித்தத்தில் உறைகின்ற தெளிவும் நீயே
சிவம்நீயே! சக்திநீயே! தெய்வம் நீயே!
இத்தரையில் நினதுபுகழ் பரப்பும் பேற்றை
இன்றெனக்கு வல்லமையோ டருள்க நீயே!