முருகன் App
திருவேல் திருவுலா
பாவலர் பேகன்
வாழ்த்து27 / 27
திருவேல் திருவுலா · பாவலர் பேகன்

வாழ்த்து

88✓
ஈராறு கரங்கள் வாழ்க!
இருமூன்று முகங்கள் வாழ்க!
பாரினில் எம்மைக் காக்கும்
பருவேலும் வாழ்க! வாழ்க!
கூருகிர் கோழி, மஞ்ஞை
குவலயத்து அடியார் வாழ்க!
சீருடை வள்ளி தெய்வ
யானையும் சிறந்து வாழ்க!