முருகன் App
திருவேல் திருவுலா
பாவலர் பேகன்
வேல் உலாக் கொள்ளல்10 / 27
திருவேல் திருவுலா · பாவலர் பேகன்

வேல் உலாக் கொள்ளல்

49வேறு✓
வாகைதனைச் சூடிக் கொண்டே
ஐயன்றனை வலமாய் வந்து
தோகையின்மேல் ஏறிக் கொண்டு
அடியார்கள் துயர்கள் நீங்க
ஏகிற்றே திருஉலாவே
எம்முளம் மகிழு மாறே
ஆகஇவ் அவனி தன்னில்
அறமதே செழித்த தம்மா!
50✓
தேவர்கள் தொழுதே ஏத்த
திருமறை கீதம் பாட
தேவர்கோன் இந்தி ரன்வந்
திருந்தங்கு முருகன் தன்நல்
பூவினும் மென்ம லர்த்தாள்
போற்றிகள் செய்துநிற்க
பாவங்கள் போக்க வந்த
பண்டிதன் உலாக்கொண் டாரே!
51✓
வேலின்ஓர் பிழம்பி னின்று
வெளிப்படும் சிறுகற் றைப்போல்
கோலமாய்க் கதிரோன் வந்தான்
குணத்திசை தனிலே ”மேலாய்
சீலமார் புதுயு கத்தை
செகந்தனில் அருளி னாரே
வேலவர்” என்றே நன்கு
விளம்பரம் செய்வ தேபோல்!
52✓
வேண்டாத குப்பை மக்கி
வேண்டுர மாவ தேபோல்
வேண்டாத செயல்பு ரிந்து
வெம்மையே விளைத்த சூரன்
மாண்டிட மண்ணிற்பு தைந்து
மானுடம் செழித்த தம்மா
பாண்டியன் பாட லுக்குப்
பார்எல்லாம் வெற்றி யம்மா!