முருகன் App
திருவேல் திருவுலா
பாவலர் பேகன்
வருணன் வரல்16 / 27
திருவேல் திருவுலா · பாவலர் பேகன்

வருணன் வரல்

67✓
வருணபக வான்வந்து வேலின் முன்னே
வணங்கியே வாய்பொத்தி தாழ்ந்து நின்று
“தருணத்தில் தேவர்துயர் தகர்த்த ருள்செய்
சக்திவேலே நின்நாமம் கோடி போற்றி
உரியஇடம் பெய்யாமல் வேண்டா மண்ணில்
உகுக்கின்றேன் மழைதன்னைச் சிலநே ரத்தில்
வருத்துமெனை ஊழ்வலியால் அதனை மாற்ற
வரமருள்க”எனத்துதித்தான் வணங்கி வீழ்ந்தே!
68✓
’நானின்றி உயிரில்லை என்று நீதான்
நனிசெருக்குக் கொண்டதனால் வந்த தீஃதே
வானத்தை எதிர்நோக்கா உயிர்கள் கோடி
வாழ்வதனை அறிகுவைநீ காண்க உன்றன்
தானத்தைப் பணியாகச் செய்வாய் உன்றன்
தலைவீக்கம் தவிர்ந்திடுவாய் மேலாம் இந்த
ஞானத்தை உரைக்கின்றேன் உய்க’ என்றே
நல்வேலும் நவிலவரு ணன்ம கிழ்ந்தான்!