முருகன் App
திருவேல் திருவுலா
பாவலர் பேகன்
ஐம்பூதங்களின் வழிபாடு24 / 27
திருவேல் திருவுலா · பாவலர் பேகன்

ஐம்பூதங்களின் வழிபாடு

82வேறு✓
கதிரவன் எழுந்து காலை
கதிர்வேலைத் தொழுது செல்வான்!
பதிதனைப் போற்றிச் செல்வான்!
பனிநீர்தன் அலைக ளாலே!
முதிராத தென்றல், முத்தீ
முதுவையும் வானம் யாவும்
துதிசெய்யும் புகழைப் பெற்ற
சீரலைச் சுடர்வேல் போற்றி!
83✓
எட்டிரண் டானாய் போற்றி
ஏகமாய் நின்றாய் போற்றி
எட்டுடனெட் டானாய் போற்றி
எட்டாத பொருளே போற்றி
எட்டெட்டை அடியார்க் கீயும்
இணையிலா குருவே போற்றி
மட்டிலா வேலாய் வந்த
மணியேநின் மலர்த்தாள் போற்றி!
84✓
வேலனே விமலா போற்றி!
விண்ணவர் தலைவா போற்றி!
பாலனே குருவே போற்றி!
பண்டித மணியே போற்றி!
சீலனே திருவே போற்றி!
செகந்தனில் அடியார் பாற்செல்
காலனை உதைப்போய் போற்றி!
கருணைமா நிதியே போற்றி!
85✓
குருவாகி என்னைக் காக்கும்
குமரநின் மலர்த்தாள் போற்றி!
திருவெலாம் எமக்கு நல்கும்
செந்திலம் பதியே போற்றி!
அருள்செய்தே எமைப்பு ரக்கும்
அறுமுக வள்ளால் போற்றி!
திருவேலே போற்றி போற்றி
தேவாதி தேவே போற்றி!