முருகன் App
திருவேல் திருவுலா
பாவலர் பேகன்
திருவேல் எழுந்தருளல்3 / 27
திருவேல் திருவுலா · பாவலர் பேகன்

திருவேல் எழுந்தருளல்

34வேறு✓
கடலின் முழக்கென்ன
அடலாண்மை செய்தங்கே
கந்தன்வேல் வருகுதையா-என்
சொந்தன்வேல் வருகுதையா!
தடம்புவி யிற்பகை
தடுமாறி நிலைகெட்டுத்
தட்டென விழுந்ததையா-தன்
கட்டுடன் மாய்ந்ததையா!
35வேறு✓
வெற்றிவெற்றி வெற்றிவெற்றி
வெற்றிவெற்றி வெற்றியே!
வெற்றிவெற்றி வெற்றியே
வேலனுக்கு வெற்றியே;
வெற்றிவெற்றி வெற்றிவெற்றி
வெற்றிவேற்கு வெற்றியே
வெற்றிவெற்றி வெற்றியே
வீரவேற்கு வெற்றியே.
36✓
சுற்றிநின்ற பகையைமாய்த்த
சூரவேற்கு வெற்றியே
துணிந்துமுனே பாய்ந்துசென்ற
சுடர்வேலுக்கு வெற்றியே;
சூரர்சேனை மாய்த்துவந்த
தூயவேற்கு வெற்றியே
துணையடியார் காமம்மாய்த்த
துணிந்தவேற்கு வெற்றியே.
37✓
சற்றும்முற்றும் தாழ்ந்திடாமல்
தருணமதில் பாய்ந்ததே
தருமநெறிகள் பிழைத்தவரைச்
சடுதியிலே மாய்த்ததே;
சங்கரனின் செல்வனுக்குத்
தரணியெல்லாம் வெற்றியே
தாள்பணிந்தார் யாவருக்கும்
தருவதென்றும் வெற்றியே.
38✓
பற்றுவைத்துப் பண்டிதனின்
பதமலரைப் பணிந்தனன்
பாண்டியனின் பாடலுக்கும்
பைந்தமிழ்க்கும் வெற்றியே;
பற்றுபற்று பற்றுபற்று
பண்டிதன்றாள் பற்றுவாய்
பற்றுவைப்பாய் என்மனமே
பைந்தமிழ்தேர் முருகன்மேல்!
39வேறு✓
வாழிவாழி வாழிவாழி வாழிவாழி வாழியே!
வாகைசூடி வந்தவேலும் வாழிவாழி வாழியே!
ஆழிசூழும் வையமீதில் அறமார்க்கத்தின் பகைதனை
அறுத்துவேரை அன்புகாத்த அழகுவேலும் வாழியே!
வாழிவாழி வாழிவாழி வாழிவாழி வாழியே!
வண்ணத்தோகை மீதிலேறும் வள்ளல்வேலர் வாழியே
ஏழிசைகாள் சேர்ந்துபாடி என்னையனை வாழ்த்துவீர்
இனியுலகில் அச்சமில்லை என்னையன்றாள் வாழியே!