முருகன் App
திருவேல் திருவுலா
பாவலர் பேகன்
தேவாசுரப் போர்6 / 27
திருவேல் திருவுலா · பாவலர் பேகன்

தேவாசுரப் போர்

42✓
கறுமையோடு கடுமையாக
ககனமோடு பூமியை
கவ்விவாட்டும் இருளதாகக்
கள்ளன்சூரன் வந்தனன்
அறுமுகத்தோன் நெடியவேலும்
அடலாண்மைகள் செய்தங்கே
ஆறுகோடி ஆதவன்போல்
அள்ளிஒளியை வீசவே!
இருந்தவாறு தெரிந்திடாமல்
இருளும்ஓடி மறைந்ததே
எனதையனும் இளநகைசெய்
தினிதியாங்கு நின்றனன்
முறுக்கிவந்து முரணிநின்று
மூண்டசூரர் வந்தனர்
முருகர்சேனை பகையைஆங்கே
முறிவாகை கொண்டதே!
43✓
மண்ணிறோன்றி விண்ணைமுட்ட
வளர்ந்துசூரன் நின்றனன்
வாளும்கோலும் வில்லோடம்பும்
வரிசையாகக் கைகொடே
அண்ணல்வேலர் குழந்தையாக
அழுதுமாறாப் பிள்ளைபோல்
அழகுவேலைக் கையிலேந்தி
அழகுதோய நின்றனர்
எண்ணினானே சிறுவனென்றே
ஈசன்போற்றும் முதியனை!
எள்ளினானே ஞானமேரின்
முன்னெள்ளினைப் போன்றவன்!
வண்ணமோடு விண்ணிற்பாய்ந்து
வளர்ந்துவேலும் பாயுமோ
என்மனதில் வளருமச்சம்
மறைத்துச் சிரித்தான்சூரனே!
44வேறு✓
அழக்குரு வான
அசுரனின் வேந்தன்
அறத்தினை மாய்க்க
அணியுடன் நின்றான்
எழுந்தது நல்வேல்
எரிதணல் கக்கி
இரைந்தது வானில்
இரும்புவி யாட
உழுதது சூரன்
உரமிகு மார்பை
உடனிரு கூறாய்
உடலினைச் செய்ய
தொழுதனன் பாவி
துளிர்த்திடும் அறிவால்
சுடர்மணி வேலர்
துணைசெய்க என்றே!