முருகன் App
திருவேல் திருவுலா
பாவலர் பேகன்
முப்பத்து முக்கோடி தேவர்கள்19 / 27
திருவேல் திருவுலா · பாவலர் பேகன்

முப்பத்து முக்கோடி தேவர்கள்

72நாற்பத்தெண்ணாயிரம் இருடிகள்✓
கோடான கோடியுகம் தவங்கள் செய்து
குமரவேல் தனைக்காணக் காத்தி ருந்தோம்
வீடான பேறுவிழை அவர்கள் வந்து
வேல்முருகன் றாள்பணிந்து வேலை வாழ்த்தி
’ஈடேறும் இனியவழி எமக்குச் சொல்க’
எனவேலின் முன்னிறைஞ்சி ஏங்கி நின்றார்
பீடான வெற்றிகொண்ட வேலும் ஆங்கே
பிரமோப தேசமவர்க் குரைத்த தம்மா!