முருகன் App
திருவேல் திருவுலா
பாவலர் பேகன்
திருச்சீரலைவாய்23 / 27
திருவேல் திருவுலா · பாவலர் பேகன்

திருச்சீரலைவாய்

81✓
தத்தித்தோம் தித்தித்தோம் ததித்தோம் என்றே
தன்மைமிகும் அலைகளுமே தாளம் போடும்!
தித்திக்கத் தித்திக்கக் கவிதை சொல்வேன்
செந்திலாதி பதியேஉன் தலைய சைப்பாய்
முத்தைப்போல் வித்தான விந்து சிந்தி
மோனமிகும் மயில்நடனம் செய்க மாதோ
சத்திமிகு தனிவேல்உன் நடனம் செய்வாய்
தருமநெறி காக்கவந்த தனிவேல் போற்றி!