முருகன் App
திருவேல் திருவுலா
பாவலர் பேகன்
ஐம்பூதம்20 / 27
திருவேல் திருவுலா · பாவலர் பேகன்

ஐம்பூதம்

73✓
ஐந்தான பூதங்கள் வேலின் முன்னே
அடங்கியே வாய்பொத்தி வந்து நின்றார்
நைந்துருகி நல்வேலை வாழ்த்தி னார்கள்
நான்மறைகள் புகழ்தலைவன் கைவேல் வாழ்க!
’மைந்தர்கள் யாங்களுய்யும் வழியைக் காணும்
மாதவத்தை எமக்கருள்க மணிவேல்’ என்றார்
ஐங்கரத் தான்தம்பி அருட்கை வேலாங்
கருளியது கேட்டவரம் அவர்க்கும் மாதோ!