முருகன் App
திருவேல் திருவுலா
பாவலர் பேகன்
பாவலர் வேண்டல்13 / 27
திருவேல் திருவுலா · பாவலர் பேகன்

பாவலர் வேண்டல்

57வேறு✓
வாகைதனைச் சுமந்துசெல்லும்
வேலே உன்னை
வணங்கினேன் உளமுருகித்
தமிழாற் பாடி
தோகைமேல் சுடர்மணிபோல்
இவர்ந்து செல்லும்
சுப்ரமணி யனைமறவா
ஒருவ ரத்தைத்
தாகமுடன் உன்பாலே
கேட்கின் றேன்யான்
தந்ததற்கு நின்நாமம்
கோடி போற்றி
ஆகமங்கள் அத்துணையும்
உனக்குச் செய்வேன்
அடிமைக்கிவ் வரந்தந்த
அருட்பாங் காலே!
58வேறு✓
படைப்பவன் செருக்க டக்க
பழுதுயர் சிறையில் வைத்தே
அடைத்தவன் சிரத்தில் குட்டி
அருளிய அறுமு கன்றன்
படைக்கலம் பவனி வந்து
பராசக்தி புகழ்செப் பிற்றே
அடைக்கலம் நமக்கு வேலே
அறவழி நிற்போர் அஞ்சேல்!