முருகன் App
திருவேல் திருவுலா
பாவலர் பேகன்
பூத்தது புதுயுகம்11 / 27
திருவேல் திருவுலா · பாவலர் பேகன்

பூத்தது புதுயுகம்

53✓
பூத்தது புதுயு கந்தான்
பூமியில் என்று வானோர்
தோத்திரம் செய்தார் மேலாய்
சுடரிடும் வேலை ஆங்கே
நீத்தனர் மாயப் போர்வை
நிலத்தினில் வாழும் மாந்தர்!
யாத்தனர் புலவர் பாக்கள்
அறுமுகன் வாழ்க வென்றே!
54வையம் மகிழ்ந்தது✓
உற்றவன் மறத்தை மாய்த்தே
உயரறம் வளர்த்தான் என்று
பெற்றவன் மகிழ்ந்தான்! சூலம்
பெற்றவள் மகிழ்ந்தாள்! உண்மை
கற்றவர் மகிழ்ந்தார்! தேவ
கணங்களும் மகிழ்ந்தார்! தங்கள்
நற்றவம் பலித்த தென்றே!
நான்முகன் அகம் கிழ்ந்தான்!
55✓
கயிலாய கிரியை நோக்கி
கந்தனின் கையில் நின்று
மயிலின்மேல் ஏறிக் கொண்டு
மகிழ்ச்சியாய் வேலும் செல்ல
அயில்வேல்தான் வெற்றி கொண்டு
அவண்வரல் அறிந்தார் பெற்றோர்
உயர்ந்திடும் மகிழ்ச்சி யாலே
உயிர்க்கெலாம் வரங்கள் தந்தார்!