முருகன் App
திருவேல் திருவுலா
பாவலர் பேகன்
திருமால்18 / 27
திருவேல் திருவுலா · பாவலர் பேகன்

திருமால்

71✓
ஆயரிடைப் பிறந்திட்ட அண்ணல் இந்த
அவனிதனை வாய்மண்ணில் காட்டும் வள்ளல்
மாயனார் முன்செல்ல பின்னே நின்றார்
வளைந்துநெளிந் தேநாணி இந்தி ரன்தான்
சேயனாம் திருக்குமரனை இருவர் நோக்கி
திருவைநிகர் தேவயானை தனைம ணக்கத்
தூயோய்நீ அருள்புரிக எனவும் வேலர்
சுடர்மணிபோல் புன்னகைவாய் பூத்தா ரம்மா!