முருகன் App
திருவேல் திருவுலா
பாவலர் பேகன்
கவிச்சொல்9 / 27
திருவேல் திருவுலா · பாவலர் பேகன்

கவிச்சொல்

47✓
பாவமே புரிந்திட் டோரும்
பழுதிலா ஞானம் வந்தால்
பாவத்தைக் கடிந்தொ துக்கி
பண்டிதன் பொற்றாள் ஏத்த
தேவர்தம் தலைவர் வேலர்
திருவுளம் மகிழ்ந்து பின்னே
பாவியர் ஈடே றத்தான்
பண்ணுவார் உலகீர் காண்பீர்.
48✓
வேலது வெறியால் நோக்க
வெங்களம் தனிலே மீந்த
கோலமில் அசுரர் சேனை
கூட்டுடன் ஒழிந்த தையா!
பாலது வாயில் ஊறும்
பண்டிதன் செய்த போரை
ஞாலத்தில் எவர்செய் வாரே?
நான்மறை முதலோன் போற்றி!