முருகன் App
வையாபுரிப் பள்ளு
குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்
ஆற்றுச்சிறப்புக் காண்டல்15 / 49
1காப்புப்பாயிரம்2அவையடக்கம்3பள்ளிகள் வரவு4பழனிப்பள்ளி கலிப்பா5பள்ளன் வரவு6பள்ளன் தன் பெருமை கூறல்7பள்ளியர் குடித்தனங் கூறல்8பள்ளியர் நாட்டுவளங் கூறல்9குறியிற் கூக்கேட்டல்10மழைகவேண்டித் தெய்வம் பராவல்11வெறியயர்வேலன் நல்வர மளித்தல்12மழைக்குறி யோர்தல்13மழைகாலூன்றல்14வெள்ளம் வரவு15ஆற்றுச்சிறப்புக் காண்டல்16பண்ணைத் தலைவன் வரவு17மூத்தபள்ளி முறையீடு18இளையபள்ளி முறையீடு19பண்ணைத் தலைவன் இளைய பள்ளியை உரைப்பல்20பள்ளன் வெளிப்படல்21பண்ணைத் தலைவன் பண்ணைச்செயல் வினாவல்22பள்ளன் பண்ணைச்செயல் கூறல்23மாட்டுவகை24கலப்பை, மேழி, நுகம்25வயலெருவைக்க ஆயரை யழைத்தல்26ஆயர் வரவு27ஆயர் தம் பெருமை கூறல்28மூத்தபள்ளி சாடிகூறல்29பள்ளன் கிடைவைத்து வந்தான்போற் கூறல்30பள்ளனைத் தொழுவில் மாட்டல்31குட்டையிற் பள்ளனைக் கண்டுஇளையபள்ளி புலம்பல்32மூத்தபள்ளி பள்ளனுக்குச் சோறு கொண்டுவருதல்33குட்டையிற் பள்ளனைக் கண்டு மூத்தபள்ளி கூறல்34குட்டை மீட்கும்படிசெய்ய மூத்தபள்ளியைப் பள்ளன் வேண்டுதல்35பள்ளன் கால் குட்டையைக் கழற்றும்படி பண்ணைத் தலைவனை மூத்தபள்ளி பரவல்.36பள்ளன் வித்துவகை மாட்டுவகை கூறல்37நன்னாட்குறித்து நாளேரிடல்38காளைகளை ஏரிற்பூட்டல்39காளை வெருண்டது பள்ளத்துப் பாய்தல்40பள்ளிகள் புலம்பல்41பள்ளனெழுந்து வித்துழுது நாற்றுப்பாவுதல்42நாற்று நடல்43தொழி போடல், நாற்றுப்பறித்தல்44நடுகை வளப்பத்திடை பள்ளர் பள்ளியர் களிப்பு45விளைந்தபின் செப்பஞ் செய்தல்46நெல் அளத்தல்47மூத்தபள்ளி முறையீடு48பள்ளிகளிருவரும் உளம்விண்டு ஒருப்படல்49வாழ்த்தும் நூல் பயனும்
வையாபுரிப் பள்ளு · குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்

ஆற்றுச்சிறப்புக் காண்டல்

71கலிப்பா✓
பூசித்தாள் சிவகிரியிற் புங்கவனார் தன்பதத்தை
நேசித்தாள் முத்தணிந்தாள் நீர்ப்பவளந் தந்தேயாழ்
வாசித்தாள் வேண்டி வணங்கினா ளென்மீதில்
ஆசித்தாள் பின்னு மரைப்பணந்தந் தாளிலையே.
72சிந்து✓
அரிய நெய்தலைத் தாண்டி யேசிவ
கிரிமு ருகனை வேண்டியே
ஆழ்க டல்வாயைக் கிழிக்க வேபரந்
தேழ்க டலிற்போய்க் குதிக்கவே
பெரிய குரவை யயிரை யுழுவை
பெண்ணை பண்ணை சாளைமீன்
பெருந்த லைக்கருங் கண்ணி யவுரி
பெருக்கை துதிக்கை மூக்கைமீன்
பரவை பசலை திருக்கை வாளை
பயிந்தி கூனி மயிந்திமீன்
படலி கெளிறு மணலை யாரால்
பாசிக் கொத்தான் தேளிமீன்
சரியும் வாளை கோளை பனசை
தான்துள் ளிவிளை யாடவே
சண்முக நதியும் பெருகி வார
தகைமை பாரும் பள்ளீரே.
73கலிப்பா✓
பதலைச் சிவகிரியின் பண்ணவனை யேபுகழ்ந்து,
குதலைமொழி முத்தேயுன் கூர்விழிவேல் பட்டபுண்ணில்,
கதழ்முலைப்பொட்டணத்தையொத்திக் காமநோய் தீர்ப்பதற்குன்,
இதழமுதச் சஞ்சீவி யீந்தாற் பிழைப்பேனே.
74சிந்து✓
விசையன் தபசு பண்ணி யும்வர
மிசையும் வராக கிரியின்மேல்
மின்ன லுடனே பொழிந்த மழைநீர்
சன்னல் பின்னலு மாகியே
திசைதோ றுஞ்சத்த நதிய ளென்னவே
திரண்டு கூடிய வெள்ளத்தில்
செங்கணீ ராட்டுப் பசலி கசலி
செள்ளை சள்ளை பொத்திமீன்
இசைசே ரும்விண்ணி லெண்ணெய் மீன்முதல்
எரிகண் ணன்கரை வாசமீன்
இதுமு தலான மீன்க ளுங்குதித்
தெதிரேற வையா புரியிலும்
சசியெ னத்தண்ணீர் பெருகி மறுகாற்
றண்ணீர் வயல்தொறுந் தாவவே
சண்முக நதியும் பெருகி வார
தகைமை பாரும் பள்ளீரே.