முருகன் App
வையாபுரிப் பள்ளு
குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்
மாட்டுவகை23 / 49
1காப்புப்பாயிரம்2அவையடக்கம்3பள்ளிகள் வரவு4பழனிப்பள்ளி கலிப்பா5பள்ளன் வரவு6பள்ளன் தன் பெருமை கூறல்7பள்ளியர் குடித்தனங் கூறல்8பள்ளியர் நாட்டுவளங் கூறல்9குறியிற் கூக்கேட்டல்10மழைகவேண்டித் தெய்வம் பராவல்11வெறியயர்வேலன் நல்வர மளித்தல்12மழைக்குறி யோர்தல்13மழைகாலூன்றல்14வெள்ளம் வரவு15ஆற்றுச்சிறப்புக் காண்டல்16பண்ணைத் தலைவன் வரவு17மூத்தபள்ளி முறையீடு18இளையபள்ளி முறையீடு19பண்ணைத் தலைவன் இளைய பள்ளியை உரைப்பல்20பள்ளன் வெளிப்படல்21பண்ணைத் தலைவன் பண்ணைச்செயல் வினாவல்22பள்ளன் பண்ணைச்செயல் கூறல்23மாட்டுவகை24கலப்பை, மேழி, நுகம்25வயலெருவைக்க ஆயரை யழைத்தல்26ஆயர் வரவு27ஆயர் தம் பெருமை கூறல்28மூத்தபள்ளி சாடிகூறல்29பள்ளன் கிடைவைத்து வந்தான்போற் கூறல்30பள்ளனைத் தொழுவில் மாட்டல்31குட்டையிற் பள்ளனைக் கண்டுஇளையபள்ளி புலம்பல்32மூத்தபள்ளி பள்ளனுக்குச் சோறு கொண்டுவருதல்33குட்டையிற் பள்ளனைக் கண்டு மூத்தபள்ளி கூறல்34குட்டை மீட்கும்படிசெய்ய மூத்தபள்ளியைப் பள்ளன் வேண்டுதல்35பள்ளன் கால் குட்டையைக் கழற்றும்படி பண்ணைத் தலைவனை மூத்தபள்ளி பரவல்.36பள்ளன் வித்துவகை மாட்டுவகை கூறல்37நன்னாட்குறித்து நாளேரிடல்38காளைகளை ஏரிற்பூட்டல்39காளை வெருண்டது பள்ளத்துப் பாய்தல்40பள்ளிகள் புலம்பல்41பள்ளனெழுந்து வித்துழுது நாற்றுப்பாவுதல்42நாற்று நடல்43தொழி போடல், நாற்றுப்பறித்தல்44நடுகை வளப்பத்திடை பள்ளர் பள்ளியர் களிப்பு45விளைந்தபின் செப்பஞ் செய்தல்46நெல் அளத்தல்47மூத்தபள்ளி முறையீடு48பள்ளிகளிருவரும் உளம்விண்டு ஒருப்படல்49வாழ்த்தும் நூல் பயனும்
வையாபுரிப் பள்ளு · குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்

மாட்டுவகை

104கலிப்பா✓
பாட்டைச் செலவழித்த பாவலனுக் காளாய்த்தன்
கூட்டைச் செலவழித்த குழந்தை யெனுங்குழகன்
காட்டைச்செல வாக்குபண்ணைக் காரனோடு பள்ளன் மெள்ள
மாட்டுச் செலவையெல்லாம் வகைவகையாய்க் கூறுவனே.
105சிந்து✓
இராகம்: யதுகுல காம்போதி. அடசாப்புதாளம்
ஊரெங்கும் பார்த்தாலும்
ஒற்றைக் கொம்பன்
உலவாம லேவழி
தோறுமி ருக்கும்
மேருவின் சார்பில்
நெட்டைவா லான்போய்
விரும்பப்பட் டத்துக்
கின்னமி ருக்கும்
பாரிலே காணம்
நெடுமறை யான்றனைப்
பார்ப்பா ரென்று
பலபேரும் பார்ப்பார்
காரிகூன் மயிலை
பழனிச்செட் டிக்குக்
கருதிய வாகன
மாச்சுகா ணாண்டே.
106✓
முயங்கிய பசுக்காத்
தானுமே கெருட
முகவன்மேற் கொண்டே
அலையுதே யின்னம்
மயங்கிவா டிநனிக்
காளையா னசெம்
மறைக்கா ளைக்காய்
சடைவிழுந் தாலும்
இயங்குங்கா லாலுதை
பட்டுமே வெள்ளை
எருதாமக் காளை
மீதினி லேறி
வயங்கியே கொம்பைக்
காட்டிக்கொண் டின்னம்
மலையிலே வாழு
மதுதான்கா ணாண்டே.
107✓
இப்படிக் காக
வேயநே கம்மாடும்
ஏகியே யெங்குந்
தொண்டாச்சு தையா
சுப்பிர மணியற்குக்
கறவைப்ப சுக்கள்
துய்யகா ராம்பசு
வைஞ்ஞூ றீந்தேன்
அப்புரங் கயிலாச
நாதருக் கும்மே
அரியகா ராமடைப்
பெரியவ ளுக்கும்
ஒப்புச்சீட் டுக்கண்
டாப்போல்நூ றாவையும்
ஒட்டிக்கொ டுத்துவிட்
டேன்கா ணாண்டே.