முருகன் App
வையாபுரிப் பள்ளு
குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்
பள்ளன் வித்துவகை மாட்டுவகை கூறல்36 / 49
1காப்புப்பாயிரம்2அவையடக்கம்3பள்ளிகள் வரவு4பழனிப்பள்ளி கலிப்பா5பள்ளன் வரவு6பள்ளன் தன் பெருமை கூறல்7பள்ளியர் குடித்தனங் கூறல்8பள்ளியர் நாட்டுவளங் கூறல்9குறியிற் கூக்கேட்டல்10மழைகவேண்டித் தெய்வம் பராவல்11வெறியயர்வேலன் நல்வர மளித்தல்12மழைக்குறி யோர்தல்13மழைகாலூன்றல்14வெள்ளம் வரவு15ஆற்றுச்சிறப்புக் காண்டல்16பண்ணைத் தலைவன் வரவு17மூத்தபள்ளி முறையீடு18இளையபள்ளி முறையீடு19பண்ணைத் தலைவன் இளைய பள்ளியை உரைப்பல்20பள்ளன் வெளிப்படல்21பண்ணைத் தலைவன் பண்ணைச்செயல் வினாவல்22பள்ளன் பண்ணைச்செயல் கூறல்23மாட்டுவகை24கலப்பை, மேழி, நுகம்25வயலெருவைக்க ஆயரை யழைத்தல்26ஆயர் வரவு27ஆயர் தம் பெருமை கூறல்28மூத்தபள்ளி சாடிகூறல்29பள்ளன் கிடைவைத்து வந்தான்போற் கூறல்30பள்ளனைத் தொழுவில் மாட்டல்31குட்டையிற் பள்ளனைக் கண்டுஇளையபள்ளி புலம்பல்32மூத்தபள்ளி பள்ளனுக்குச் சோறு கொண்டுவருதல்33குட்டையிற் பள்ளனைக் கண்டு மூத்தபள்ளி கூறல்34குட்டை மீட்கும்படிசெய்ய மூத்தபள்ளியைப் பள்ளன் வேண்டுதல்35பள்ளன் கால் குட்டையைக் கழற்றும்படி பண்ணைத் தலைவனை மூத்தபள்ளி பரவல்.36பள்ளன் வித்துவகை மாட்டுவகை கூறல்37நன்னாட்குறித்து நாளேரிடல்38காளைகளை ஏரிற்பூட்டல்39காளை வெருண்டது பள்ளத்துப் பாய்தல்40பள்ளிகள் புலம்பல்41பள்ளனெழுந்து வித்துழுது நாற்றுப்பாவுதல்42நாற்று நடல்43தொழி போடல், நாற்றுப்பறித்தல்44நடுகை வளப்பத்திடை பள்ளர் பள்ளியர் களிப்பு45விளைந்தபின் செப்பஞ் செய்தல்46நெல் அளத்தல்47மூத்தபள்ளி முறையீடு48பள்ளிகளிருவரும் உளம்விண்டு ஒருப்படல்49வாழ்த்தும் நூல் பயனும்
வையாபுரிப் பள்ளு · குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்

பள்ளன் வித்துவகை மாட்டுவகை கூறல்

147கலிப்பா✓
சேல்விழியாள் மூத்தபள்ளி செப்பினதாற் பள்ளனையும்
கால்மரங்கள் வெட்டிக் கனவரிசை செய்தபின்பு
வேல்முருகன் பண்ணை விசாரிப்பான் தன்னுடன்ே
வால்விரைநெல் வர்க்கமுடன் மாட்டுவர்க்கஞ் சொல்வானே.
148வித்துவகை✓
சிந்து
இராகம்: காம்போதி. ஆதிதாளம்
கருணைவாரி கருணைவாலான்
மணல்வாரி—நெல்லும்
சூரியச்சம் பாநெல்லுஞ் சீரகச்சம்பா
கருங்குருவை பனைமுகரி
செந்தாழைநெல்லும்—சிறு
கத்தூரிச்சம் பாநெல்லுங் காடைக்கழுத்தான்.
149✓
பூசைப்பொட்டிச் சம்பாகார்த்
திகைச்சம்பா—வாசப்
புழுகுச்சம்பாமுத்துச்சம்பா தேவன்சம்பா
வாசியானைக் கொம்புச்சம்பா
இலுப்பைச்சம்பா—நெல்லும்
வங்கிநா ரர்யணங்க லிங்கராயன்.
150✓
குத்தாரிம சுப்புழுதி
இடைக்காடான்—நெல்லுங்
குங்குமச்சம் பாநெல்லு மொட்டன்சம்பா
சித்திரைக்கா லிவாலான்
அச்சுமுறித்தான்—நெல்லும்
சிறைமீட்டான் சித்ரவண்ணன் பேராவண்ணன்.
151✓
கோதும்பை யழகிய
மணவாளன்—நெல்லும்
குலைவாழை கட்டைவாலா னாகராயன்
காதிமேகந் திரைகொண்டான்
ராமபாணம்—நெல்லும்
கண்ணாடிக் கூத்தன்மகி ழலங்காரி,
152✓
அன்னதானி செம்மிளகி
கல்லுண்டை—நெல்லும்
அழகுச்சம்பா மிளகுச்சம்பா முத்துவிளங்கி
வண்ணப்பூம் பாளைமுலை
முண்டன்முக்கன்—நெல்லும்
வயங்கியேப ரக்குஞ்சிறு குருவிநெல்லும்,
153✓
இதுமுத லாகவேய
நேகநெல்களின்—வர்க்கம்
ஈரெயாயி ரங்களஞ்சி யத்திலேதானே
பதினெண்ணாயி ரஞ்சலகை
போட்டிருக்கிறேன்—விரை
பதனம்பண்ணி யிருக்குது பண்ணையாண்டே.
154மாட்டுவகை கூறல்✓
புல்லைக்காளை வெள்ளைக்காளை
காரிக்காளை—செவலைப்
போருக்காளை மயிலைக்காளை யுச்சிக்கொம்பன்
நல்லகட்டைக் காளைமுதல்
நெட்டைவாலுக்—காளை
நாக்குளாவி யாணிக்காலன் கருமறையான்,
155✓
சுட்டிக்காளை யொற்றைக் கொம்பன்
சட்டித்தலையன்—நல்ல
சுள்ளிக்கொம்புக் காளைகெருட முகவன்காளை
கட்டைக்காரி வட்டப்புல்லை
சுட்டிவெள்ளை—நெட்டைக்
காலனொடு வாலாட்டி சீட்டிக்கொம்பன்.
156✓
குடைச்செவியன் பசுக்காத்தான்
சடைவிழுந்தான்—குத்துக்
குளம்பனாந் தைக்கண்ணன் மோதுகாலன்
அடுத்தவீடு பிடுங்கிசெம்
மறைக்காளை—முதல்
ஐயாயிர மெருதுமி ருக்குதாண்டே.
157கொழு, கலப்பை, மேழிவகை கூறல்✓
அரியரப்ர மாதியாலே
வெல்லமாட்டாத—வோர்
ஆயுதங்க ளாலடித்த வாயிரங்கொழு
கரியகடல் நடுவேநின்ற
மாமரத்தையே வெட்டிக்
கலப்பையா யிரமேழிக் கையிலாயிரம்.
158நுகம்வகை கூறல்✓
…………………….
…………………….
நுகத்தடியி லோராயிரம்
விசுவகர்மா—வெகு
நுண்ணிதமாய்ச் செய்துதந்தான்
வைத்திருக்கிறேன்.
159வடக்கயிறு✓
காம்பீரியஞ் சேர்தூரன்
தம்பிமார்கள்—……
…………………….
………—சேரக்
கயிறாக்கி வடக்கயிறாய் வைத்திருக்கிறேன்.
160வடக்கயிறு✓
இதுமுத லேத்தனத்தைப்
பதனம்பண்ணிக்—கொண்டே
இருக்கிறேன் தேவரீர்க டாட்சத்தாலே
நதிபெருகி நல்லபட்டம்
வந்துவாச்சுதே—இப்போ
நாளேருங் கட்டவேணும் பண்ணையாண்டே.