முருகன் App
வையாபுரிப் பள்ளு
குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்
மூத்தபள்ளி முறையீடு17 / 49
1காப்புப்பாயிரம்2அவையடக்கம்3பள்ளிகள் வரவு4பழனிப்பள்ளி கலிப்பா5பள்ளன் வரவு6பள்ளன் தன் பெருமை கூறல்7பள்ளியர் குடித்தனங் கூறல்8பள்ளியர் நாட்டுவளங் கூறல்9குறியிற் கூக்கேட்டல்10மழைகவேண்டித் தெய்வம் பராவல்11வெறியயர்வேலன் நல்வர மளித்தல்12மழைக்குறி யோர்தல்13மழைகாலூன்றல்14வெள்ளம் வரவு15ஆற்றுச்சிறப்புக் காண்டல்16பண்ணைத் தலைவன் வரவு17மூத்தபள்ளி முறையீடு18இளையபள்ளி முறையீடு19பண்ணைத் தலைவன் இளைய பள்ளியை உரைப்பல்20பள்ளன் வெளிப்படல்21பண்ணைத் தலைவன் பண்ணைச்செயல் வினாவல்22பள்ளன் பண்ணைச்செயல் கூறல்23மாட்டுவகை24கலப்பை, மேழி, நுகம்25வயலெருவைக்க ஆயரை யழைத்தல்26ஆயர் வரவு27ஆயர் தம் பெருமை கூறல்28மூத்தபள்ளி சாடிகூறல்29பள்ளன் கிடைவைத்து வந்தான்போற் கூறல்30பள்ளனைத் தொழுவில் மாட்டல்31குட்டையிற் பள்ளனைக் கண்டுஇளையபள்ளி புலம்பல்32மூத்தபள்ளி பள்ளனுக்குச் சோறு கொண்டுவருதல்33குட்டையிற் பள்ளனைக் கண்டு மூத்தபள்ளி கூறல்34குட்டை மீட்கும்படிசெய்ய மூத்தபள்ளியைப் பள்ளன் வேண்டுதல்35பள்ளன் கால் குட்டையைக் கழற்றும்படி பண்ணைத் தலைவனை மூத்தபள்ளி பரவல்.36பள்ளன் வித்துவகை மாட்டுவகை கூறல்37நன்னாட்குறித்து நாளேரிடல்38காளைகளை ஏரிற்பூட்டல்39காளை வெருண்டது பள்ளத்துப் பாய்தல்40பள்ளிகள் புலம்பல்41பள்ளனெழுந்து வித்துழுது நாற்றுப்பாவுதல்42நாற்று நடல்43தொழி போடல், நாற்றுப்பறித்தல்44நடுகை வளப்பத்திடை பள்ளர் பள்ளியர் களிப்பு45விளைந்தபின் செப்பஞ் செய்தல்46நெல் அளத்தல்47மூத்தபள்ளி முறையீடு48பள்ளிகளிருவரும் உளம்விண்டு ஒருப்படல்49வாழ்த்தும் நூல் பயனும்
வையாபுரிப் பள்ளு · குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்

மூத்தபள்ளி முறையீடு

80கலிப்பா✓
வள்ளிமயி லான வனக்கொழுந்துக் காசைகொண்டோன்
வெள்ளிமலைவேள் சிவகிரியில் வேலர்பண்ணைப் பள்ளருக்குள்
கள்ளனிவ னென்றுபண்ணைக்காரனொடு மூத்தபள்ளி
பள்ளன்மனக் கள்ளமெல்லாம் படிப்படியாய்ச் சொல்லுவளே.
81சிந்து✓
இராகம்: சங்கராபரணம். அடதாளச்சாப்பு
குத்திரப் பள்ளன்
சித்திரங் கேளாய்கைக்
கோலுங்கை தீண்டான்
காலணை பாரான்.
எத்தனை நாலும்
புத்திசொன் னாலுங்கண்
ணேறிட்டும் பாரான்
சோறிட்டா லுண்ணான்
முத்தியை வைப்பு
வைத்துக்கொண் டானென்மேல்
மோட்டுப்பள் ளியை
வாட்டுக்கு வைத்தான்
சித்திரை மாதம்
பத்துப் பகவிற்றுச்
செட்டிக்குக் கடன்
கட்டினா னாண்டே.
82✓
வள்ளத்தைப் பனங்
கள்ளுக்கு விற்றான்
வளவைச் சுற்றுவான்
உழவையும் பாரான்
பள்ளனு மாட்டை
வெள்ளென வேவந்து
பட்டி திறந்து
விட்டிட மாட்டான்
கள்ளியி ளைய
பள்ளியின் வீட்டைக்
காக்கப் போவான்வ
யல்காக்கப் போகான்
பள்ளேச னுக்குங்
கஞ்சாரா யத்துக்கும்
பத்தெரு தையும்
வித்தான்கா ணாண்டே.