முருகன் App
வையாபுரிப் பள்ளு
குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்
நடுகை வளப்பத்திடை பள்ளர் பள்ளியர் களிப்பு44 / 49
1காப்புப்பாயிரம்2அவையடக்கம்3பள்ளிகள் வரவு4பழனிப்பள்ளி கலிப்பா5பள்ளன் வரவு6பள்ளன் தன் பெருமை கூறல்7பள்ளியர் குடித்தனங் கூறல்8பள்ளியர் நாட்டுவளங் கூறல்9குறியிற் கூக்கேட்டல்10மழைகவேண்டித் தெய்வம் பராவல்11வெறியயர்வேலன் நல்வர மளித்தல்12மழைக்குறி யோர்தல்13மழைகாலூன்றல்14வெள்ளம் வரவு15ஆற்றுச்சிறப்புக் காண்டல்16பண்ணைத் தலைவன் வரவு17மூத்தபள்ளி முறையீடு18இளையபள்ளி முறையீடு19பண்ணைத் தலைவன் இளைய பள்ளியை உரைப்பல்20பள்ளன் வெளிப்படல்21பண்ணைத் தலைவன் பண்ணைச்செயல் வினாவல்22பள்ளன் பண்ணைச்செயல் கூறல்23மாட்டுவகை24கலப்பை, மேழி, நுகம்25வயலெருவைக்க ஆயரை யழைத்தல்26ஆயர் வரவு27ஆயர் தம் பெருமை கூறல்28மூத்தபள்ளி சாடிகூறல்29பள்ளன் கிடைவைத்து வந்தான்போற் கூறல்30பள்ளனைத் தொழுவில் மாட்டல்31குட்டையிற் பள்ளனைக் கண்டுஇளையபள்ளி புலம்பல்32மூத்தபள்ளி பள்ளனுக்குச் சோறு கொண்டுவருதல்33குட்டையிற் பள்ளனைக் கண்டு மூத்தபள்ளி கூறல்34குட்டை மீட்கும்படிசெய்ய மூத்தபள்ளியைப் பள்ளன் வேண்டுதல்35பள்ளன் கால் குட்டையைக் கழற்றும்படி பண்ணைத் தலைவனை மூத்தபள்ளி பரவல்.36பள்ளன் வித்துவகை மாட்டுவகை கூறல்37நன்னாட்குறித்து நாளேரிடல்38காளைகளை ஏரிற்பூட்டல்39காளை வெருண்டது பள்ளத்துப் பாய்தல்40பள்ளிகள் புலம்பல்41பள்ளனெழுந்து வித்துழுது நாற்றுப்பாவுதல்42நாற்று நடல்43தொழி போடல், நாற்றுப்பறித்தல்44நடுகை வளப்பத்திடை பள்ளர் பள்ளியர் களிப்பு45விளைந்தபின் செப்பஞ் செய்தல்46நெல் அளத்தல்47மூத்தபள்ளி முறையீடு48பள்ளிகளிருவரும் உளம்விண்டு ஒருப்படல்49வாழ்த்தும் நூல் பயனும்
வையாபுரிப் பள்ளு · குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்

நடுகை வளப்பத்திடை பள்ளர் பள்ளியர் களிப்பு

181கலிப்பா✓
ஊற்றுக்காற் செந்தே னுலவுஞ் சிவகிரியான்
ஆற்றுக்கா லாட்டியர்கா லாடுங்காற் பண்ணைவயற்
சேற்றுக்கான் மள்ளரெல்லாந் தென்றற்கா லான்மெலிந்து
நாற்றுக்கால் விட்டு நடக்கக்கால் செல்லாதே.
182சிந்து✓
இராகம்: சௌராஷ்டிரம். மட்டயதாளம்
துள்ளும யிற்பரி வாக னன்மட
வள்ளிக்கி சைகுழ மோகனன்
துய்ய னாகிய சிவகி ரிமுரு
கய்யன்பண் ணைவயல் நடுகச்சே
பள்ளி யர்குழற் சொருக்கி லுமிரு
வள்ளலெபொ ருவிழி நெருக்கிலும்
பரும தக்கோட்டு முலையி லுங்கரு
மருவப் புருவச் சிலையிலும்
வெள்ளைய னப்பேட்டு நடையி லுமருக்
கள்ளூறுங் கதலித் தொடையிலும்
விந்தைசேர் தண்டொட்டிக் குழையி லுமுழுச்
சந்த்ரோத யமுகக் களையிலும்
தெள்ளிமை யாய்ப்பேசும் பேச்சி லுமன
துள்ளமு ருக்குங்கை வீச்சிலும்
சிந்தைத ளர்ந்துசிற் றிடையிலுமனம்
நொந்துமெ லிந்தது பள்ளீரே.
183✓
அங்கத்தைப் பூம்பாவை யாக்கி னார்கூடற்
சங்கத்திற் பிரசங்க வாக்கினார்
அரிம னமகிழ் மரும கன்சிவ
கிரிமு ருகனார் வயலிலே
பங்கத்திற் பள்ளிய ரெல்லோ ருங்கூடிச்
செங்கையி னாற்று முடியையும்
பங்கி யேயெடுத் தலைத்துக் குலைத்துச்
சங்கை யாய்ச்சம்பா நடுகச்சே
துங்கப் பெரியான் மகளுந் தன்னுடை
கொங்கையைத் திறந்து முடவே
சோலைக் குடும்ப னோடிப் போயவள்
காலைப் பிடித்துக் கும்பிட்டுப்
புங்கம்பு தைக்குள்ளே வாவென் றானவள்
இங்கித மாகவே போவென்றாள்
பொழுது போகட்டு மென்றுசொல் லிப்போட்
டுமுகப் போகிறான் பள்ளீரே.
184✓
சமண ரைக்கழு வேற்றி னார்வளர்
அமரர் சிறையை மாற்றினார்
சரம் சரமு மாகி யசிவ
கிரிமு ருகனார் வயலிலே
திமிறி மற்கட்டி விளையா டிக்கொண்டு
கமரி மானைப்போற் பள்ளியர்கள்
சிரித்துப் பேசி நடுகச் சேயுந்தச்
சரித்தி ரத்தையும் பெரியானுங்
கமனித் துக்கொண்டு பார்க்கை யிலொரு
குமரிச் சிறுக்கி மெள்ளப்போய்க்
கண்ணைக் காட்டிச் சைகை பண்ணின
விண்ணாணத் தையவ னெண்ணாந்து
நிமிசத் திற்கண்டு மனதி லேசற்றே
சமுச யமெண்ணி யவளையும்
நில்லாதே வீட்டுக்குப் போவென்று தள்ளிச்
சொல்லாமற் சொல்கிறான் பள்ளீரே.
185✓
பண்ட சுரரைக் கொன்ற வனாழி
முண்டகத் தயனை வென்றவன்
பருவெய் யோன்மதி புகழ்சி வகிரி
முருகய் யன்வயல் நடுகச்சே
வண்டக்காத் தான்பெண் டாட்டி யுமந்தச்
சண்டிப் பெரியான் மகளுமே
மல்லாரிக் கோலங் கட்டி யேபள்ளர்
எல்லாரும் பார்க்கமற் கட்டியே
ரண்டு பேர்களும் வீழ்க வேயதைக்
கண்டு மருதக் குடும்பனும்
நல்லவன் போலே யோடி யவளை
மெல்லவே தூக்கி யெடுக்கையிற்
செண்டு முலையைப் பிடிக்க வேயவள்
கொண்டை யைப்பிடித் தடிக்கவே
சேற்றில்வி ழுந்தவள் முந்தானை யையீர்த்துப்
போர்த்துக் கொள்கிறான் பள்ளீரே.
186✓
புள்ளிமான் மகளைத் திருடி னானொரு
வெள்ளிலை யுஞ்சுருள் வருடினோன்
புரவ லன்பணி மரும கன்சிவ
கிரிமு ருகனார் வயலிலே
வெள்ளை வீரியுஞ் சின்னப் பழனிப்
பள்ளி மகளுங் கூடியே
வேடிக்கை யாக்கும்மி யடித்துக் குதித்துப்
பாடிவி ளையாடுஞ் சமயத்தில்
குள்ளப் பெரியான் நிறைய மண்டியா
கள்ளு வெறியால் மயங்கியே
கூந்தல் நெகிழச் சேர்ந்து பிடிக்கப்
பூந்து கிலது நெகிழவே
துள்ளி வரப்பில் வீழ்க வேயொரு
கள்ளக் கருப்ப னோடிப்போய்த்
தூக்கி யெடுக்கிறாப் போலேய ணைத்திடும்
போக்கைப் பாரும் பள்ளீரே.
187✓
அந்திவண் ணனருள் பால னார்சிவ
சந்திர சயில வேலனார்
அரிய வேத சொரூப னார்சிவ
கிரிமு ருகனார் வயலிலே
மந்திவாய்ச் சின்ன மருதி யுமானூர்
அந்தோணி மகளுஞ் சண்டையில்
மயிர்பி டிக்கிற சமயத் திற்சம்பாப்
பயிர்முடி விளம்பி நின்றவர்
சந்தடி யிற்சந்தைக் கூட்டத் தில்நல்ல
கெந்தப்பொ டியுங்காற் பணமென்றே
சாராயங் குடித்த வெறியள் மிஞ்சியே
நீராணிக் குடும்பன் மகளையுஞ்
சொந்த மாகிய மச்சினி யாமென்று
மொந்தை மகனு மெள்ளப்போய்ச்
சொருகு கொண்டையிற் குவளைசெருகிச்
செருமு தல்பாரும் பள்ளீரே.
188✓
மெய்யர்க்கு மெய்யாகி நின்ற வரென்றும்
பொய்யர்க்குப் பொய்யாகி நின்றவர்
விமல னாகிய வளர்சி வகிரி
குமரய் யன்வயல் நடுகச்சே
ஐயன்பள் ளிச்சின்ன வீரி வீட்டுக்குப்
பையவே நழுவிப் போகையில்
அழிவுக் காரப் பழனிப் பயல்போய்
வழியை மறித்துக் கொண்டவள்
கையிலே பணயம் வாங்கிக் கோவிது
பொய்யனல் லவினி யுனக்குநா
கத்தைக் காட்டு பாம்புச் சித்தனென்
றாட்டி வைக்கிறே னீயென்றன்
மையல் தீரடி யென்று சொல்லவே
மெய்யதா மென்றவ ளதைக்கவே
மாடு போலவே விழுந்து கொண்டவன்
பாடு றான்பாரும் பள்ளீரே.
189✓
உம்பர் பரவுஞ் சீல னார்தமிழ்க்
கின்போ தயர்புகழ் கீலனார்
உரிய ரானவர்க் குரிய வர்சிவ
கிரிமு ருகனார் புறவிலே
கும்புகும் பாகவே கடைசி யரெல்லாங்
கம்பஞ்சம் பாவயல் நடுகச்சே
கூத்தக்கு டும்பனு மேற்ற பேரைப்
பார்த்துத் திரியு மளவிலே
வம்புச்ச டைச்சியு முடைச்சி யுமொரு
சம்பைப்பு தையோர மிருக்கையில்
வந்து கண்டவ ரெண்டு பேரையும்
அந்தக்கா ரியத்துக் கென்னென்றான்
அம்பலத் தில்வந் தாடாத டாவென்று
வம்புச்ச டைச்சிவண் டுறுக்கவே
அரும்பி டுங்குரு வேர்வை துலங்கத்
திரும்பு றான்பாரும் பள்ளீரே.
190✓
அன்னந டைத்தெய்வ குஞ்ச ரிமகிழ்
மன்னவர் கடம்ப மஞ்சரி
அணிசி வகிரி முருகய் யன்பதம்
பணிக விராச பூபதி
கன்னன்வி சையகி ரிச்சின் னோவய்யன்
சொன்னபள் ளேசல் தன்னையுங்
கருதிப் பாடி நடவு நட்டிடும்
பருவப் பள்ளியர் முலைதனைச்
சின்ன விளநீ ராமென் றேமந்தி
யுன்னித் தாவிப் பிடிக்கவே
செந்திக் குடும்பன் சங்கை யெடுத்து
மந்தி தன்னையு மெறியவே
தன்னந் தனியமா வின்சு னியையுஞ்
சன்னல் பின்னலா யவன்மீதில்
தானே யெறிந்து குதியும் போடுற
சம்பிரதா யம்பாரும் பள்ளீரே.
191✓
மச்சாவ தாரன் மருகன் வேள்நனிச்
செச்சை யணிந்தருள் முருகவேள்
மச்ச ரூபனாஞ் சிவகி ரிவேலன்
பச்சை மாவடி நடுகச்சே
பிச்சைக்கு டும்பன் மருதி கிட்டப்போய்
மிச்சம்மா எம்மீனைப் பிடியென்று
பிறகே நீலி மகர மீனையும்
பெருக்கை யால்மூடிக் கொண்டவன்
உச்சித்தி ருக்கை மீனோ டுமுகம்
வச்சுச்சி றுக்கை மீனையும்
உகந்து நத்தையை யுறிஞ்சி னாப்போலே
பஞ்சிலைக் கெண்டைமீ னுறிஞ்சியே
இச்செகத் திற்கள்ளி யான மீன்களை
யிதமாய்ப் பிடித்துப் பெருக்கைமீன்
இழுத்தி ராட்டிலே விரல்வைத் திடவே
குரத்தை மீனையும பிடித்தவள்
நச்சையில் லாமலே யாடப் பள்ளனும்
நண்டைவ ராலைப் பிடிக்கவே
நல்ல படிலி மீனுக் கும்பட
நகைத்துப் பள்ளி யுடனேயே
மெச்சி யாரால் மீனி ரண்டுஞ்
சொட்டை வாளையி லோடவே
வெக்காம லக்குதி ரைமீன்க டத்தையை
மேலேறிச் செய்யுறான் பள்ளீரே.
192✓
குல்லவை னத்துக் குரியவ னரன்
வில்லைமு றித்திடும் பெரியவன்
குருச டகோபன் மரும கன்சிவ
கிரிமு ருகனார் வயலிலே
மெல்லக்க டைசியர் நடுகச் சேயந்தச்
சல்லிக்க ருப்பனு நெருங்கியே
வேட்டுக் கார வீரி யைமெள்ள
மேட்டுவ யலில்நாற் றெடுக்கையில்
கல்லித் திகத்தையே முடிக்கட் டோவுன்றன்
மல்லிகைப் பூச்செண்டைப் பிடிக்கட்டோ
காமக் கமலப் பூவிலே யென்றன்
ஊமத்தம் பூவைப் பதிக்கட்டோ
செல்லப்பெண் ணேயுனை மறப்ப னோவென்று
சொல்லிச்சொல் லிக்கும்மி யடித்துமே
தெந்தி னாக்கொட்டி யவளைச் சுற்றிடும்
விந்தையைப் பாரும் பள்ளீரே.
193✓
சுவர்னத் தைக்கவி தாய கனவ
விவரண வேடப்பெண் ணாயகன்.