முருகன் App
வையாபுரிப் பள்ளு
குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்
காப்புப்பாயிரம்1 / 49
1காப்புப்பாயிரம்2அவையடக்கம்3பள்ளிகள் வரவு4பழனிப்பள்ளி கலிப்பா5பள்ளன் வரவு6பள்ளன் தன் பெருமை கூறல்7பள்ளியர் குடித்தனங் கூறல்8பள்ளியர் நாட்டுவளங் கூறல்9குறியிற் கூக்கேட்டல்10மழைகவேண்டித் தெய்வம் பராவல்11வெறியயர்வேலன் நல்வர மளித்தல்12மழைக்குறி யோர்தல்13மழைகாலூன்றல்14வெள்ளம் வரவு15ஆற்றுச்சிறப்புக் காண்டல்16பண்ணைத் தலைவன் வரவு17மூத்தபள்ளி முறையீடு18இளையபள்ளி முறையீடு19பண்ணைத் தலைவன் இளைய பள்ளியை உரைப்பல்20பள்ளன் வெளிப்படல்21பண்ணைத் தலைவன் பண்ணைச்செயல் வினாவல்22பள்ளன் பண்ணைச்செயல் கூறல்23மாட்டுவகை24கலப்பை, மேழி, நுகம்25வயலெருவைக்க ஆயரை யழைத்தல்26ஆயர் வரவு27ஆயர் தம் பெருமை கூறல்28மூத்தபள்ளி சாடிகூறல்29பள்ளன் கிடைவைத்து வந்தான்போற் கூறல்30பள்ளனைத் தொழுவில் மாட்டல்31குட்டையிற் பள்ளனைக் கண்டுஇளையபள்ளி புலம்பல்32மூத்தபள்ளி பள்ளனுக்குச் சோறு கொண்டுவருதல்33குட்டையிற் பள்ளனைக் கண்டு மூத்தபள்ளி கூறல்34குட்டை மீட்கும்படிசெய்ய மூத்தபள்ளியைப் பள்ளன் வேண்டுதல்35பள்ளன் கால் குட்டையைக் கழற்றும்படி பண்ணைத் தலைவனை மூத்தபள்ளி பரவல்.36பள்ளன் வித்துவகை மாட்டுவகை கூறல்37நன்னாட்குறித்து நாளேரிடல்38காளைகளை ஏரிற்பூட்டல்39காளை வெருண்டது பள்ளத்துப் பாய்தல்40பள்ளிகள் புலம்பல்41பள்ளனெழுந்து வித்துழுது நாற்றுப்பாவுதல்42நாற்று நடல்43தொழி போடல், நாற்றுப்பறித்தல்44நடுகை வளப்பத்திடை பள்ளர் பள்ளியர் களிப்பு45விளைந்தபின் செப்பஞ் செய்தல்46நெல் அளத்தல்47மூத்தபள்ளி முறையீடு48பள்ளிகளிருவரும் உளம்விண்டு ஒருப்படல்49வாழ்த்தும் நூல் பயனும்
வையாபுரிப் பள்ளு · குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்

காப்புப்பாயிரம்

1விநாயகர் துதி✓
கலிப்பா
பூமேவு வேலணிந்த பொற்கமலக் கையசைய
மாமேவு தென்பழனி வள்ளல்மகிழ் பள்ளிசைக்கே
நாமேவு சொற்புலவோர் நாவினுக்கு மெட்டாத
காமேவு பாதிரைவாழ் கணபதிதாள் காப்பாமே.
2கைலாச நாதர் துதி✓
சிந்து
சீர்கொண் டருள் சிவனவ ரூபன்
தீரன் ரண சூரப்ர தாபன்
திகழ்மணி நீபத்
தொடையணி வேலன்
சிறுதுண்டைக் காலன்
பார்கொண் டாடு முருகையன் மீதில்
பைந்தமி ழால டியேனிப் போது
பத்தன் மனோ
ரதம்நிறை வேறப்
பள்ளேசல் கூற
ஏர்கொண் டருள் திருமகள் மலைமகள்
இயல்கொண் டருள் நிலமகள் கலைமகள்
இணையடி தன்னை
மனதினி லணிவேன்
என்றைக்கும் பணிவேன்
தார்கொண் டருள் பணிகுழைக் காதனைத்
தமிழ்பா டிய கயிலாச நாதனைச்
சந்தத மும்மே
மகிழ்வொடு விள்வேன்
தலைமிசைக் கொள்வேனே.
3பெரிய நாயகியம்மை துதி✓
சிந்து
கவளமத யானைக்கு மிளையோன்
கருணாகரன் மூவர்க்கும் பழையோன்
கானக் கலை
மனமகிழ் மோகன்
கனிமொழி பாகன்
பவளநிறச் செஞ்சோதி மெய்யன்
பழனிச்சிவ கிரிமுரு கையன்
பள்ளே சலை
விரவியே பாடப்
பலன்மெத்தத் தேட
உவமானமி லாதசு சீலன்
ஒளளவி சையகோ பாலன்
உடன்பிறந் தவள்
நீலிகல் யாணி
ஒளிர்நிரு வாணி
சிவசாம்ப் விபழனித் துரைமகள்
திறமுலவு பெரியவள் வரைமகள்
சீர்பாதந் தனைப்
போற்றியே யடியேன்
தினஞ்சற்றுஞ் சடியேனே.
4மருதகாளியம்மை துதி✓
சிந்து
விதிமுதலா முனிவோர்தொழு பாதன்
விசையகிரி வாக்குப்ர சாதன்—விகடதட
குக்குடத் துவசன்
விபுதர்மெய்க் கவசன்
ததியையுக ரரிதிரு மருகன்
சங்க்ராம சிவாசல முருகன்—தயவுகூர்பள்
ளேசலைப் பாடத்
தரணிகொண் டாடத்
திதிபெறவான் மீகவி யாசனைச்
சிங்கார முத்தையவுல் லாசனைத்—தினமும் போற்றியென்
மனுவையுஞ் சொல்வேன்
செருநரை வெல்வேன்
அதிகவற்கு வரத்தையுங் கொடுத்தே
அடியேனையிப் புவிமிசைத் தடுத்தே - ஆட்கொள்மருத
காளியைப் புகழ்வேன்
அதர்மத்தை யிகழ்வேனே.
5சின்னோவள், பெரியோவள், எர்ரக்கம்மன் துதி✓
சிந்து
திசைகொண்ட பராபர நாதன்
சிகிவாகன நடநவி னாதன்—சிவனுக்குப
தேசமும் பகர்வோன்
தினைமாவை நுகர்வோன்
பசைகொண்டவில் வேடர்க்குத் தமரன்
பழனிச்சிவ கிரியில்வாழ் குமரன் - பள்ளேசலைத்
தமிழினா லோதப்
பரிசக லாத
இசைகொண்ட குமாரச்சின் னோவய்யன்
இயல்கொண்டரு ளபரஞ்சி பூபன்—இணையடிதனை
……… ………
தலைமிசைக் கொண்டேன்
நசைகொண்டருள் பெரியோவ ளம்மனும்
நலன்கொண்டருள் சின்னோவ ளம்மனு—நயமுயர் எர்ரக்
கம்மனைத் துதிப்பேன்
நயம்பெறக் கதிப்பேனே.