முருகன் App
வையாபுரிப் பள்ளு
குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்
பள்ளன் கால் குட்டையைக் கழற்றும்படி பண்ணைத் தலைவனை மூத்தபள்ளி பரவல்.35 / 49
1காப்புப்பாயிரம்2அவையடக்கம்3பள்ளிகள் வரவு4பழனிப்பள்ளி கலிப்பா5பள்ளன் வரவு6பள்ளன் தன் பெருமை கூறல்7பள்ளியர் குடித்தனங் கூறல்8பள்ளியர் நாட்டுவளங் கூறல்9குறியிற் கூக்கேட்டல்10மழைகவேண்டித் தெய்வம் பராவல்11வெறியயர்வேலன் நல்வர மளித்தல்12மழைக்குறி யோர்தல்13மழைகாலூன்றல்14வெள்ளம் வரவு15ஆற்றுச்சிறப்புக் காண்டல்16பண்ணைத் தலைவன் வரவு17மூத்தபள்ளி முறையீடு18இளையபள்ளி முறையீடு19பண்ணைத் தலைவன் இளைய பள்ளியை உரைப்பல்20பள்ளன் வெளிப்படல்21பண்ணைத் தலைவன் பண்ணைச்செயல் வினாவல்22பள்ளன் பண்ணைச்செயல் கூறல்23மாட்டுவகை24கலப்பை, மேழி, நுகம்25வயலெருவைக்க ஆயரை யழைத்தல்26ஆயர் வரவு27ஆயர் தம் பெருமை கூறல்28மூத்தபள்ளி சாடிகூறல்29பள்ளன் கிடைவைத்து வந்தான்போற் கூறல்30பள்ளனைத் தொழுவில் மாட்டல்31குட்டையிற் பள்ளனைக் கண்டுஇளையபள்ளி புலம்பல்32மூத்தபள்ளி பள்ளனுக்குச் சோறு கொண்டுவருதல்33குட்டையிற் பள்ளனைக் கண்டு மூத்தபள்ளி கூறல்34குட்டை மீட்கும்படிசெய்ய மூத்தபள்ளியைப் பள்ளன் வேண்டுதல்35பள்ளன் கால் குட்டையைக் கழற்றும்படி பண்ணைத் தலைவனை மூத்தபள்ளி பரவல்.36பள்ளன் வித்துவகை மாட்டுவகை கூறல்37நன்னாட்குறித்து நாளேரிடல்38காளைகளை ஏரிற்பூட்டல்39காளை வெருண்டது பள்ளத்துப் பாய்தல்40பள்ளிகள் புலம்பல்41பள்ளனெழுந்து வித்துழுது நாற்றுப்பாவுதல்42நாற்று நடல்43தொழி போடல், நாற்றுப்பறித்தல்44நடுகை வளப்பத்திடை பள்ளர் பள்ளியர் களிப்பு45விளைந்தபின் செப்பஞ் செய்தல்46நெல் அளத்தல்47மூத்தபள்ளி முறையீடு48பள்ளிகளிருவரும் உளம்விண்டு ஒருப்படல்49வாழ்த்தும் நூல் பயனும்
வையாபுரிப் பள்ளு · குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்

பள்ளன் கால் குட்டையைக் கழற்றும்படி பண்ணைத் தலைவனை மூத்தபள்ளி பரவல்.

140கலிப்பா✓
செஞ்சிலைவேள் போற்றுஞ் சிவகிரிவே லவரறியக்
கெஞ்சினபள் ளனைப்பார்த்துக் கெலிப்பாக மூத்தபள்ளி
அஞ்சலென்றே யுன்சிறையை யான் தவிர்ப்பே னென்றுசொல்லிக்
கஞ்சமுகனானபண்ணைக்காரன்முன்பு சொல்வாளே.
141சிந்து✓
இராகம்: புன்னாகவராளி. சாப்புதாளம்
ஐயாவொ ருவிண்ணப் பஞ்சொலக்
கேளுங்கா ணாண்டே—நானும்
அறியாத புத்தியிற் பரியாசம்
போற்சொன்னே னாண்டே
கையாரக் கண்டக ளவும்பொ
றுப்பீர்கா ணாண்டே—பள்ளன்
கஞ்சிக்கு டிக்கமாட் டாமற்கி
டக்கிறா னாண்டே.
142✓
தேடியி ரும்பிள்ளை யல்லவோ
பள்ளன்கா ணாண்டே—இனித்
தேவரீர் சித்தமென் பாக்கியம்
யோக்யன்கா ணாண்டே
ஆடிகா லாவதி கோடைநா
ளாச்சுகா ணாண்டே—பள்ளன்
அல்லாமற் பயிரிடு வாருண்டோ
சொல்லுங்கா ணாண்டே.
143✓
தன்வீட்டு விளக்கென்று முத்தமிட்
டேன்கா ணாண்டே—அது
தான்சுடு மென்றத கைமைய
றியேன்கா ணாண்டே
என்வீட்டுப் பிழைப்புக்கி டக்கேடு
செய்தேன்கா ணாண்டே—மெத்த
எத்தனை யானாலும் பெண்புத்தி
பின்புத்தி யாண்டே.
144✓
சத்யமாய்ப் பள்ளன்மே லொருதோச
மில்லைகா ணாண்டே—நானுஞ்
சாராய வெறியிலே தப்பிதஞ்
சொன்னேன்கா ணாண்டே
பத்தும்பத் தும்விசா ரியாமற்
சொன்னேன்கா ணாண்டே—பள்ளன்
பழனிப்பள் ளிவீடு—போறதாற்
சொன்னேன்கா ணாண்டே.
145✓
ஊர்க்குரு விமேல்ரா மபாணந்
தொடுப்பாரோ வாண்டே—எங்கட்
கும்மையல் லாமல்வே றேகதி
யுண்டோசொல் லாண்டே
ஆர்க்கிதஞ் சொல்லிவி டுவிக்கப்
போறேன்கா ணாண்டே—பள்ளன்
அறிந்தறி யாமற்செய் குற்றம்பொ
றுப்பீர்கா ணாண்டே.
146✓
மார்புவி ழுந்தால்வ யிறல்லோ
தாங்குங்கா ணாண்டே—உங்கள்
மனதறிந் துநாங்கள் நடக்கமு
டியுமோ வாண்டே
தாபந்தப் படுகிற பள்ளனை
விடச்சொல்வா யாண்டே—பள்ளன்
தானோடிப் போனாலும் நானும்பி
ணையல்லோ வாண்டே.