முருகன் App
வையாபுரிப் பள்ளு
குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்
மழைகவேண்டித் தெய்வம் பராவல்10 / 49
1காப்புப்பாயிரம்2அவையடக்கம்3பள்ளிகள் வரவு4பழனிப்பள்ளி கலிப்பா5பள்ளன் வரவு6பள்ளன் தன் பெருமை கூறல்7பள்ளியர் குடித்தனங் கூறல்8பள்ளியர் நாட்டுவளங் கூறல்9குறியிற் கூக்கேட்டல்10மழைகவேண்டித் தெய்வம் பராவல்11வெறியயர்வேலன் நல்வர மளித்தல்12மழைக்குறி யோர்தல்13மழைகாலூன்றல்14வெள்ளம் வரவு15ஆற்றுச்சிறப்புக் காண்டல்16பண்ணைத் தலைவன் வரவு17மூத்தபள்ளி முறையீடு18இளையபள்ளி முறையீடு19பண்ணைத் தலைவன் இளைய பள்ளியை உரைப்பல்20பள்ளன் வெளிப்படல்21பண்ணைத் தலைவன் பண்ணைச்செயல் வினாவல்22பள்ளன் பண்ணைச்செயல் கூறல்23மாட்டுவகை24கலப்பை, மேழி, நுகம்25வயலெருவைக்க ஆயரை யழைத்தல்26ஆயர் வரவு27ஆயர் தம் பெருமை கூறல்28மூத்தபள்ளி சாடிகூறல்29பள்ளன் கிடைவைத்து வந்தான்போற் கூறல்30பள்ளனைத் தொழுவில் மாட்டல்31குட்டையிற் பள்ளனைக் கண்டுஇளையபள்ளி புலம்பல்32மூத்தபள்ளி பள்ளனுக்குச் சோறு கொண்டுவருதல்33குட்டையிற் பள்ளனைக் கண்டு மூத்தபள்ளி கூறல்34குட்டை மீட்கும்படிசெய்ய மூத்தபள்ளியைப் பள்ளன் வேண்டுதல்35பள்ளன் கால் குட்டையைக் கழற்றும்படி பண்ணைத் தலைவனை மூத்தபள்ளி பரவல்.36பள்ளன் வித்துவகை மாட்டுவகை கூறல்37நன்னாட்குறித்து நாளேரிடல்38காளைகளை ஏரிற்பூட்டல்39காளை வெருண்டது பள்ளத்துப் பாய்தல்40பள்ளிகள் புலம்பல்41பள்ளனெழுந்து வித்துழுது நாற்றுப்பாவுதல்42நாற்று நடல்43தொழி போடல், நாற்றுப்பறித்தல்44நடுகை வளப்பத்திடை பள்ளர் பள்ளியர் களிப்பு45விளைந்தபின் செப்பஞ் செய்தல்46நெல் அளத்தல்47மூத்தபள்ளி முறையீடு48பள்ளிகளிருவரும் உளம்விண்டு ஒருப்படல்49வாழ்த்தும் நூல் பயனும்
வையாபுரிப் பள்ளு · குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்

மழைகவேண்டித் தெய்வம் பராவல்

33கலிப்பா✓
கூடிக் கலகமிட்ட கொள்ளையிட்ட சூரனையும்
பூடிற்றுப் போகப் பொருதமுரு கையனையும்
பாடினார் பொங்கலிட்டுப் பள்ளரெலாங் கூட்டமிட்டுத்
தேடிக் குரவையிட்டுத் தெய்வநிலை போற்றுவரே.
34சிந்து✓
இராகம்: நாதநாமக்கிரியை. ஆதி தாளம்
பாடியசி வகிரிமு
ருகனார்பண்ணை—வயல்
பள்ளரெல்லோ ருங்கூடி
வெள்ளிதனிலே
ஆடுவெட்டிப் பொங்கலிட்டுச்
சாடுநிறைய—இரண்
டாயிரம்ப ழங்கள்வைத்துக்
கோயிலின்முன்பு
வேடிக்கையாய்ச் சாம்பிராணித்
தூபங்கள்போட்டுப்—பயிர்
விளையவே நல்லநல்ல
மழைபெய்யவே
கூடிநின்ற கொள்ளுக்கஞ்சித்
தெய்வங்களெலாம்—வந்து
கும்பிட்டுப் போற்றுங்கடா
கம்பளத்தாரே.
35✓
வாழ்த்துங்கோ மீன்பாரைக்
கன்னிமாருக்குப்—பச்சைப்
பாளைபரப் பும்பால்
நாழிவையுங்கோ
காத்தவ ராயனைப்
போற்றிக்கொள்ளுங்கோ—நம்மள்
கன்னடிய மூர்த்தியை
முன்னேதொழுங்கோ
தீர்த்தப்பிர சன்னரான
ரெங்கசாமியை—நீங்கள்
தேடியே தெண்டனிட்டுப்
பாடியாடுங்கோ
தோத்திரஞ்செய் துதாடகை
நாச்சியாருக்கு—நல்ல
தொண்ணூற்றஞ் சுருவாரம்
பண்ணிவிடுங்கோ.
36✓
குன்னுவப்பி டாரியம்மன்
தன்னைக் கும்பிட்டே—யொரு
குட்டிவெட்டிப் பொங்கலிட்டு
முட்டை வையுங்கோ
மன்னுலகில் வாழ்மருத
காளித்தாயார்க்கு—நீங்கள்
வழக்கிட்டுக் கொள்ளாமம்மா
விளக்குப்பாருங்கோ
கண்ணான வம்மாபட்டிக்
கருப்பனுக்கே—யொரு
காங்குகச்சசை கையரிவாள்
வாங்கிவையுங்கோ
பண்ணிக்குத்தி யணையேத்தஞ்
செய்தவிடத்தில்—நீங்கள்
பத்தியுடன் சாராயக்
குத்திவையுங்கோ.
37இதுவுமது✓
இராகம்: சங்கராபரணம். அடதாளச்சாப்பு
நாடெங்கும் வாழ்ந்திடவே—வையாபுரி
நாடுசெ ழித்தோங்கப்
பூடெங்கு மாதமும்
மாரிபொ ழியவே
பூம்பாரை வேலவற்கு.
இளநீர் முப்பழத்தால்—நயிந்தே
இன்றைக்கு நன்றாக
வளமாகத் தானேய
பிசேக மும்பண்ணி
வைக்கிறோ மெண்ணையளே.
கார்சேரு வையன்துறைத்—தலைக்குத்துக்
கன்னிமார்க் குத்தானே
வார்சேருங் காதோலை
கரியம ணிவளை
வைக்கிறோ மெண்ணையளே.
பாங்கான பேழைக்கன்னி—மாருக்குப்
பச்சைப்பா ளைகரும்பு
வாங்கியி துவெல்லாம்
வெள்ளிக்கி ழமைக்கு
வைக்கிறோ மெண்ணையளே.
கணபூத நாச்சிமார்க்கு—மங்கேவாழுங்
கருப்பண ராயனுக்கும்
வங்கியரொட் டிசாரா
யங்கரு வாடுடன்
வைக்கிறோ மெண்ணையளே.
பேரணைக் கருப்பனுக்கு—நயிந்தே
பேசாம லாடுவெட்டி
வருந்திப்பொங் கலிட்டுக்
கள்ளுஞ்சூள் ளுஞ்சோறும்
வைக்கிறோ மெண்ணையளே.
சின்னணைக் கன்னிமார்க்குக்—கருப்புத்
தெய்வத்துக் காடுவெட்டிப்
பொன்பபேழை வைத்துப்பொங்
கலிட்டு முப்பூசை
போடுறோ மெண்ணையளே.
கம்மல பட்டத்தாணி—யணையடிக்
கருப்பனுக் குத்தானே
செம்மைபெ றக்குட்டி
வெட்டிப்பொங் கலிட்டுச்
செய்யுறோ மெண்ணையளே.
ஆலடிக் கருப்பனுக்கு—நயிந்தே
ஆடுவெட் டிப்பொங்கலிட்
டேலவே சாராயங்
கஞ்சாரொட் டியும்வைத்
திடுகிறோ மெண்ணையளே.
பூமிக்கன் னிமாருக்குப்—பச்சை
போடுறோ மென்றுசொல்லித்
தாமசஞ் செய்தல்ல
வோமழை தன்னைத்த
டுத்துக்கொண் டிருக்குதுபார்.
பவளக்கொ டியம்மன்—மனதாரப்
பருங்கடா வெட்டியிப்போ
சவரணை யாகவே
அந்தம்மன் கேட்டதைத்
தான்படை யுநயிந்தே.
விளாங்கோம்பைப் பெருமாளையும்—நயிந்தே
வேண்டியே கைதொழுது
பழம்பாக்கு வைத்துக்கும்
பிட்டுநை வேத்தியம்
பண்ணுறோ மெண்ணையளே.
களைமிகுந் தருள்பொழிதா—மரைப்பாடிக்
கன்னிமார்க் குத்தானே
இளநீர்பச் சைப்பாளை
காதோலை சிற்றாடை
சாத்திட்டோ மெண்ணையளே.
ஓடிக்காட்டுக் கன்னிமார்க்கு—மழையும்
உடனேயி றங்கவேதான்
வெடிப்பாகத் தெற்காகப்
பூசையும் போட்டுவி
முந்துகும் பிடுங்கலடா.
போதலைக் கூட்டாற்றுக்—கருப்பணன்
புந்திகு ளிர்ந்திடவே
கோதிலாக் குட்டிவெட்
டிச்சாரார யம்ரொட்டி
கும்பிட்டு வையுங்கடா.
பாம்புவ ரைக்கன்னிக்கு—நயிந்தே
பட்டுச்சிற் றாடைவைத்துச்
சாம்பிராணி யுமிட்டுக்
கைக்கட்டுப் பவளமுஞ்
சாத்துறோ மெண்ணையளே.
வலங்கையப் பன்தனக்கும்—இரட்டை
மருப்பிளாக் குட்டிவெட்டித்
துலங்கப்பொங் கலிட்டுக்
கள்ளுஞ்சூள் ளுஞ்சோறும்
சுத்தியே வையுங்கடா.
அந்தப்ப டிக்குப்பள்ளர்—கும்பிட்டே
அங்கேகு ரவையிட்டுச்
சிந்தைம கிழ்ந்துக
ளியாட்ட மாடிச்
சிறந்திடும் வேளையிலே.