முருகன் App
வையாபுரிப் பள்ளு
குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்
பள்ளன் தன் பெருமை கூறல்6 / 49
1காப்புப்பாயிரம்2அவையடக்கம்3பள்ளிகள் வரவு4பழனிப்பள்ளி கலிப்பா5பள்ளன் வரவு6பள்ளன் தன் பெருமை கூறல்7பள்ளியர் குடித்தனங் கூறல்8பள்ளியர் நாட்டுவளங் கூறல்9குறியிற் கூக்கேட்டல்10மழைகவேண்டித் தெய்வம் பராவல்11வெறியயர்வேலன் நல்வர மளித்தல்12மழைக்குறி யோர்தல்13மழைகாலூன்றல்14வெள்ளம் வரவு15ஆற்றுச்சிறப்புக் காண்டல்16பண்ணைத் தலைவன் வரவு17மூத்தபள்ளி முறையீடு18இளையபள்ளி முறையீடு19பண்ணைத் தலைவன் இளைய பள்ளியை உரைப்பல்20பள்ளன் வெளிப்படல்21பண்ணைத் தலைவன் பண்ணைச்செயல் வினாவல்22பள்ளன் பண்ணைச்செயல் கூறல்23மாட்டுவகை24கலப்பை, மேழி, நுகம்25வயலெருவைக்க ஆயரை யழைத்தல்26ஆயர் வரவு27ஆயர் தம் பெருமை கூறல்28மூத்தபள்ளி சாடிகூறல்29பள்ளன் கிடைவைத்து வந்தான்போற் கூறல்30பள்ளனைத் தொழுவில் மாட்டல்31குட்டையிற் பள்ளனைக் கண்டுஇளையபள்ளி புலம்பல்32மூத்தபள்ளி பள்ளனுக்குச் சோறு கொண்டுவருதல்33குட்டையிற் பள்ளனைக் கண்டு மூத்தபள்ளி கூறல்34குட்டை மீட்கும்படிசெய்ய மூத்தபள்ளியைப் பள்ளன் வேண்டுதல்35பள்ளன் கால் குட்டையைக் கழற்றும்படி பண்ணைத் தலைவனை மூத்தபள்ளி பரவல்.36பள்ளன் வித்துவகை மாட்டுவகை கூறல்37நன்னாட்குறித்து நாளேரிடல்38காளைகளை ஏரிற்பூட்டல்39காளை வெருண்டது பள்ளத்துப் பாய்தல்40பள்ளிகள் புலம்பல்41பள்ளனெழுந்து வித்துழுது நாற்றுப்பாவுதல்42நாற்று நடல்43தொழி போடல், நாற்றுப்பறித்தல்44நடுகை வளப்பத்திடை பள்ளர் பள்ளியர் களிப்பு45விளைந்தபின் செப்பஞ் செய்தல்46நெல் அளத்தல்47மூத்தபள்ளி முறையீடு48பள்ளிகளிருவரும் உளம்விண்டு ஒருப்படல்49வாழ்த்தும் நூல் பயனும்
வையாபுரிப் பள்ளு · குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்

பள்ளன் தன் பெருமை கூறல்

13கலிப்பா✓
நீர்க்குடும்பன் கோட்டுமதி நிகர்பன்றிக் கோட்டினைக்கு
மேர்க்குடும்பன் கனகசபை யெம்பிரா னுந்தருவோன்
பார்க்குடும்ப னார்கிருபைப் பங்கயஞ்செய் யுங்குமரன்
பேர்க்குடும்பன் தன்னுடைய பிரதாபஞ் சொல்லுவனே.
14சிந்து✓
இராகம்: குறிஞ்சி. அடதாளச்சாப்பு
முத்துக் கீடாய்ப் புவியில்நெல்
வித்தைப்பொலி யுண்டுசெய்து
முறையாயறாச் செங்கோலுக்கு
மூன்றுசெங்கோலாய்
வித்தாரமு முக்கோல்தாங்கி
நித்திலமு டிக்கிணையாய்
மேதினியிற் செந்நெல்முடி
வேண்டிப்படைத்தோன்
சித்திரஞ்சேர்ந் தருள்பல
பத்திரனுக் காசிதந்த
தேவேந்திரப் பள்ளனுநான்
செங்கழுநீர்சேர்
கொத்துலவு மார்பனாகி
எத்தலம்போற் றும்பழனிக்
குமரற்க டிமையான
குடும்பனானே.
15✓
சத்திசேர்சி வகிரியைச்
சுற்றிவலஞ் செய்யார்காலைத்
தானேயோர்க் காலிற்பூட்டித்
தன் கொடிக்காலில்
மொத்துண்டுவி ழப்போடுவேன்
பத்தியாய்ச்ச லாட்சரத்தை
முழுதுமறி யாதார்க்குக்
கொழுப்பாய்ச்சுவேன்
எத்தனைசெ யல்பெற்றாலும்
முத்துக்கும் ரேசனைக்கும்
ஏழிக்கையாய்ப் போற்றார்கையை
மேழிக்கைசெய்வேன்
வத்திரங்க ளோராறும்ப்
டைத்தமுரு கையன்பண்ணை
வையாபுரிக் குடும்பனு
நானேயாண்டே.