முருகன் App
வையாபுரிப் பள்ளு
குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்
விளைந்தபின் செப்பஞ் செய்தல்45 / 49
1காப்புப்பாயிரம்2அவையடக்கம்3பள்ளிகள் வரவு4பழனிப்பள்ளி கலிப்பா5பள்ளன் வரவு6பள்ளன் தன் பெருமை கூறல்7பள்ளியர் குடித்தனங் கூறல்8பள்ளியர் நாட்டுவளங் கூறல்9குறியிற் கூக்கேட்டல்10மழைகவேண்டித் தெய்வம் பராவல்11வெறியயர்வேலன் நல்வர மளித்தல்12மழைக்குறி யோர்தல்13மழைகாலூன்றல்14வெள்ளம் வரவு15ஆற்றுச்சிறப்புக் காண்டல்16பண்ணைத் தலைவன் வரவு17மூத்தபள்ளி முறையீடு18இளையபள்ளி முறையீடு19பண்ணைத் தலைவன் இளைய பள்ளியை உரைப்பல்20பள்ளன் வெளிப்படல்21பண்ணைத் தலைவன் பண்ணைச்செயல் வினாவல்22பள்ளன் பண்ணைச்செயல் கூறல்23மாட்டுவகை24கலப்பை, மேழி, நுகம்25வயலெருவைக்க ஆயரை யழைத்தல்26ஆயர் வரவு27ஆயர் தம் பெருமை கூறல்28மூத்தபள்ளி சாடிகூறல்29பள்ளன் கிடைவைத்து வந்தான்போற் கூறல்30பள்ளனைத் தொழுவில் மாட்டல்31குட்டையிற் பள்ளனைக் கண்டுஇளையபள்ளி புலம்பல்32மூத்தபள்ளி பள்ளனுக்குச் சோறு கொண்டுவருதல்33குட்டையிற் பள்ளனைக் கண்டு மூத்தபள்ளி கூறல்34குட்டை மீட்கும்படிசெய்ய மூத்தபள்ளியைப் பள்ளன் வேண்டுதல்35பள்ளன் கால் குட்டையைக் கழற்றும்படி பண்ணைத் தலைவனை மூத்தபள்ளி பரவல்.36பள்ளன் வித்துவகை மாட்டுவகை கூறல்37நன்னாட்குறித்து நாளேரிடல்38காளைகளை ஏரிற்பூட்டல்39காளை வெருண்டது பள்ளத்துப் பாய்தல்40பள்ளிகள் புலம்பல்41பள்ளனெழுந்து வித்துழுது நாற்றுப்பாவுதல்42நாற்று நடல்43தொழி போடல், நாற்றுப்பறித்தல்44நடுகை வளப்பத்திடை பள்ளர் பள்ளியர் களிப்பு45விளைந்தபின் செப்பஞ் செய்தல்46நெல் அளத்தல்47மூத்தபள்ளி முறையீடு48பள்ளிகளிருவரும் உளம்விண்டு ஒருப்படல்49வாழ்த்தும் நூல் பயனும்
வையாபுரிப் பள்ளு · குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்

விளைந்தபின் செப்பஞ் செய்தல்

194கலிப்பா✓
தயிரருந்தி மருதமரந் தானடர்த்து வெண்ணையுண்டு
கயிறதனா லாச்சிகையிற் கட்டுண்டான் மகிழ்முருகன்
செயிரிறுத்துச் செல்வமருள் சிவகிரியான் பண்ணைவயற்
பயிர்களெல்லாம் வேரூன்றிப் பசியநிற மாகினவே.
பல்லவி✓
சிந்து
இராகம்: சௌராஷ்டிரம். ரூபக தாளம்
நட்டந டவெல்லாம் பசுப்பேறிப் பயிர்தேறி
விட்டுணு வெனவளர்ந் தோங்கியே
195அனுபல்லவி✓
முட்டக்கி ளைகிளைத்துத்
திட்டமாய்ப் பாம்பின்சுலங்—கொண்டது(நட்டந)
196சரணங்கள்✓
கட்டவழ வேபுடையா
மட்டியா கியகல்லார்—போலவே
முட்டியேத லைநிமிர்ந்து. (அ)
மெத்தவும்பாற் கோதிநன்றாய்
முத்துப்போல வேகாய்த்து
வித்தைசேர்கல் விமரத்தை—போலே
விளைந்துத லைவளைந்து. (ஆ)
சித்திரமாகிய குலமாதர்கள்
புத்திபோற்ற லகவிழ்ந்து
சத்தியலோகத் துக்கிறைவன்—போலும்
மத்தனாரீ சன்போலும். (இ)
விளைந்தவுடன் பள்ளரெல்லா(ரு)ம்
முழங்கிக் களிப்பேறி
வளைந்துமல் லாண்டப்ப—னுக்கு
இளந்தை யாடுவெட்டி. (ஈ)
பொங்கலிட்டுநாட் கதிருங் கொய்துமே
துங்கனாகி யசிவகிரிப்
புங்கவன் முன்பதாய்க்—குடும்பன்
சங்கதியா கத்தானே. (உ)
அலுகுதிர்க் கோட்டைவைத்து
இலக வெகுவரிசை
தலைமேற் கொண்டுவயல்—சென்றவன்
தொலையாக் கதிர்கொய்தே (ஊ)
அரிபரப்பிக் கதிர்களெல்லாம்
பரிமுறுக் கிக்கட்டி
விரைந்தெடுத் துக்களத்திற்—சேர்த்து
சரிந்தபோ ருங்குவித்து. (எ)
தலையுதிரி நெல்லடித்து
மலைபோல வேகுவித்து
நிலையாகி யவிரையை—கட்டிச்
செலவாகா மலேவைத்து. (ஏ)
சீரைப்பெறு மூன்றாநாளிற்
போரைச் சரித் திட்டுமே
மேருப்பொருப் புப்போற்கட்டை—யெல்லாம்
சேரத்தாம் புமினுக்கி. (ஐ)
சூடடித்த நெல்லையெல்லாஞ்
சாடில்வா ரித்தூற்றிப்
பாடிப்பொ லியளந்து—நெல்லுங்
கோடிசல கைகுவித்தார். (நட்டநட) ஓ